பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
எதிர்ப்பு!
மேகதாது அணை முயற்சிக்கு தமிழக அரசு...
காவிரி ஆணைய கூட்டத்தில் காரசார வாதம்

'மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடகாவின் நடவடிக்கைகளுக்கு துணை போகக் கூடாது' என, காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில், தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

மேகதாது அணை,தமிழக அரசு,எதிர்ப்பு,காவிரி ஆணைய கூட்டத்தில்,காரசார வாதம்


காவிரி மேலாண்மை ஆணையத்தின் இரண்டாவது கூட்டம், நேற்று டில்லியில், மத்திய நீர்வள ஆணைய அலுவலகத்தில், அதன் தலைவர் மசூத் உசேன் தலைமையில் நடந்தது.தமிழக அரசின், பொதுப்பணித்துறை செயலர், பிரபாகரன், காவிரி தொழில்நுட்பக்குழு தலைவர், சுப்ரமணியம் ஆகியோர் பங்கேற்ற இந்த கூட்டம், காலையில் துவங்கியது.

தமிழகம் சார்பில், 'ஏற்கனவே கஜா புயலால், தமிழக விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். 'இந்நிலையில், மேகதாதுவில் அணை கட்ட வழங்கப்பட்ட அனுமதி, தமிழக விவசாயிகளுக்கு பேரிடியாக உள்ளது. தமிழக அரசிடம் ஆலோசிக்காமல் செயல்படுவது வேதனையளிக்கிறது' என, கூறப்பட்டது.

கர்நாடகா பதில் :


இதற்கு பதில் அளித்த, கர்நாடக மாநில நீர்வளத்துறை செயலர், ராகேஷ் சிங் கூறியதாவது: எங்கள் எல்லைக்குள் அணை கட்டுவதில், தமிழகத்துக்கு என்ன பிரச்னை என்பது தெரியவில்லை. நாங்கள், தண்ணீர் தருகிறோம் என்றுதானே கூறுகிறோம். தமிழகத்திற்குரிய பங்கீட்டை தர மாட்டோம் என கூறினால் தானே எதிர்க்க வேண்டும்.

தங்கள் மாநிலத்தில், புதிய கட்டமைப்புகள் கட்ட நினைத்தால், அதற்கு எங்களிடமா, தமிழகம் அனுமதி கேட்கும்... மேகதாது எங்கள் பகுதி. அங்கு, நீதிமன்ற தீர்ப்புக்கு எந்த வகையிலும் பங்கம் ஏற்படாத வகையில், எங்கள் தேவைக்கு ஏற்ப, அணை கட்டுவது கர்நாடகாவின் உரிமை. அதற்கு ஏன் தமிழகத்தின் ஒப்புதலும், ஆலோசனையும் தேவை என்பது புரியவில்லை. இந்த விஷயத்தில் காட்டப்படும் தமிழகத்தின் எதிர்ப்பு, அண்டை மாநிலத்தின் உரிமையில் தலையிடுவது போல உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கு முந்தைய கூட்டங்களில், தமிழக அரசு சார்பில் பேசப்பட்ட விபரங்கள் வெளியில் தெரிவிக்கப்படுவது இல்லை. கெஞ்சினால் கூட, தமிழக அதிகாரிகள், செய்தியாளர்களிடம் முகம் கொடுத்து பேச மாட்டார்கள். ஆனால் நேற்று, கூட்டம் துவங்கிய சில மணி நேரத்தில், தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில், மிகுந்த கரிசனத்துடன், தமிழகத்தின் எதிர்ப்பு குறித்து அச்சடிக்கப்பட்ட குறிப்பு, நிருபர்களிடம் வழங்கப்பட்டது.

அதிகாரிகள் அறிக்கை:


மேகதாது விஷயத்தில், தமிழக அரசு அதிகாரிகள் கோட்டை விட்டதாக ஏற்கனவே, கடும் விமர்சனம் இருந்து வரும் நிலையில், வழக்கத்துக்கு மாறாக, அரசு தரப்பில், தானாகவே வலிய வந்து, தகவல்களை பரிமாறினர்.

