'கசாப்பு கடைக்கு காவல் காக்கும் போலீசு?'

Added : டிச 03, 2018 | |
Advertisement
பெருமாள் கோவிலில் நடந்த ஆறாட்டு விழாவில், ஐயப்ப சுவாமியை தரிசிக்க சித்ராவும், மித்ராவும் சென்றிருந்தனர். விடுமுறை நாள் என்பதால், பக்தர் கூட்டத்துக்கு பஞ்சமில்லை.இருவரும் தரிசித்து விட்டு புறப்பட்டனர். வழியில் இருந்த ரியல் எஸ்டேட் விளம்பர போர்டை பார்த்த, மித்ரா, ''அக்கா... பஞ்சாயத்துல, 5,000 ரூபாய் வசூலிக்கறாங்களாம்,'' என்றாள் மித்ரா.''எதுக்குடி? அவ்ளோ பணம்
 'கசாப்பு கடைக்கு காவல் காக்கும் போலீசு?'

பெருமாள் கோவிலில் நடந்த ஆறாட்டு விழாவில், ஐயப்ப சுவாமியை தரிசிக்க சித்ராவும், மித்ராவும் சென்றிருந்தனர். விடுமுறை நாள் என்பதால், பக்தர் கூட்டத்துக்கு பஞ்சமில்லை.இருவரும் தரிசித்து விட்டு புறப்பட்டனர்.
வழியில் இருந்த ரியல் எஸ்டேட் விளம்பர போர்டை பார்த்த, மித்ரா, ''அக்கா... பஞ்சாயத்துல, 5,000 ரூபாய் வசூலிக்கறாங்களாம்,'' என்றாள் மித்ரா.''எதுக்குடி? அவ்ளோ பணம் வசூலிக்கிறாங்க,'' சித்ரா கேட்டாள்''இல்லக்கா, வீடு கட்ட 'பில்டிங்' அப்ரூவல் வாங்கறாங்களே அதுக்காம். இதுவரைக்கும் பஞ்சாயத்து, தலைவர்கள் வாங்கறத வாங்கிட்டு, 'அப்ரூவல்' கொடுத்துட்டு இருந்தாங்க. இப்ப தனி அலுவலர்கள் காட்டில், வடகிழக்கு பருவமழை அமோகமாக கொட்டுதாம்,'''' சின்ன வீடோ... பெரிய வீடோ...! எதுவா இருந்தாலும், 5 ஆயிரம் ரூபாய் கொடுத்தா மட்டும்தான் அப்ரூவல். அதுக்கும் கூட, ஒரு மாசம் காத்திருக்கணுமாம்.
தனி அதிகாரிகள் யார்கிட்டயும் நேரடியா 'டீல்' பண்றதில்லை''''செக்ரட்டரி, டேங்க் ஆப்ரேட்டர்தான் 'வாங்கி' கொடுக்கறாங்களாம். ஆனால், அப்ரூவலையும் இழுத்தடிச்சுதான் கொடுக்கறாங்களாம்.'' என்று விளக்கினாள் மித்ரா.''என்னடி மித்து. பெரிய தொகையாக சம்பளம் வாங்கினாலும், இந்த கிம்பளம் வாங்காட்டி, இவங்களுக்கு துாக்கமே வராதுடி,''''அக்கா... இதே மாதிரி, ''புயல் மழை பேஞ்சதுலயும், ஒரு 'குரூப்' லாபம் பார்த்திருச்சாம்.
