ராத்திரி மாறுன பேனரு... யாரு அதுக்கு ஓனரு!

Added : டிச 04, 2018
Share
Advertisement
2.0 சினிமா டிக்கெட் முன்பதிவு செய்ய, தியேட்டருக்கு வந்திருந்தனர் சித்ராவும், மித்ராவும். இன்னும் கவுன்டர் திறக்கவில்லை. வரிசையில் சிப்ஸ் கொறித்தபடி இருவரும் காத்திருந்தனர்.''படம் எப்படியிருக்காமா....விசாரிச்சியா,'' என்றாள் சித்ரா.''ஹாலிவுட்காரங்க ரேஞ்சுக்கு சங்கர் மிரட்டியிருக்காருன்னாங்க,'' என்று பதிலளித்தாள் சித்ரா.'பேசியபடி இரண்டு சிப்சை எடுத்து
 ராத்திரி மாறுன பேனரு... யாரு அதுக்கு ஓனரு!

2.0 சினிமா டிக்கெட் முன்பதிவு செய்ய, தியேட்டருக்கு வந்திருந்தனர் சித்ராவும், மித்ராவும். இன்னும் கவுன்டர் திறக்கவில்லை. வரிசையில் சிப்ஸ் கொறித்தபடி இருவரும் காத்திருந்தனர்.''படம் எப்படியிருக்காமா....விசாரிச்சியா,'' என்றாள் சித்ரா.''ஹாலிவுட்காரங்க ரேஞ்சுக்கு சங்கர் மிரட்டியிருக்காருன்னாங்க,'' என்று பதிலளித்தாள் சித்ரா.'பேசியபடி இரண்டு சிப்சை எடுத்து வாயில் போட்ட மித்ரா, ''இந்த படத்துல வர்ற சிட்டி வயித்துல 'சிப்' பொருத்தியிருக்கற மாதிரி, நம்மூர் வி.ஐ.பி.,க்கும் ஒரு 'சிப்' பொருத்தினாதான் சரிப்பட்டு வருவாரு போல,'' என்றாள்.''ஏன்...என்னாச்சு?'''
'எங்கே போனாலும் லேட்டா போறதே, வழக்கமா போச்சு அவருக்கு. ஒவ்வொருத்தரும் சோறு தண்ணி சாப்பிடாம காத்திருப்பாங்கன்னு, புரிய மாட்டேங்குது. அதான் இன்னின்ன இடத்துல, இந்தந்த நிகழ்ச்சின்னு, 'புரோகிராம்' செட் பண்ணுன 'சிப்' பொருத்திக்கறது நல்லதுதானே'' என்று சிரித்தாள் மித்ரா.''நீ சொல்றது சரிதான். குறைஞ்சது நாலு மணி நேரமாவது காக்க வச்சிர்றாராம். கல்லுாரி நிகழ்ச்சிகளுக்கு துறை சார்ந்த வல்லுனர்களை கூப்பிடும்போது, லிஸ்ட்ல வி.ஐ.பி., பேர் இருந்தா, வரலைன்னு சொல்லிர்றாங்களாம்,'' என்று தலையாட்டினாள் சித்ரா.''எல்லாம் நேரம்' என்று 'கமென்ட்' அடித்த மித்ரா, ''கேள்விப்பட்டியா, அவிநாசி ரோட்டுல ராத்திரியோட ராத்திரியா எல்லா பேனரையும் துாக்கிட்டாங்க,'' என்று அடுத்த மேட்டருக்கு தாவினாள்.அதற்கு சித்ரா, ''யாரு பேனர...யாரு துாக்குனா?'' என்று கேட்டாள்.''ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில, ஊதிய உயர்வு அரசாணை குடுத்ததுக்காக, கொடீசியா வளாகத்தில, நன்றி அறிவிப்பு மாநில மாநாடு நடந்துச்சு...
