புதுடில்லி:'துாத்துக்குடியில் இயங்கி வந்த, ஸ்டெர்லைட் ஆலையை மூட, தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு, தவறானது. அந்த ஆலை, தொடர்ந்து செயல்பட அனுமதிக்கலாம்' என, தேசிய பசுமை தீர்ப்பாயத்தால் நியமிக்கப்பட்ட, நீதிபதி, தருண் அகர்வால் குழு, பரிந்துரைத்துள்ளது. இது குறித்து, ஒரு வாரத்திற்குள் பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு, பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்துவதாக, தமிழகத்தின் துாத்துக்குடி மாவட்டத்தில் இயங்கி வந்த, வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி, பல்வேறு போராட்டங்கள் நடந்தன.13 பேர் பலிமே மாதம், ஆலையை முற்றுகையிடும் போராட்டம் நடந்த போது, போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், 13 பேர் பலியாகினர். இதையடுத்து, அந்த ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு, தமிழக அரசு உத்தரவிட்டது.
இதை எதிர்த்து, வேதாந்தா குழுமத்தின் சார்பில், தேசிய பசுமை தீர்ப்பாயத்தில், வழக்கு தொடரப்பட்டது. அதை விசாரித்ததீர்ப்பாயம், நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள, ஸ்டெர்லைட் நிர்வாகத்திற்கு அனுமதி
அளித்தது.மேலும், ஸ்டெர்லைட் ஆலை, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறதா என்பது குறித்து ஆய்வு செய்ய, மேகாலயா உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி, தருண் அகர்வால் தலைமையில், மூன்று பேர் அடங்கிய குழுவை அமைத்து உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு, உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்குகள், தள்ளுபடி செய்யப்பட்டன. இதற்கிடையே, நீதிபதி, தருண் அகர்வால் தலைமையிலான குழுவினர், துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் ஆய்வு நடத்தினர். இந்தக் குழுவின்அறிக்கை, தனித்தனியாக மூடி முத்திரையிடப்பட்ட, 48 உறைகளில், தேசிய பசுமை தீர்ப்பாயத்தில்,
சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
அகர்வால் குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:சில நிபந்தனைகளுடன், ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து செயல்பட அனுமதிக்கலாம். இந்த ஆலையை மூடும் முடிவை எடுத்ததில், தமிழக அரசு சட்ட விதிகளை சரியாகப் பின்பற்றவில்லை.நீதிக்கு எதிரானதுஇந்த உத்தரவு தவறு. தங்கள் தரப்பு நியாயத்தை முன்வைக்க, ஆலை நிர்வாகத்துக்கு வாய்ப்பு தரப்படவில்லை; இது, நீதிக்கு எதிரானது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
இந்த வழக்கு,பசுமை தீர்ப்பாயத்தில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, இந்த அறிக்கை குறித்த பதில் மனுவை, ஒரு வாரத்திற்குள் தாக்கல் செய்யும்படி, தமிழக அரசுக்கு, தீர்ப்பாயத்தின் தலைவர், ஆதர்ஷ் குமார் கோயல் உத்தரவிட்டார்.விசாரணை குழுவின் இந்த அறிக்கை, தமிழக அரசுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
விரைவில் திறக்கப்படும்!
ஸ்டெர்லைட் வழக்கில், வேதாந்தா குழுமத்தின் சார்பில் ஆஜரான, உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர், அரிமா சுந்தரம் கூறியதாவது:மூன்று பேர் விசாரணை குழுவின் அறிக்கை, எங்களுக்கு சாதகமாக உள்ளது. அதனால், ஸ்டெர்லைட் ஆலை, மிக விரைவில் மீண்டும் செயல்படு வதற்கான சூழ்நிலை உருவாகியுள்ளது.'துாத்துக்குடியில் உள்ள நிலத்தடி நீரை, தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்' என, அந்தக் குழு கூறியுள்ளது; இது உட்பட, அந்தக் குழு கூறியுள்ள அனைத்து பரிந்துரை களையும் நிறைவேற்ற தயாராக உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (70)
Reply
Reply
Reply