தமிழ்நாடு

'பேச்சாளராவதே லட்சியம்' : சொல்கிறார் பரிசுகளை குவிக்கும் மாணவி

Added : நவ 30, 2018
Advertisement

தேவதானப்பட்டி : பேச்சு, கட்டுரை, குறள் ஒப்புவித்தல் போட்டிகளில் வெற்றி பெற்று தனித்திறமையுடன் அசத்தி வருகிறார்சில்வார்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி பிளஸ் 1 மாணவி கபிலா. 6 ம் வகுப்பு படிக்கும் போது இருந்தே போட்டிகளில் கலந்து கொள்வதில் ஆர்வம் காட்டி வந்தார். பள்ளி அளவிலான பேச்சுப் போட்டிகளில் முதலிடம், கல்வி மாவட்ட அளவில் நடந்த பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டிகளில் முதலிடம், மாவட்ட அளவில் துாய்மை இந்தியா திட்ட பேச்சுப் போட்டியில் இரண்டாம் இடம், பாலிதீன் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள் குறித்து நடந்த பேச்சுப் போட்டியில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்றார்.அறிவியல் கண்காட்சியில் சிறப்பு ஆய்வக அறிக்கை சமர்ப்பித்து முதலிடம் பிடித்தார். கல்வியோடு மட்டும் இல்லாமல் இதுபோன்ற கூடுதல் திறமைகளை வளர்ப்பதில் வெற்றி பெற்று பரிசுகளை குவித்து அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.கபிலா கூறியதாவது:பண்டிகை காலங்களில் 'டிவி'யில் பட்டிமன்றங்கள் பார்ப்பேன். அதில் பேசியவர்களைப்போல நாமும் மேடை ஏறி 'மைக் 'பிடித்து சிறந்த பேச்சாளராக வரவேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. அதை நோக்கியே பயணிக்கிறேன். எனது முயற்சிகளுக்கு ஆசிரியர்கள் உறுதுணையாக உள்ளனர், என்றார். இவரை வாழ்த்த 90957 53645

Advertisement


வாசகர் கருத்து

Nallavan Nallavan - Kolkata,இந்தியா
11-பிப்-201914:27:07 IST Report Abuse
Nallavan Nallavan டுமீலர்களால் பேச்சாளர் ஆக முடியாதா என்ன ??
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X