இதுக்காக, அவிநாசி ரோட்டுல, ஏகப்பட்ட பிளக்ஸ் பேனர்கள வைச்சாங்க...இதில லோக்கல் மினிஸ்டர் படத்தை மட்டும் பெருசா போட்டு, ஜெ., படத்த குட்டியா போட்டுட்டாங்க...,'' என்றாள் மித்ரா.''ம்ம்...அப்புறம்?''''இதை பத்தி யார் காதுக்கோ தகவல் போயி, உடனே பேனர்களை துாக்க சொல்லி உத்தரவு வந்துருச்சு...இதனால ராத்திரியோட, ராத்திரியா எல்லா பேனர்களையும் துாக்கிட்டு, ஜெ., படத்தோட, சி.எம்., மினிஸ்டர் படம் இருக்கிற மாதிரி, சில பேனர்கள மட்டும் வைச்சு சமாளிச்சிருக்காங்க,'' என்றாள் மித்ரா.''கட்சியில மினிஸ்டருக்கு நல்ல பேரு இருக்கு...அதை கெடுத்திட கூடாதுன்னு உஷாராயிருப்பாரு,'' என்றாள் சித்ரா.''இவரை மாதிரி, நம்மூர் ரெண்டு மாவட்ட கல்வி அதிகாரங்களுக்கு டீச்சர்ஸ்கிட்ட நல்ல பேரு இருக்கு. ஒருத்தர் சிட்டி கல்வி அதிகாரி கீதா. ஸ்கூல் விசிட் போனா, பாத்ரூம் வரைக்கும் கூட போயி, சுத்தமா இருக்கான்னு 'செக்' பண்ணுராறாம்,'' என்று திடீரென கல்வி டிபார்ட்மென்டுக்குள் நுழைந்தாள் மித்ரா.''இன்னொருத்தரு?''''பேரூர் கல்வி மாவட்ட (பொ)அதிகாரி பழனிசாமி. பிரைவேட் ஸ்கூல்களுக்கு போனா, டீ கூட குடிக்கறதில்லையாம். இவங்க ரெண்டு பேருக்கும் 'ஆப்போசிட்டா' இருக்காங்க மூணாவது லேடி அதிகாரி,'' என்றாள் மித்ரா.
''நானும் கேள்விப்பட்டிருக்கேன்... பிரைவேட் ஸ்கூலுக்கு இவங்க விசிட் போனாலே, வெயிட்டாதான் திரும்புவாராம். சி.இ.ஓ., கண்டுக்க மாட்டாரான்னு, எல்லாரும் ஏங்கறாங்களாம்,'' என்றாள் சித்ரா.அதற்குள் டிக்கெட் கவுன்டர் வந்து விட, இரவு காட்சிக்கு இரண்டு டிக்கெட் வாங்கினாள் மித்ரா. அப்போது திடீரென மித்ரா, ''அட மறந்துட்டோமே...நம்ம கீதாவும் படம் பார்க்க வர்றேன்னு சொல்லியிருந்தா,'' என்றாள்.''அவ, எஸ்.எஸ்.குளத்துல இருந்து வர்றதுக்குள்ளே விடிஞ்சிரும்,'' என்று அர்த்தபுஷ்டியாக சிரித்தாள் சித்ரா.''நீ சொன்னியே சிட்டி டி.இ.ஓ., பாத்ரூம் வரைக்கும் ஆய்வு பண்றாங்கன்னு. நம்ம பி.ஆர்.எஸ்., வளாகத்துல லேடி பி.சி.,யை வச்சே அங்கிருக்கற டாய்லெட்டெ, பள்ளி முதல்வர் கழுவ வைக்கிறாராமா. டி.இ.ஓ., மாதிரி திடீர்னு ஒருநாள் அதிகாரிங்க, இங்கயும் விசிட் அடிக்கணும்,'' என்றாள் மித்ரா.''அதுக்கு தனியா வேலைக்கு ஆள் போட்டிருந்தாங்களே...'' என்று புருவத்தை சுளித்தாள் சித்ரா.''உண்மைதான். அவங்கள நிறுத்திட்டு, அந்த பணத்தை லவட்டிக்கறாங்கன்னு லேடி பி.சி.,யெல்லாம் அழ மாட்டாத குறையா புலம்புறாங்க. மாற்றம் வரணும்,'' என்றாள் மித்ரா.''எங்கே வருது மாற்றம்? சிட்டி போலீசுல பல வருஷமா ஒரே ஸ்டேஷன்ல, போக்குவரத்து பிரிவுல வேலை பார்க்கறவங்க, அங்கயே டேரா போட்டு உக்காந்துட்டு இருக்காங்க... நல்ல வருமானம்னு பேச்சு. பெரிய ஆபிசர்சும் சப்போர்ட்டு. இவங்க எல்லாத்தையும் மாத்தாத வரை, இங்க எதுவும் மாறாது,''என்றாள் சித்ரா.