உண்மையா?''''ஆமாண்டி, நுாறு நாள் திட்டத்துல தினமும், 12 ஆயிரத்துக்கும் அதிமானவங்க வேலை பார்க்கறாங்க. புயல்மழை வந்தப்ப, ரெண்டு நாள் மாவட்டம் முழுவதும் மழை இருந்துச்சு. ஆனா, அந்த ரெண்டு நாளுமே, நுாறு நாள் வேலை நடந்திருக்குனு எழுதி வச்சிருக்காங்க''''பள்ளி, கல்லுாரி 'லீவு' விடற அளவுக்கு மழை பெய்தப்பவும், எல்லா யூனியனிலும், மழை தட்டியெடுத்துச்சு. ஆனா, அந்த நேரத்துலயும் நுாறு நாள் திட்டத்துல, தொழிலாளருங்க வேலை செஞ்சதா, வருகை பதிவேடு தயாரிச்சிட்டாங்க''''அதேநேரம், ைஹயர் அபிஷியல்ஸ் புயல் பாதித்த பகுதிக்கு போயிட்டதால, ஏகத்துக்கும் 'தில்லு முல்லு' நடந்துருக்கு. கலெக்டர் கொஞ்சம் விசாரிச்சா பரவாயில்லைன்னு, எல்லா யூனியனிலும் பேசிக்கறாங்கடி,'' என்றாள்.
''சம்பந்தப்பட்ட அதிகாரியின் கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா?'' என மித்ரா கூறவும், சிக்னலில் வண்டியை நிறுத்தினாள் சித்ரா.மையத்தடுப்பில் ஒட்டியிருந்த போஸ்டரில் வாசன் சிரித்து கொண்டிருந்தார். அதைப்பார்த்த சித்ரா, ''இந்த கூத்து கேளுடி மித்து. ''சென்னையில் இருக்கிற எம்.எல்.ஏ., ஹாஸ்டல்ல சேதம் செஞ்சதால, 8,500 ரூபா 'பைன்' போட்டிருக்காங்க,'' என்றாள் சித்ரா.''அங்கே யாரு போயி தங்கி, சேதமாயிடுச்சாம்?''''மாஜி' எம்.எல்.ஏ., வீட்டுக்கு ரெவின்யூ ஆபீசில, இருந்து 'நோட்டீஸ்' வந்திருக்கு. அதில், அவரு எம்.எல்.ஏ.,வாக இருந்தப்ப, ஜன்னல் கதவு சேதமாகியிருச்சு. 8,500 ரூபாய் கட்டுங்கனு, இருக்குதாம். இத்தனை வருஷம் கழிச்சு, 'நோட்டீஸ்' கொடுத்திருங்காங்க,''''அந்த எம்.எல்.ஏ.,வும் இப்ப இல்லை.
யார்கிட்ட வசூல் பண்ணுவாங்கன்னு தெரியலை. 18 வருஷம் கழிச்சு நோட்டீஸ் வருதுனா, ஆபீசர்ஸ் எப்டியிருக்காங்கன்னு பார்த்துக்கோடி,''''எல்லாம், அந்த கொங்கணகிரி முருகப்பெருமான் பார்த்துக்குவார்,''என்று சொன்ன மித்ரா, மங்கலம் ரோட்டில், தென்பட்ட கோவில் ராஜகோபுரத்தை பார்த்து கும்பிடு போட்டாள்.அப்போது, ஒரு வேனில், மாடுகளை ஏற்றி சென்றதை பார்த்த சித்ரா, ''நம்ம மாவட்டத்தில் கோமாரி நோய் பாதிப்பு அதிகமாக இருக்கும் போலிருக்கே,'' என்றாள் சித்ரா.''ஆமாங்க்கா.. நானும் கேள்விப்பட்டேன். இதில் கொடுமை என்னவென்றால், நுாற்றுக்கும் மேற்பட்ட மாடுகள் இறந்திடுச்சாம். எல்லா மாடுகளுக்கும் தடுப்பு ஊசி போட்டதாக அதிகாரிகள் சொல்றாங்க,''''ஆமாம் மித்து. மாவட்டத்தில், மொத்தமே, 2 லட்சத்துக்கும் குறைவாகத்தான் மாடுகள் இருக்கிறது. ஆனா, மூன்றரை லட்சம் இருக்குதுன்னு தடுப்பூசி, திருப்பூருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்குதாம்.
