பாக்., பேச்சில் முரண்பாடு: ராணுவ தளபதி| Dinamalar

பொது செய்தி

இந்தியா

பாக்., பேச்சில் முரண்பாடு: ராணுவ தளபதி

Updated : நவ 30, 2018 | Added : நவ 30, 2018 | கருத்துகள் (5)
Advertisement
பாகிஸ்தான், ராணுவ தளபதி, பிபின் ராவத், காஷ்மீர்

புதுடில்லி: அமைதி குறித்து பாகிஸ்தான் பேச்சில் முரண்பாடு உள்ளதாக ராணுவ தளபதி பிபின் ராவத் கூறியுள்ளார்.


பெண்கள் பங்கு

இது தொடர்பாக அவர் கூறியதாவது: ராணுவத்தில் பெண்களின் பங்கு அதிகரித்து வருகிறது. ஆனால், போர் நடவடிக்கைகளில் அவர்களை முன்னிலைபடுத்தவில்லை. இதற்கு நாம் இன்னும் தயாராகவில்லை என்றே நான் நினைக்கிறேன். மேற்கத்திய நாடுகளில் நிறைய வாய்ப்புகள் உள்ளன. பெரிய நகரங்களில் ஆண்களும், பெண்களும் இணைந்து செயல்படுகின்றனர். ஆனால், ராணுவத்திற்கு வருபவர்கள், பெரிய நகரங்களில் இருந்து மட்டும் வருவது இல்லை.


மதசார்பற்ற நாடு

பாகிஸ்தான், இஸ்லாமிய நாடாக அறிவித்துள்ளது. அவர்கள், இந்தியாவுடன் இணைந்து செயல்பட வேண்டுமானால், மதசார்பற்ற நாடாக அவர்கள் வளர வேண்டும். இந்தியா மதசார்பற்ற நாடு. அவர்களும், மதசார்பற்ற நாடாக விரும்பினால், அதற்கு பல வாய்ப்புகள் உள்ளன. அமைதிக்காக இந்தியா ஒரு அடி எடுத்தால், நாங்கள் இரண்டு அடி எடுத்துவைப்போம் என பாகிஸ்தான் கூறுகிறது. ஆனால், அவர்கள் சொல்வதில் முரண்பாடு உள்ளது. அந்நாடு நேர்மறையான முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை இந்தியா உணர வேண்டும். அதுவரை பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக நடக்காது என்ற தெளிவான கொள்கை நம்மிடம் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
அமைதிக்காக இந்தியா ஒரு அடி எடுத்து வைத்தால், பாகிஸ்தான் இரண்டு அடி எடுத்து வைக்கும் எனவும், பிரதமர் மோடியை சந்திக்க தயாராக உள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியிருந்தார்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sukumar Talpady - Mangalore ,இந்தியா
30-நவ-201819:47:56 IST Report Abuse
Sukumar Talpady பாக்கிஸ்தான் மத சார்பற்ற நாடாக மாறணுமா ? அதெல்லாம் நடக்காத காரியம் .
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
30-நவ-201819:11:22 IST Report Abuse
Pugazh V ராணுவ அதிகாரிகள் இப்படி பேட்டி/ அறிக்கையெல்லாம் ஆன்ட்டி- கான்ஸ்டிடியூஷனல் - இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரானது, தவறு. பலமுறை பதிவிட்டிருக்கிறேன்.
Rate this:
Share this comment
Darmavan - Chennai,இந்தியா
30-நவ-201822:15:18 IST Report Abuse
Darmavanநீ இப்படி பேசுவதுதான் ஆன்டி கான்ஸ்டிடூஷன் .ஒரு ராணுவ தலைமை பற்றி விமர்சனம் கூடாது...
Rate this:
Share this comment
Cancel
Ramesh Sundram - Muscat,ஓமன்
30-நவ-201818:43:22 IST Report Abuse
Ramesh Sundram முதலில் பாகிஸ்தானை நான்கு துண்டுகளாக போடவும் அது தான் இந்தியாவிற்கு எப்பொழுதும் நல்லது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X