காங்., முதல்வர் 18 மணி நேரம் பணியாற்றுவார் : ராகுல்

Added : நவ 30, 2018 | கருத்துகள் (60)
Advertisement
ஐதராபாத் : தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றால் அங்கு 24 மணி நேரத்தில் 18 மணி நேரம் தங்களது முதல்வர் பணியாற்றுவார் என அக்கட்சியின் தலைவர் ராகுல் தெரிவித்துள்ளார்.தெலுங்கானா சட்டசபை தேர்தலை முன்னிட்டு ஐதராபாத்தில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பேசிய அவர், பிரதமர் மோடியும், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவும் வாக்குறுதிகளை அளித்து விட்டு அவற்றை
Telangana election 2018,Rahul Gandhi,Chandrasekaro Rao,  ராகுல், தெலுங்கானா, காங்கிரஸ், சந்திரசேகர ராவ்,  தெலுங்கானா சட்டசபை தேர்தல், விவசாயிகள் கடன் தள்ளுபடி ,ராகுல் தேர்தல் பிரச்சாரம் , தெலுங்கானா தேர்தல், சட்டசபை தேர்தல், தெலுங்கானா தேர்தல் 2018, ராகுல் காந்தி, முதல்வர்,
Telangana, Congress, CM, Telangana assembly election, Farmers loan waiver, Rahul election campaign, Telangana election, assembly election, Telangana poll 2018,

ஐதராபாத் : தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றால் அங்கு 24 மணி நேரத்தில் 18 மணி நேரம் தங்களது முதல்வர் பணியாற்றுவார் என அக்கட்சியின் தலைவர் ராகுல் தெரிவித்துள்ளார்.தெலுங்கானா சட்டசபை தேர்தலை முன்னிட்டு ஐதராபாத்தில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பேசிய அவர், பிரதமர் மோடியும், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவும் வாக்குறுதிகளை அளித்து விட்டு அவற்றை நிறைவேற்றுவதில்லை. நாட்டில் பெரும் பணக்காரர்கள் வாங்கிய 3 லட்சத்து 50 ஆயிரம் கோடியை தள்ளுபடி செய்ய பிரதமர் மோடி தயாராக உள்ளார். ஆனால், ஏழை விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய அவர் தயாராக இல்லை. தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் ரூ. 2 லட்ச ரூபாய் வரை கடன் வாங்கிய விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படும்.

தெலுங்கானா வளர்ச்சி நிதியில் தனது குடும்பத்தை பணக்கார குடும்பமாக்க சந்திரசேகர ராவ் நினைக்கிறார். காங்.,ன் திட்டங்களை பெயர் மாற்றி தன்னுடையது என கூறிக் கொள்வதையே முக்கிய வேலையாக கொண்டுள்ளார் சந்திரசேகர ராவ். விரைவில் தெலுங்கானா பெயரையும் தெலுங்கானா ஆர்எஸ்எஸ் என மாற்றி விடுவார். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குவதற்காக எங்கள் முதல்வர் ஒரு நாளின் 24 மணி நேரத்தில் 18 மணி நேரம் வேலை செய்வார். நாங்கள் 5 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தால் தொழிற்சாலைகள் திரும்ப வரும். விவசாயிகளிடமே அவர்களின் நிலம் திரும்பக் கொடுக்கப்படும் என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (60)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
01-டிச-201805:57:58 IST Report Abuse
Ramachandran எல்லோரும் மோடி போல் ஆக முடியாது...
Rate this:
Cancel
blocked user - blocked,மயோட்
01-டிச-201804:18:35 IST Report Abuse
blocked user 1.8 என்றால் 18 என்று நினைத்துவிட்டார் இளவல்....
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
01-டிச-201804:11:23 IST Report Abuse
J.V. Iyer தண்ணியடிப்பது, தூங்குவது எல்லாம் இதில் சேர்க்க கூடாது. அனால் ராகுல்ஜி சொல்லிவிட்டார் அப்புறம் என்ன இவருடைய கான்-க்ராஸ் இதைத்தான் எழுவது ஆண்டுகாலம் செய்தது. என்னவாயிற்று?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X