இது என்ன கணக்கோ தெரியலை. ஊசி போட்டும் மாடு இறந்தது, விவசாயிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.''''ஏன்க்கா... சம்பந்தப்பட்ட துறை அமைச்சருக்கு தெரியாதா? இறந்த மாடுகளோட எண்ணிக்கையையும் குறைச்சு சொல்றாங்க. இத்தனை 'கோக்குமாக்கு' நடக்குது, அவருக்கு தெரியாதா? ஒருவேளை, அமைச்சரை 'ஐஸ்' வைக்க, அதிகாரிகளே இப்படி சொல்றாங்களோ என்னவோ?''''மித்து, குறிப்பா, காங்கயம் வட்டாரத்தில், ஏகப்பட்ட மாடுகளுக்கு, மடி வீக்கம், மடிப்பகுதியில் காயங்களுடன் உள்ளன. ஏதோ புதிய வைரஸ் நோய் தாக்கிடுச்சுன்னு, கால்நடை வளர்ப்போர் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது,'' என்றாள் சித்ரா.அப்போது, பல்லடம் செல்லும் டவுன் பஸ் பிரேக்டவுனாகி நின்று கொண்டிருந்தது. உடனே, மித்ரா, ''அக்கா... பல்லடம் கிளைக்கு புதுசா வந்திருக்கிற ஆபீசர், ஊழியர்களை விரட்டிவிரட்டி, வேலை வாங்குறாராம் தெரியுங்களா?'' என்றாள்.
''ம்... ம்.. தெரியும். கோவையிலுள்ள ெஹட் ஆபீசில், அதிகாரி ஒருத்தரிடம் இவர் தகராறு செஞ்சு, கை வச்சுக்கற அளவுக்கு சீரியஸ் ஆயிடுச்சாம். அதனால், பல்லடத்துக்கு அனுப்பி வச்சுட்டாங்க. அந்த எரிச்சலில், இங்கு வந்து, ஊழியர்களை போட்டு பெண்டு நிமிர்த்துறாராம்,''''ராத்தரி 12:00 மணிக்கு, டிரைவர்க கிட்ட, மைலேஜ் ஏன் குறைஞ்சது? கண்டக்டர்களிடம், கலெக்சன் ஏன் கம்மியாச்சு? அப்படீன்னு, கேள்வி மேல் கேள்வி கேட்கிறாராம்?''''அக்கா.. அது சரிதாங்க. அதுவும் ஒரேயடியாக 'கறாரான' ஆபீசர் மாதிரி தன்னைக் காட்டிக்கிறாருன்னுதான், எல்லாரும் புகார் செய்யறாங்க,''''சரி... பார்க்கலாம். போகப்போக என்ன ஆகுதுன்னு?'' என்ற சித்ரா, கமிஷனர் ஆபீஸ் செல்லும் வழியில் உள்ள 'சாமிநாதன் ஜூஸ்' என்ற போர்டு வைத்திருந்த கடை முன் வண்டியை நிறுத்தினாள்.இருவரும் உள்ளே சென்று அமர்ந்தனர்.
உடனே, மித்ரா, ''ரெண்டு பைனாப்பிள்'' என்று ஆர்டர் கொடுத்துவிட்டு, அங்கிருந்த பேப்பரை புரட்டினாள். அதிலிருந்த செய்தியை படித்துவிட்டு, “என்னதான் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், யாருமே திருந்தற மாதிரி தெரியல” என்றாள்.“இந்த டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வை பத்திதானே சொல்கிறாய் மித்து?''''இல்லக்கா. கோழிப்பண்ணை ஊரில், சமீபத்துல சட்ட விழிப்புணர்வு முகாம் ஒன்று நடந்துச்சு. அதில் பேசின, ரிட்டயர்டு ஜட்ஜ் ஒருத்தர், சட்டப்பிரிவுகள் சம்பந்தமாக, முக்கியமான விஷயங்களை பத்தி சொல்லிட்டு இருந்தாரு. ஆனால், போலீஸ்காரங்க, அவங்க பாட்டுக்கு, மொபைல் போனில் நோண்டிட்டு இருந்தாங்க. இன்னும் கொஞ்சம் பேர், துாங்கிட்டாங்க,''“அட பாவமே, இவங்களா சட்டம் ஒழுங்க காப்பாத்த போறாங்க.
