மோடி என்ன மாதிரியான இந்து: ராகுல் கேள்வி

Updated : டிச 01, 2018 | Added : டிச 01, 2018 | கருத்துகள் (130)
Advertisement
Rajasthan election 2018, Rahul Gandhi, PM Modi, ராகுல், மோடி, இந்து மதம், பிரதமர் மோடி , ராஜஸ்தான் சட்டசபை தேர்தல்,  ராகுல் பிரசாரம் , நரேந்திர மோடி , பிரதமர் நரேந்திர மோடி , சர்ஜிகல் தாக்குதல் , பண மதிப்பிழப்பு, ராஜஸ்தான், சட்டசபை தேர்தல்,  ராஜஸ்தான் தேர்தல் 2018,  ராகுல் காந்தி, 
Rahul, Modi, Hindu, Prime Minister Modi, Rajasthan Assembly election campaign, Narendra Modi,Prime Minister Narendra Modi, surgical attack,  Rajasthan, assembly election,

உதய்பூர்: '' பிரதமர் மோடி என்ன மாதிரியான இந்து,'' என, காங்., தலைவர் ராகுல் கேள்வி எழுப்பியுள்ளார்.


எல்லாருக்கும் அறிவு உண்டு

ராஜஸ்தான் சட்டசபை தேர்தலை ஒட்டி பிரசாரம் மேற்கொண்டுள்ள காங்., தலைவர் ராகுல், உதய்பூர் நகரில் நடந்த ஒரு கூட்டத்தில், தொழில் அதிபர்கள் மற்றும் நிபுணர்களுடன் கலந்துரையாடினார். அவர் பேசியதாவது:

இந்து மத சாரம் என்ன? கீதை சொல்வது என்ன? இதுபற்றிய அறிவு எல்லாருக்கும் உண்டு. அறிவு உங்கள் அனைவரையும் சுற்றி உள்ளது. ஒவ்வொரு உயிரினத்திற்கும் அறிவு உள்ளது. நமது பிரதமர், தான் ஒரு இந்து என்று கூறுகிறார். ஆனால், இந்து மதத்தின் அடிதளத்தை அவர் புரிந்து கொள்ளவில்லை.
என்ன மாதிரியான இந்து அவர்? எல்லாவற்றை பற்றியும் தனக்கு நன்கு தெரியும் என அவர் நம்புகிறார். உலக அறிவு என்பதே அவரது மூளையில் இருந்து தான் உதித்தது என்று நம்புகிறார்.

நரேந்திர மோடி போல, மன்மோகன் சிங்கும், மூன்று முறை சர்ஜிகல் தாக்குதல் நடத்தி இருக்கிறார் என்பது உங்களுக்கு தெரியுமா? பாகிஸ்தான் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க சர்ஜிகல் தாக்குதல் நடக்க வேண்டும். அந்த தாக்குல் ரகசியமாக வைக்கப்பட வேண்டும் என ராணுவ அதிகாரிகள் மன்மோகன் சிங்கிடம் கூறியுள்ளனர்.
இதுபோன்று நரேந்திர மோடியிடம் கூறியுள்ளனர். ஆனால், நரேந்திர மோடி, ராணுவத்தின் இருப்பிடத்திற்கு சென்று அந்த தாக்குதலை, அரசியல் சொத்தாக மாற்றி விட்டார். அந்த தாக்குதல் ராணுவத்திற்கு சொந்தமானது. உ.பி., தேர்தலில் வெற்றி பெறுவதற்காக, சர்ஜிகல் தாக்குதலை மோடி அரசியல் சொத்தாக மாற்றி விட்டார்.


