பொது செய்தி

இந்தியா

நீதித்துறை மீதான ஊழல் குற்றச்சாட்டை ஏற்க முடியாது : நீதிபதி ஜோசப்

Added : டிச 02, 2018 | கருத்துகள் (38)
Share
Advertisement
புதுடில்லி : நீதித்துறை மீதான ஊழல் குற்றச்சாட்டுக்களை ஏற்க முடியாது என சுப்ரீம் கோர்ட் ஓய்வுபெற்ற நீதிபதி குரியன் ஜோசப் தெரிவித்துள்ளார்.இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில், வரலாற்றில் முதல் முறையாக செய்தியாளர்கள் சந்திப்பின் போது சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதிக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை முன் வைத்த 4 நீதிபதிகளில் குரியன் ஜோசப்பும் ஒருவர். இவர் நவம்பர் 30 ம் தேதி
நீதித்துறை, நீதிபதி குரியன் ஜோசப், சுப்ரீம் கோர்ட், தீபக் மிஸ்ரா, தலைமை நீதிபதி

புதுடில்லி : நீதித்துறை மீதான ஊழல் குற்றச்சாட்டுக்களை ஏற்க முடியாது என சுப்ரீம் கோர்ட் ஓய்வுபெற்ற நீதிபதி குரியன் ஜோசப் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில், வரலாற்றில் முதல் முறையாக செய்தியாளர்கள் சந்திப்பின் போது சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதிக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை முன் வைத்த 4 நீதிபதிகளில் குரியன் ஜோசப்பும் ஒருவர். இவர் நவம்பர் 30 ம் தேதி சுப்ரீம் கோர்ட் நீதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெற்றார்.

ஓய்வுபெற்ற பிறகு நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ஜோசப், தீபக் மிஸ்ரா தலைமை நீதிபதியாக இருந்த போது சுப்ரீம் கோர்ட் சரியான பாதையில் செல்லவில்லை. இது குறித்து பலவிதங்களில் அப்போது தலைமை நீதிபதியாக இருந்த தீபக் மிஸ்ராவிடம் எடுத்துரைத்துள்ளோம். ஆனால் எந்த பலனும் ஏற்படவில்லை. அதனால் வேறு வழியில்லை என்று கருதியதால் செய்தியாளர்கள் முன்னிலையில் அனைத்தையும் வெளி கொண்டு வந்தோம்.

தீபக் மிஸ்ரா ஓய்விற்கு பிறகு தற்போது சுப்ரீம் கோர்ட்டின் செயல்பாடுகளில் கொஞ்சம் பரவாயில்லை. சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. அனைத்தும் மாற சில காலம் ஆகும். இது ஒரே நாளில் மாறி விடக் கூடியது அல்ல. இது ஒரு அமைப்பு. சுப்ரீம் கோர்ட்டில் நீதித்துறையில் ஊழல் இருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்களை ஒருபோதும் ஏற்க முடியாது. ஒருவேளை கீழமை நீதிமன்றங்களில் அவ்வாறு நடந்து இருந்தால் அது மாநிலங்களின் பிரச்னை. நான் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக இருந்த வரை அப்படி எந்த குற்றச்சாட்டும் என் கவனத்திற்கு வரவில்லை என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (38)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
நந்தினி திவ்ய பாரதி - MELBOURNE,ஆஸ்திரேலியா
03-டிச-201800:17:56 IST Report Abuse
நந்தினி திவ்ய பாரதி retired ஆனவங்கல பளய ஜட்ஜ்நூ சொல்லணும்.
Rate this:
Cancel
spr - chennai,இந்தியா
02-டிச-201820:47:11 IST Report Abuse
spr ஒருவர் குற்றவாளியென கருதப்பட வாய்ப்புக்கள் பிளம் அறிந்திருக்க, ஒரு சாமான்யன் கூட அக்குற்றத்தின் நெளிவு சுளிவுகளை விவாதிக்குமளவிற்கு சட்டம் அறிந்திருக்கவில்லையெனினும், தர்க்க நியாயம் அறிந்திருக்க, விசாரணையில் காவற்துறை சரியான சாட்சியங்களை அளிக்கவில்லை முறையான விசாரணை நடத்தப்படவில்லை எனவே அவர்களை விடுக்கிறேன் என்னு சொல்லும் நீதிபதிகள் காவற்துறையை முறையான விசாரணை செய்து சாட்சியங்களை குறிப்பிட்ட கெடுவுக்குள் அளியுங்கள் இல்லை வழக்கை வாபஸ் வாங்குங்கள் என்று சொல்லி, அதுவரை அக்குற்றவாளி நீதிமன்றத் காவலில் இருக்க வேண்டும் விடுதலை ஜாமீன் எதுவும் இல்லை என்றுதானே சொல்ல வேண்டும் வழக்கு தொடர்ந்தவனே வாபஸ் வாங்க வைத்தால் அவர் பேரில் நிரூபிக்கப்படாத குற்றம் சுமத்தியதற்காக, குற்றம் சாட்டப்பட்டவர் வழக்கைத் தொடரலாம் என்று சொன்னால் பல குற்றங்கள் முறையாக தீர்க்கப்படும் சொல்லாத நீதிபதிகள் தவறு செய்தவர்களே அண்மைக் காலத்தே நீதிம்னறமே பல வழக்குகளை தாமே ஏற்கின்ற வகையில் இது போன்ற திட்டமிட்ட கொலை கொள்ளை கற்பழிப்பு ஊழல் போன்ற வழக்குகளை விசாரிப்பதுதானே இவர் சொல்வது சரியல்ல " சுப்ரீம் கோர்ட் சரியான பாதையில் செல்லவில்லை. இது குறித்து பலவிதங்களில் அப்போது தலைமை நீதிபதியாக இருந்த தீபக் மிஸ்ராவிடம் எடுத்துரைத்துள்ளோம். ஆனால் எந்த பலனும் ஏற்படவில்லை." என்று சொன்னபிறகும் நீதிபதிகள் தவறு இழைக்கவில்லை என்று எப்படி கூறுகிறார்
Rate this:
Darmavan - Chennai,இந்தியா
03-டிச-201806:25:21 IST Report Abuse
Darmavanஜட்ஜுகளின் முதல் கடமை தர்மத்தை நிலைநாட்டுவதே தவிர சட்டம் என்று சொல்லிக் கொண்டு குற்றவாளிகளை தப்பிக்க விடுவதில்லை.இந்த அநியாயம் இப்போது நீதியில் நடக்கிறது.கேவலம். இவர்கள் நீதிபதிகள் என்று சொல்லிக் கொள்வது வேதனை/ வெட்கம்....
Rate this:
Cancel
jagan - Chennai,இலங்கை
02-டிச-201819:38:41 IST Report Abuse
jagan மிஸ்ரா என்பது வட இந்திய 'அவா' , எனவே இந்த கிறிஸ்துவ பாதிரி அடிமை அவரை குறை கூறுவது எதிர்பார்த்ததே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X