இது எஸ்.பி.,க்கு தெரியாதா?''“அவங்க, புரோகிராம ஸ்டார்ட் பண்ணிட்டு, கிளம்பிட்டாங்க. அப்புறம் ஜட்ஜ் பேசி முடிச்சப்புறம்தான் வந்தாங்களாம்,''''சரி. இந்த விஷயம் அவங்களுக்கு தெரிஞ்சு என்ன பண்ணப்போறாங்க. அவங்கவங்களுக்கே இது தெரியோணும்,'' என்றாள் சித்ரா.''ஊருக்கெல்லாம் உபதேசம் பண்ணுவாங்களாம்... இவங்க கரெக்ட்டா இருக்க மாட்டாங்களாம்,'' என்று புதிர் போட்டாள் மித்ரா.''எந்த விஷயத்தை, யாரைப்பற்றி சொல்கிறாய்?''''நம்ம போலீசை பத்திதான். முக்குக்கு முக்கு நின்று, 'லைசென்ஸ் இருக்கா... இன்சூரன்ஸ் இருக்கா..?'ன்னு கேட்கறவங்க, சரியா இருக்கோணும்,''''ஓ.கே., விஷயத்தை சொல்லுடி''''ரெண்டு நாளைக்கு முன்னாடி, காங்கயம் ரோட்டில் பஸ்சில் இருந்து இறங்கிய பாட்டி ஒருத்தர், ரோட்டை கிராஸ் செஞ்சப்ப, டூ வீலரில் வந்த ரூரல் போலீஸ் ஏட்டு ஒருத்தர், மோதிட்டாராம். காயமடைஞ்ச மூதாட்டிக்கு சிகிச்சை செலவை கொடுக்கறேன்னு சொல்லியிருக்காரு,''''ரெண்டு நாள் கழிச்சு. 'நான் மோதவில்லை, எனக்கு பின்னாடி வந்த வண்டிதான் மோதிடுச்சு'ன்னு, புதுக்கதைய சொன்னார் ஆனா, சம்பவம் நடந்த இடத்தில கெடைச்ச 'சிசிடிவி' புட்டேஜில், ஏட்டய்யா, பாட்டி மீது மோதுவது தெளிவாக தெரிகிறது,''''அப்புறம் என்னாச்சுடி?''''அதைப்பார்த்த ஏட்டு, அந்தர் 'பல்டி'அடிச்சுட்டார். அப்புறம் ஒரு முக்கியமான விஷயத்தை கேளுங்க. அவரின் டூவீலருக்கு இன்சூரன்ஸ் பண்ணவேயில்லையாம்.
அதனாலதான், பணம் கொடுக்க ஒப்புகிட்டாராம்,'' என்றாள் மித்ரா.''நல்லவேளை 'சிசிடிவி' இருந்ததால், உண்மை தெரிஞ்சுது. இல்லேன்னா, 'நான் அவனில்லை' ஐயா, சமாளிச்சிருப்பாரு,'' என்று கூறி சிரித்தாள் சித்ரா.''இந்த ஏட்டய்யா கூட பரவாயில்லைடி. குண்டடத்தில், ரெண்டு போலீஸ்காரங்க, கறிக்கடை நடத்துறாங்களாம்,''ஜூஸ் குடித்து கொண்டிருந்த மித்ரா, சட்டென்று நிமிர்ந்து, ''நீங்க ஒண்ணும் காமெடி கீமெடி பண்ணலையே?'' என்றாள்.''அட.. நுாறு சதவீதம் உண்மை இது. அந்த ஸ்டேஷனை சேர்ந்த ரெண்டு போலீஸ்காரர், ரோந்து போகிறோம்னு சொல்லிட்டு, மேட்டுக்கடையில் உள்ள கறிக்கடையில் உட்கார்ந்துக்கிறாங்களாம். அப்பப்போ, கடைக்காரர் வாங்கி கொடுக்கும் 'சரக்கை' குடிச்சுட்டு, கறியும் சாப்பிட்டு, ஜாலியாக இருக்கிறாங்களாம்,''''சரக்கடிச்சிட்டு, 'மட்டனை' வெட்டறதோடு நிறுத்திக்கறாங்களா? இல்லாட்டி, கறியை 'வெட்டி' விக்கற வேலையும் பார்க்குறாங்களா?'' என்று கூறி சிரித்தாள் மித்ரா.''