அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
ஸ்டாலினுடன் வைகோ சந்திப்பு :
கூட்டணி சேர, 1 மணி நேரம் பேச்சு

சென்னை:கூட்டணி குறித்து, தி.மு.க., வாய் திறக்க மறுத்துள்ள நிலையில், சென்னையில், நேற்று அக்கட்சித் தலைவர், ஸ்டாலினை, ம.தி.மு.க., பொதுச்செயலர், வைகோ சந்தித்து, ஒரு மணி நேரம் பேசினார்.

 ஸ்டாலின்,வைகோ, சந்திப்பு,கூட்டணி,பேச்சு

கருணாநிதி மறைவிற்கு பின், 'ஸ்டாலினை, முதல்வராக்கியே தீருவேன்' என, வைகோ சபதம் செய்தார். ஈரோட்டில் நடந்த, ம.தி.மு.க., மாநாட்டில், தி.மு.க., பொருளாளர், துரைமுருகன் பங்கேற்றார்.வரும் லோக்சபா தேர்தலில், தி.மு.க., கூட்டணியில், விருதுநகர், ஈரோடு, காஞ்சிபுரம் ஆகிய தொகுதிகளில் போட்டியிட, ம.தி.மு.க., விரும்புகிறது.ஆனால், தி.மு.க., தரப்பில், தொகுதி பங்கீடு தொடர்பாக, எந்த உறுதியும் அளிக்கவில்லை.

இந்நிலையில், தனியார், 'டிவி'க்கு, துரைமுருகன் அளித்த பேட்டியில், 'தி.மு.க., கூட்டணியில், காங்கிரஸ், முஸ்லிம் லீக் கட்சிகள் மட்டுமே உள்ளன; ம.தி.மு.க.,

விடுதலை சிறுத்தை கட்சிகள், நட்பு கட்சிகளாக உள்ளன; கூட்டணி என்பது வேறு, நட்பு என்பது வேறு' என, தெரிவித்தார்.அவரின் கருத்தால், அதிர்ச்சி அடைந்த வைகோ, 'தி.மு.க., கூட்டணி யில்,ம.தி.மு.க., இருக்கிறதா, இல்லையா என்பதை, ஸ்டாலின் தெளிவுபடுத்தவேண்டும்; துரைமுருகன் கருத்து, என் மனதை புண்படுத்தி விட்டது' என்றார்.

ஆனால், அதுபற்றிய எந்த விளக்கத்தையும் தர, ஸ்டாலின் முன்வரவில்லை. தி.மு.க., தரப்பில் கூட, எந்த அறிக்கையும் வெளியாகவில்லை. அதனால், அதிருப்தி அடைந்த வைகோ, டிச., 3ல், ம.தி.மு.க., நடத்தும் போராட்டத்துக்கு ஆதரவு கேட்டு, தி.மு.க.,வுக்குகடிதம் எழுதினார்.அதை ஏற்று, தி.மு.க., ஆதரவு அளிக்க முன்வந்துள்ளது. இதற்கு, நன்றி சொல்லும் விதமாக, சென்னையில், நேற்று ஸ்டாலினை சந்தித்து, வைகோ, ஒரு மணி நேரம் பேசினார்.


தி.மு.க., பொருளாளர், துரைமுருகன், முதன்மை செயலர், டி.ஆர்.பாலு, முன்னாள் அமைச்சர்கள், ஐ.பெரியசாமி, பொன்முடி ஆகியோர் உடன் இருந்தனர்.இந்த சந்திப்புக்கு பின்னரும், தி.மு.க., தரப்பில், ம.தி.மு.க.,வுடனான கூட்டணி பற்றி, எந்த உறுதியான தகவலும் வெளியிடப்படவில்லை.

மாறாக, வைகோ அளித்த பேட்டியில் கூறியதாவது: நாங்கள் நடத்தும் போராட்டத்துக்கு, தி.மு.க.,முழு

Advertisement

ஆதரவு அளிக்கும் என,ஸ்டாலின் அறிவித்து உள்ளதே, கூட்டணிக்கான விளக்கம் தான். தி.மு.க., அணியில் தான் நான் இருக்கிறேன். அதன் வெற்றிக்காக பாடுபடுவேன்.இவ்வாறு அவர் கூறினார்.

பின், ஸ்டாலின் அளித்த பேட்டி:நேற்று முன்தினம்,விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர், திருமா வளவன், என்னைசந்தித்தார். இன்று, வைகோசந்தித்துள்ளார்.ஏற்கனவே, ம.தி.மு.க., நடத்திய மாநாட்டில், எங்கள் கட்சி சார்பில், துரைமுருகன் பங்கேற்றார். விடு தலை சிறுத்தைகள் நடத்தும் மாநாட்டுக்கும், எனக்கு அழைப்பு விடுத்துள்ளனர். அப்படி இருக்கும்போது, எங்கள் கூட்டணி மீது ஆர்வம் எடுத்து, அதற்கு, ஊடகங்கள் ரொம்ப முக்கியத் துவம் தருவது, எங்களுக்கு பெருமையாக இருக்கிறது.இவ்வாறு, அவர் கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து (65)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
29-நவ-201823:53:43 IST Report Abuse

நக்கல் சுயமரியாதை என்றால் கொஞ்சமும் தெரியாதவர்கள் இந்த திராவிட கட்சியை சேர்ந்தவர்கள்.. அதில் வைகோவிற்கு நோபல் பரிசு கொடுக்கலாம்.. ஆண்டவன் விட்ட அம்பு வைகோ.. அது தீமூகாவை வீழ்த்தாமல் விடாது..

Rate this:
PANDA PANDI - Aththipatti,இந்தியா
29-நவ-201822:29:27 IST Report Abuse

PANDA PANDIWINGS WINGS FIRE WINGS

Rate this:
Kunjumani - சொரியார் பிறந்தமன் ,இந்தியா
29-நவ-201821:57:59 IST Report Abuse

Kunjumaniகோவாலுதான் தமிழகத்தின் தலைசிறந்த காமெடி பீசு. யாரும் கோவாலு கிட்ட நெருங்ககூட முடியாது. கிருஸ்து ராசாவே கோவாலுவிற்கு ஆசீர் தாரும்.

Rate this:
மேலும் 62 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X