அந்த குறிப்பில் இடம் பெற்றுள்ள தகவல்: தமிழகத்தின் ஒப்புதலைப் பெறாமல், விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்க, கர்நாடகாவுக்கு மத்திய நீர்வள ஆணையம் அளித்த அனுமதி, நடுவர் மன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புகளை மீறும் செயல்.

எதிர்ப்பு ஏன்?


ஏற்கனவே, தமிழகத்தின் நீர் பங்கீடு குறைக்கப்பட்டுஉள்ள நிலையில், புதிய அணை உருவானால், இயல்பான காலங்களில் கூட, வேண்டுமென்றே நீர் பற்றாக்குறையை ஏற்படுத்தி, காவிரி நீரை முழுமையாக, தன் உபயோகத்திற்கே கர்நாடகா பயன்படுத்தும். பெங்களூரு குடிநீர் தேவைக்கு, நெட்கெல் நீர்த்தேக்கத்திலிருந்து நீர் எடுக்கப்பட்டு வருகிறது. எனவே, மேகதாது அணை நீர் தேவையே இல்லை. இதையும் மீறி அணை கட்டப்பட்டால், கர்நாடகா, தன் பாசன பரப்பை அதிகரிக்கும்.

கிருஷ்ணராஜ சாகர், கபினி மற்றும் பில்லி குண்டுலுவுக்கு இடைப்பட்ட பகுதிகளில், தற்போது தமிழகத்திற்கு எந்தவிட தடங்கலும் இன்றி கிடைத்து வரும் தண்ணீர், தடுத்து நிறுத்தப்பட்டுவிடும். இதனால், தமிழகத்திற்கு, ஜூன் முதல், செப்டம்பர் மாதங்களுக்கான பாசன நீர் கிடைக்காது. எனவே, தமிழகத்தின் ஒப்புதல் பெறாமல் அளிக்கப்பட்டுள்ள மத்திய நீர்வள ஆணையத்தின் அனுமதியை திரும்ப பெற வேண்டும். இவ்வாறு அந்த குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

நழுவிய அதிகாரி!

காவிரி ஆணைய கூட்டத்தின் முடிவில், தமிழக அதிகாரி பிரபாகர், நிருபர்களிடம் கூறியதாவது:நீர்வள ஆணையத்தின் அனுமதி தவறு; இதை திரும்ப பெற வேண்டுமென வலியுறுத்தினோம். காவிரி படுகையில் புதிய திட்டங்களுக்கு அனுமதி அளிக்கையில், கீழ் மாநிலங்களிடம் ஆலோசிக்க வேண்டும் என்றும் கூறினோம். இவ்வாறு அவர் கூறினார். இதையடுத்து, 'இறுதியாக, ஆணையம் என்ன தான் கூறியது' என, செய்தியாளர்கள், அவரிடம் கேட்டனர். அதற்கு அவர், பதில் அளிக்காமல் நழுவிச் சென்றார்.


கர்நாடகாவுக்கு அனுமதி தந்தது ஏன்?

காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தின் முடிவில், அதன் தலைவர், மசூத் உசேன், நிருபர்களிடம் கூறியதாவது:இந்த ஆண்டு பெய்த பருவமழை காரணமாக, காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக, எந்த ஒரு பிரச்னையும் பெரியதாக எழவில்லை. மேகதாது அணை குறித்த அறிக்கைக்கு அனுமதி அளித்தது, மத்திய நீர்வள ஆணையம் தான். தற்போது நடப்பது, காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஆலோசனை கூட்டம் மட்டுமே. மேகதாது விவகாரத்திற்காக கூட்டப்பட்டதல்ல, இன்றைய கூட்டம். இருப்பினும், அது குறித்து, தமிழகம் சார்பில், எதிர்ப்பு கருத்துகள் கூறப்பட்டன. இவை அனைத்தையும், ஆணையம் பரிசீலிக்கும். கர்நாடகாவின் ஆய்வறிக்கை, காவிரி ஆணையத்தின் பரிசீலனைக்கு உட்படுத்தப்படும்.காவிரி ஆணையம் ஒப்புதல் தந்த பின் தான், அந்த அறிக்கையை, மத்திய நீர்வளத்துறையின் நிபுணர் குழு, பரிசீலனைக்கு எடுக்கும்.எனவே, ஆய்வறிக்கைக்கு அனுமதி அளித்துவிட்டதாலேயே, புதிய அணைக்கு அனுமதி அளித்துவிட்டதாக அர்த்தம் இல்லை. சில நிபந்தனைகளின் அடிப்படையில், மிகுந்த கவனத்துடன், அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதை, பெரிய விஷயம் ஆக்க வேண்டிய அவசியமே இல்லை. நீர்வள ஆணையம் அளித்த அனுமதியை ரத்து செய்வது குறித்து, கூட்டத்தில் ஏதும் விவாதிக்கப்படவில்லை. ரத்து செய்யும் அதிகாரம் உள்ளதா என்பது குறித்து, கருத்து கூற விரும்பவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.


- நமது டில்லி நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Gopi - Chennai,இந்தியா
04-டிச-201815:55:21 IST Report Abuse

Gopiஇதை நல்லதாகவே எடுத்துக்கொண்டு, பெரியார் அணைபோல இந்த அணையின் கட்டுப்பாட்டை தமிழகத்திடம் விட்டு விட வேண்டும். நமக்கு உபரி நீர் கடலில் செல்லாமல் கர்நாடக எல்லையிலேயே தேக்கி பின்னர் தேவைப்படும்போது தமிழகத்திற்குள் வருவித்துக் கொள்ளலாம்

Rate this:
நக்கீரன் - திருநெல்வேலி சீமை,இந்தியா
04-டிச-201810:53:05 IST Report Abuse

நக்கீரன்இவனுங்கள இன்னுமா நம்புறீங்க? திருட்டு பயல்கள். எல்லாமே பேச்சுதான். எதிலும் செயல்பட மாட்டார்கள். ஏனென்றால், செயல்பட தெரியாது. ஆனால், மக்கள் பணத்தை நன்கு கொள்ளையடிக்க தெரியும். இனி, இவர்களை மட்டுமல்ல, இவர்களுக்கு ஓட்டு போடுகிறவர்களையும் அடிக்க வேண்டும். மக்களே, நீங்கள் நன்றாக வாழ வேண்டுமென்றால், தயவு செய்து இந்த திருட்டுகளை மீண்டும் தேர்ந்தெடுக்காதீர்கள் என்று உங்களை மன்றாடி கேட்டுக்கொள்கிறேன்.

Rate this:
rajan. - kerala,இந்தியா
04-டிச-201809:32:56 IST Report Abuse

rajan.  சரிதான் போ. இப்போ தான் இத்தனை காலம் காவிரி கேஸுன்னு செலவு பண்ணி ஓஞ்சு வர்றப்ப மறுபடியும் அந்த வக்கீல் கூட்டத்துக்கு மக்கள் வரிப்பணம் தண்ணியா பாய புதுசா மேகதாது கேஸுக்கு வழிவகுத்து கொடுத்துட்டானுங்க. இனி இந்த கேசு இன்னொரு முப்பது வருஷம் ஓட்டும். இப்படி தான் எல்லாவனும் இனி தண்ணி போட்டுக்கிட்டே தான் அலையனும். பேசாம அந்த டெல்டா அத்தனையும் கர்நாடகத்திற்கு சாசனம் பண்ணீடுங்கப்பா. பிரச்சினை மொத்தமா தீரும். அப்போ நம்மூரு மணல் மாபியாக்களை என்ன பண்ணுவீங்க. ஊம் அவனுங்களை எல்லாம் விட்டு நாமொரு அரசியல்வாதிங்க வீட்டை நல்ல தோண்டி பார்க்க சொல்லு

Rate this:
மேலும் 6 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X