இன்னும் கேளு. இப்படி அடிக்கடி போலீஸ், அங்கே 'டேரா' போடறதாலே, கறிக்கடைக்காரர், 'எங்க கடைக்கு எப்போவுமே, புல் செக்யூரிட்டின்னு, சொல்றாராம்,'' என்று சித்ரா சொல்லவும், ஜூஸ் கடைக்காரர், ''ஏம்பா.. இந்த பரதனும், கதிரும் வந்தா.. சீக்கிரமா கடைக்கு வரச்சொல்லு?'' என்ற மொபைல் போனில் சத்தமாக பேசி கொண்டிருந்தார்.''அக்கா... அதே ஊருக்கு பக்கத்தில் இருக்கற ஸ்டேஷன் மேட்டரையும் கேளுங்க,''''ம்.. சொல்லு..'' என்ற சித்ரா சீரியஸாக, ஜூைஸ குடித்து கொண்டிருந்தாள்.
''காங்கயம், ஊதியூர் ஸ்டேஷன்களில், எஸ்.பி., ஏட்டுகள், மணல் கடத்தல், 24 மணி நேர 'சரக்கு' விற்பனை, சேவல் கட்டு.. இப்படி பல சட்டவிரோத செயல்களுக்கு, ரொம்ப ஆதரவாக இருக்காங்கன்னு எஸ்.பி.,க்கு ரிப்போர்ட் போயிடுச்சு,''''அப்புறம் மின்கோபுர டவர் எதிர்ப்பு விவகாரத்தையும், சரியா சொல்றதில்லைன்னு சொல்லி, பக்கத்தில் உள்ள தாராபுரம் சப்-டிவிஷனில் இருந்து, போலீசாரை இங்கே நியமிச்சிட்டாங்களாம்.
இதைப்பார்த்துட்டு நொந்து போன, எஸ்.பி., ஏட்டுகள், 'எங்கள வேற ஸ்டேஷனுக்காவது மாத்தியிருக்கலாம்'ன்னு, புலம்பி தள்றாங்களாம்,''''வாங்கற சம்பளத்துக்கு விசுவாசமாக, கடமையோட வேலை பார்க்கலைன்னா.. இப்படித்தான் ஆகும். இந்த போலீஸ்காரங்கதான் இப்படின்னா.. அவங்க மனைவிமார்கள் பண்ற பிசினஸ் பத்தி கேட்டீன்னா.. உனக்கு தலைசுத்தும்,'' என்றாள் சித்ரா.'
'அப்படியா.. அப்படின்னா சீக்கிரமா சொல்லுங்க''''பக்கத்திலுள்ள லிங்கேஸ்வரர் ஊர் ஸ்டேஷன் குவார்ட்டர்சில் குடியிருக்கும் சில போலீஸ்காரங்க மனைவிமார்கள், கந்து வட்டிக்கு பணம் கொடுக்குறாங்களாம். இதுக்கு, சம்பந்தப்பட்ட போலீசோட 'சப்போர்ட்' உண்டாம். இதை எங்கேன்னு போயி சொல்ல?'' என்று சொன்ன சித்ரா ஜூஸ்க்கு பணம் கொடுத்து விட்டு வெளியே வந்து வண்டியை ஸ்டார்ட் செய்தாள். மித்ரா, பில்லியனில் அமர, அவிநாசி ரோட்டில் எக்ஸ்லேட்டரை முறுக்கினாள் சித்ரா.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X