தகவல் சொல்லாத மோடி

ராணுவத்தை விட தனக்கு அதிகம் தெரியும்; வெளியுறவு அமைச்சரை விட, வேளாண் அமைச்சரை விட தனக்கு அதிகம் தெரியும் என மோடி நம்புகிறார். எல்லா அறிவும் தனது மூளையில் இருந்து உதிப்பதாக நினைக்கிறார்.
மும்பை தாக்குதல் நடந்த போது, நாட்டின் பிரதமராக மன்மோகன் சிங் இருந்தார். தாக்குதல் குறித்த தகவல் தெரிந்ததும் அவர் இரண்டு பேருக்கு போன் போட்டார். அதில் இரண்டாவது நபர், எதிர்க்கட்சி தலைவராக இருந்த அத்வானிக்கு. எதிர்க்கட்சி தலைவருக்கு தகவல் தெரிவிக்க வேண்டியது தனது கடமை என மன்மோகன் சிங் கருதினார். மோடியோ ஒரு போதும் என்னையோ, சோனியாவையோ அழைத்து தகவல் சொன்னது இல்லை. அத்வானிக்கு கூட அவர் தகவல் சொன்னது இல்லை.

பண மதிப்பிழப்பு என்பது, நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்து விட்டது. கமாண்டோ வீரர் பாதுகாப்பு எனக்கு உண்டு. பிரதமர் மோடிக்கும் உண்டு. ஆனால், பிரதமர் பண மதிப்பிழப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்ட போது, அமைச்சரவை கூட்டம் நடந்த அறையின் கதவை பூட்டி விட்டார். அந்த அறிவிப்பு குறித்து அமைச்சர்களுக்கு தெரியாது. நிதி அமைச்சர் அருண் ஜெட்லிக்கு கூட தெரியாது.

இவ்வாறு ராகுல் பேசினார்.
Advertisement
வாசகர் கருத்து (130)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
G.Krishnan - chennai,இந்தியா
06-டிச-201813:21:33 IST Report Abuse
G.Krishnan ஏம்ப்பா தம்பி ராகுலு, முதல்ல ஏதிர் கட்சி அந்தஸ்தில் உங்க கட்சி இல்லை, மக்கள் உங்க கட்சியை எந்த வரிசையில வைச்சிருக்காங்கன்னு தெரியாம பேசாதப்பா, தயவுசெய்து இதை யாராவது இவருக்கு சொல்லுங்கப்பா, அப்பறம் எங்க அம்மாகிட்ட சொல்லல, தாத்தாகிட்ட சொல்லல, என்ன இது, . . . . இந்து என்கிற சமயத்தை பத்தி உங்களுக்கெல்லாம் தெரியாதுப்பா, உங்களுக்கு சம்பந்தமில்லாதது
Rate this:
Share this comment
Cancel
அம்பி ஐயர் - நங்கநல்லூர், சென்னை - 600 061,இந்தியா
02-டிச-201810:24:16 IST Report Abuse
அம்பி ஐயர் இவுரு மொதல்ல எதிர்க்கட்சியே இல்லையே..... பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சின்னா அது அதிமுக தானே...... எனக்கு சொல்லலை.... எங்க அம்மாக்கு சொல்லலை...... நல்ல காமெடியா இருக்கு..... இந்துக்கள் எல்லாரும் காங்கிரஸை மொத்தமா வெறுக்குறதுக்கு இவுரு ஒரு ஆளு போதும்......
Rate this:
Share this comment
Cancel
Ramasami Venkatesan - Chennai - now in Brisbane - Aus,இந்தியா
02-டிச-201804:25:07 IST Report Abuse
Ramasami Venkatesan இவர் வெளியில் பூணூல் அணிவதும், பொட்டு அணிவதும், வீட்டில் வேறு மாதிரியாக அம்மாவுக்காக இருப்பதுமா ஒரு உண்மையான இந்து. பிறப்பிலேயே இந்துவாக கடைபிடிக்க வேண்டும். இத்தனை நாட்கள் கோவிலுக்கு போகாத ஒருவர், திடீரென்று கோவில் விஜயம் செய்தால் அதற்கு என்ன அர்த்தம். அரசியலுக்காக தானே
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X