சென்னை : ''பொது மக்கள் தான்போலீசாருக்குஅதிகாரிகள். என் பணியை நேர்மையான அதிகாரிகள் மற்றும் இளைஞர்களிடம் விட்டுச்செல்கிறேன்,'' என்று இன்று ஓய்வு பெற உள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.,பொன் மாணிக்கவேல் பேசினார்.
சென்னையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், குற்றவாளிகளை பிடிக்க உதவியாக இருந்த, ரயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கு சன்மானம் வழங்கி பொன் மாணிக்கவேல் பேசியதாவது: போலீசார் குற்ற நிகழ்விடங்களுக்கு போக வேண்டும். புகார் அளிக்க வரும் பொது மக்களை அலைக்கழிக்கக்கூடாது. யாருக்கும் பயப்படக்கூடாது. நீதிமன்றத்திற்கு தான் பயப்பட வேண்டும்.
போலீசாருக்கு சட்டம் பற்றிய தெளிவு அவசியம். ஒரு நாள் கூட படிக்காமல் இருக்க கூடாது. குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்காக காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. குற்றவாளிக்கு எதிராக துப்பாக்கியை காட்டுவதை அலைபேசியில் 'வீடியோ' பதிவு செய்வது சக்தி வாய்ந்ததாக இருக்கும். பொது மக்கள் தான் நமக்கு அதிகாரிகள். என் பணியை நேர்மையான அதிகாரிகள் மற்றும் இளைஞர்களிடம் விட்டுச்செல்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE