அரசுக்கு ரூ.500 கோடி கடன் தரும் கோவில்

Added : டிச 02, 2018 | கருத்துகள் (32)
Advertisement
மும்பை: குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற மஹாராஷ்டிரா மாநில அரசு, ஷீரடி சாய்பாபா கோவில் டிரஸ்டிடம் 500 கோடி ரூபாய் வட்டியில்லா கடன் வாங்கியுள்ளது.குடிநீர் தட்டுப்பாடுமஹாராஷ்டிரா மாநிலம், அஹமது நகரில் ஷீரடி கோவிலுக்கு தினசரி 70 ஆயிரம் பக்தர்கள் வருகின்றனர். திருவிழா காலத்தில் இந்த எண்ணிக்கை 3.5 லட்சத்தை தொடும். ஆனால், பெரும்பாலான பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு
ஷீரடி, சாய்பாபா டிரஸ்ட், மஹாராஷ்டிரா, கடன்,

மும்பை: குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற மஹாராஷ்டிரா மாநில அரசு, ஷீரடி சாய்பாபா கோவில் டிரஸ்டிடம் 500 கோடி ரூபாய் வட்டியில்லா கடன் வாங்கியுள்ளது.


குடிநீர் தட்டுப்பாடு


மஹாராஷ்டிரா மாநிலம், அஹமது நகரில் ஷீரடி கோவிலுக்கு தினசரி 70 ஆயிரம் பக்தர்கள் வருகின்றனர். திருவிழா காலத்தில் இந்த எண்ணிக்கை 3.5 லட்சத்தை தொடும். ஆனால், பெரும்பாலான பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால், நீர்பாசன திட்டம் ஒன்றை செயல்படுத்த மாநில அரசு முடிவு செய்தது. ஆனால், நிதி நெருக்கடி காரணமாக அந்த திட்டம் முடங்கியது. இதனையடுத்து, முதல்வர் பட்நாவீஸ் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், ஷீரடி சாய்பாபா கோவில் டிரஸ்ட்டிடம் ரூ.500 கோடி கடன் வாங்க முடிவு செய்யப்படடது.


நம்பிக்கை

இதனை ஏற்று கொண்ட டிரஸ்ட் தலைவரான பா.ஜ.,வை சேர்ந்த சுரேஷ் ஹவாரே, ரூ.500 கோடி கடன், வட்டியில்லாமல் வழங்க ஒப்புதல் வழங்கினார். இதற்கு முன், இவ்வளவு பெரிய தொகையை வட்டியில்லாமல் டிரஸ்ட் கடன் வழங்கியது கிடையாது. கடனை திருப்பி செலுத்துவதற்கும் காலக்கெடு நிர்ணயம் செய்யப்படவில்லை. கடன் இரண்டு தவணைகளாக வழங்கப்பட உள்ளது.நீர்பாசன திட்டத்தின் மொத்த மதிப்பு ரூ.1,200 கோடியாகும். டிரஸ்ட் ரூ.500 கோடி கடன் வழங்க உள்ளது. நீர்பாசன துறை இந்த ஆண்டு ரூ.300 கோடி ஒதுக்க உள்ளது. அடுத்த ஆண்டு பட்ஜெட்டில் ரூ.400 கோடி ஒதுக்க அரசு முடிவு செய்துள்ளது. இதனால், அடுத்த 2 ஆண்டுகளில் இந்த திட்டத்தை நிறைவேற்ற முடியும் என மாநில அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.


முதல்முறை...


அதிகாரி ஒருவர் கூறுகையில், கடந்த காலங்களில், கோவில் டிரஸ்ட் 4 அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு ரூ.71 கோடி கடன் வழங்கியது. ஆனால், இந்த முறை, பொது பிரச்னை காரணமாக, வட்டியில்லாமல் கடன் வாங்க உள்ளோம். இந்த நீர்பாசன திட்டம் செயல்பாட்டுக்கு வரும் போது, அந்த மாவட்டத்தில் உள்ள, அகோலே, சங்கம்நர், ரகுரி, கபர்கோவா, ஷீரடி உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகள் பயன்பெறும். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balaji - Bangalore,இந்தியா
02-டிச-201821:02:47 IST Report Abuse
Balaji கோவில்களிலும் கொள்ளை அடிக்க அரசியல் கட்சி . ஒரு குடிநீர் வழங்க துப்பில்லை.வட்டி இல்லா கடன். மக்கள் காணிக்கை மக்களின் அனுமதி இல்லாமல் எப்படி தரலாம். கேட்க நாதி இல்லை.திருப்பதி என்ன செய்கிறது?
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
02-டிச-201819:42:50 IST Report Abuse
Bhaskaran இந்தியாவின் அனைத்துப் பகுதியை சேர்ந்தவர்களும் இந்த மந்திருக்கு நன்கொடை தந்துள்ளனர். ஒருமானில அரசுக்கும் சில கல்லூரிகளுக்கும் இந்த பணத்தை வட்டியில்லாமல் தருவது தவறாகும் அப்படியென்றால் தமிழக அரசு சென்னையின் குடிநீர் திட்டத்துக்கு (ஒகேனக்கல் ) இந்த ஆலயத்திடம் வட்டி இல்லாமல் கடன் கேட்கலாம்
Rate this:
03-டிச-201800:00:45 IST Report Abuse
நக்கல் எல்லா ஊரிலும் அப்படித்தான்.. உதாராணம்: திருப்பதி, மெக்கா, வாடிகன்.......
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
02-டிச-201819:37:43 IST Report Abuse
Pugazh V "சுந்தரத்தை போல் உள்ள மனிதர்களை என்ன சொல்வது" - நடுநிலையான நல்ல ஆழ்ந்த சிந்தனாவாதி. குறிப்பாக நாகரிகமானவர். அவமரியாதை யாக ஒரு வார்த்தை கூட எழுத மாட்டார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X