குடியரசு தின விழா: தென் ஆப்ரிக்க அதிபர் பங்கேற்பு| South African President Cyril Ramaphosa To Be 2019 Republic Day Chief Guest | Dinamalar

குடியரசு தின விழா: தென் ஆப்ரிக்க அதிபர் பங்கேற்பு

Added : டிச 02, 2018
புதுடில்லி: குடியரசு தின விழா சிறப்பு விருந்தினராக தென் ஆப்ரிக்க அதிபர் சிரில் ராமபோசா பங்கேற்க உள்ளார்.டிரம்ப் பங்கேற்கவில்லைஒவ்வொரு ஆண்டும், ஜனவரி, 26ல் நடக்கும் குடியரசு தின விழாவுக்கு, வெளிநாட்டு தலைவர்கள், சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்படுவர். இந்த ஆண்டு குடியரசு தின விழாவில், ஆசிய நாடுகளைச் சேர்ந்த, 10 தலைவர்கள் பங்கேற்றனர். அடுத்த ஆண்டு( 2019) குடியரசு
இந்தியா, குடியரசு தின விழா, சிறப்பு விருந்தினர், பிரதமர் மோடி, தென் ஆப்ரிக்கா, அதிபர், சிரில் ராமபோசா, அர்ஜென்டினா, ஜி20 மாநாடு,

புதுடில்லி: குடியரசு தின விழா சிறப்பு விருந்தினராக தென் ஆப்ரிக்க அதிபர் சிரில் ராமபோசா பங்கேற்க உள்ளார்.


டிரம்ப் பங்கேற்கவில்லை

ஒவ்வொரு ஆண்டும், ஜனவரி, 26ல் நடக்கும் குடியரசு தின விழாவுக்கு, வெளிநாட்டு தலைவர்கள், சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்படுவர். இந்த ஆண்டு குடியரசு தின விழாவில், ஆசிய நாடுகளைச் சேர்ந்த, 10 தலைவர்கள் பங்கேற்றனர். அடுத்த ஆண்டு( 2019) குடியரசு தினவிழாவுக்கு, அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், டிரம்ப் பங்கேற்கவில்லை.


சந்திப்பு

இந்நிலையில், அர்ஜென்டினாவில் நடக்கும் ஜி 20 மாநாட்டில் பங்கேற்றுள்ள பிரதமர் மோடி, தென் ஆப்ரிக்க அதிபர் சிரில் ராமபோசா வை சந்தித்து பேசினார். அப்போது, குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க வரும்படி அழைப்பு விடுத்தார். இதனை தென்ஆப்ரிக்க அதிபரும் ஏற்று கொண்டார்.


பெருமை

இது குறித்து பிரதமர் மோடி கூறுகையில், அதிபர் சிரில் ராமபோசா வை சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாள் விழா கொண்டாட்டங்கள் நடக்கும் நிலையில், 2019 குடியரசு தின விழா சிறப்பு விருந்தினராக வரும் அதிபர் ராமபோசாவை வரவேற்பதில் பெருமை அடைகிறோம். காந்திக்கும், தென் ஆப்ரிக்காவிற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.




வலுப்பெறும்

அதிபரின் வருகையும், குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்பதும், இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் மற்றும் மக்களுக்கு இடையிலான உறவு வலுப்பெறும். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.



அழைப்புஇது தொடர்பாக வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ரவீஸ் குமார் கூறியதாவது: குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க வேண்டும் என்ற இந்தியாவின் அழைப்பை தென் ஆப்ரிக்க அதிபர் ராமபோசா ஏற்று கொண்டுள்ளார் எனக்கூறியுள்ளார்.




உலக தலைவர்கள் பங்கேற்பு

குடியரசு தின விழா கொண்டாட்டத்தில், கடந்த சில ஆண்டுகளாக, உலக தலைவர்கள் அடுத்தடுத்து பங்கேற்று வருகின்றனர். 2015ல், குடியரசு தின விழாவில், அப்போதைய அமெரிக்க அதிபர் ஒபாமா பங்கேற்றார். கடந்த, 2016ல், பிரான்ஸ் அதிபர் பிராங்காய்ஸ் ஹாலண்டேவும், 2017ல், அபுதாபி இளவரசர், முகம்மது பின் ஸயத் அல் நஹ்யானும், குடியரசு தின விழாக்களில் பங்கேற்றனர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X