பேசியபடியே இருவரும் ரயில்வே ஸ்டேஷன் எதிரே உள்ள, ஒரு ஜூஸ் கடையில் நுழைந்தனர். ஜூஸ் ஆர்டர் செய்து விட்டு அமர்ந்தனர்.ஐந்து நிமிடமாகியும் ஜூஸ் வந்தபாடில்லை. மித்ரா எழுந்து சென்று சவுண்டு கொடுத்து விட்டு உஷ்ணமாக வந்து உட்கார்ந்தாள்.''சுத்த மோசம். போய் கேட்கலைன்னா நம்மள மறந்தே போயிருப்பாங்க,'' என்றாள்.''கூல்...கூல். கேட்டாதான் கிடைக்கும்னு நினைச்சுதான், ஊராட்சியில என்ன ஒர்க் என்ன பண்ணுனாலும், நம்ம மாவட்ட ஊராட்சி லேடி அதிகாரியும், இன்ஜினியரும் கான்டிராக்டர்கள்கிட்ட கேட்டு, கேட்டு பணம் சேர்க்கிறாங்களோ என்னவோ...,'' என்று சிரித்தாள் சித்ரா.''நேத்து நம்ம காலேஜ் வீக்லி மீட்டிங்ல பேசிட்டிருக்கும்போது, செகண்ட் இயர் பத்மாவதியும் சந்திர சேகரும் இதையேதான் சொன்னாங்க,'' என்றாள் மித்ரா
.''என்னை முடிக்க விடு...இவங்க கறக்கிற பர்சன்டேஜை பார்த்து, 225 ஊராட்சிகள்ல பணிகளை டெண்டர் எடுத்துருக்கற கான்ட்ராக்டர்கள்லாம் 'ஷாக்' ஆயிட்டாங்களாம். நேரா லஞ்ச ஒழிப்புத்துறைல புகார் பண்ணிட்டாங்களாம்,'' என்றாள்.''சூப்பர்...சும்மா விடக்கூடாது,''''ஆனா, இந்த தகவல் எப்படியோ தெரிஞ்சு, இப்பல்லாம் எல்லா டீலிங்குகளையும் வெளியில் வச்சே முடிச்சுக்கிறாங்களாம்,'' என்றாள் மித்ரா.''லட்சுமிய கண்ட இடத்துக்கு வர வைக்கிறாங்கன்னு சொல்லு...இது ரொம்ப நாளைக்கு தாங்காது,'' என்று சிரித்தாள் சித்ரா.''லட்சுமின்னு சொன்னவுடனேதான் ஞாபகம் வருது. நெய்விளக்கு போட கோவில்கள்ல தடை இருந்தும், லட்சுமி நரசிம்மர் கோவில்ல நெய்விளக்கு விற்பனை ஜோரா நடக்குது. இதனால ஒரு குறிப்பிட்ட சிலர் மட்டும் காசு அள்ளறாங்க; அதிகாரிங்க ஆக்ஷன் எடுக்கணும்னு சில டிவோட்டீஸ் புகார் பண்ணியிருக்காங்க,'' என்றாள் மித்ரா.--''யார்கிட்ட புகார் பண்றதுன்னு தெரியாம இருக்காங்க, கோவை டி.டி.வி., அணி கட்சிக்காரங்க,'' என்று மீண்டும் அரசியலுக்கு 'ஜம்ப்' ஆனாள் சித்ரா.''ஏன்...என்னாச்சு?''''அந்த கட்சியோட கோவை முக்கியஸ்தர் மேலதான் புகார். கோவை கட்சி நிகழ்ச்சிகள்ல இவர், தன்னை மட்டும்தான் முன்னிலைப்படுத்திக்கிறாராம். மாஜி கவுன்சிலர் இதனால உறுமிக்கிட்டே இருக்காராம்,'' என்றாள் சித்ரா.
''சேலஞ்ச் விட்டு சொல்றேன். அவர் கட்சியில துரை மாதிரியாமா. சின்ன துரை சொன்னாலும், பெரிய துரை சொன்னாலும் ஒண்ணும் ஆகப்போறதில்லை,'' என்று கண்ணடித்தாள் மித்ரா.அதற்கு சித்ரா, ''நானும் கேள்விப்பட்டேன். திடீர்னு எலக்ஷன் வந்துச்சின்னா, யாரு சப்போர்ட்டும் அவருக்கு கிடைக்காதுன்னு கட்சிக்காரங்கள்லாம் பேசிக்கறாங்க'' என்றாள்.இருவரும் ஜூஸ் குடித்துக் கொண்டிருந்தபோது, வாட்டம் சாட்டமான ஒரு நபர் கடந்து சென்றார்.''யாருன்னு தெரியுதா... இவருதான் பேரூர் போலீஸ் லிமிட்ல புட்டுவிக்கி பாலம் பக்கத்துல உள்ள ஒரு தோட்டத்துல, ஒரு நம்பர் லாட்டரி வித்து, பணத்தை அள்ளுறவரு. ஒரு மணி நேரத்துக்கு ஒரு தடவை லக்கி டிராவும் உண்டாம்,'' என்றாள் மித்ரா கிசுகிசு குரலில்.''அப்படின்னா போலீஸ்லாம் என்ன செய்றாங்க?'' என்று கேட்டாள் சித்ரா.''சரியான விவரம் தெரியாதவளா இருக்கியே...ஏட்டுல இருந்து டி.எஸ்.பி., வரை ரெகுலரா மாமூல் போச்சுன்னா யாரு கண்டுக்குவா...சொல்லு பார்க்கலாம்'' என்றாள் மித்ரா.''நீ சொல்றது சரிதான். இந்த ஒரு நம்பர் லாட்டரியால, எத்தனை குடும்பங்க தெருவுல நிக்குது. போலீஸ்காரங்களுக்கு என்ன...வர்ற வரைக்கும் லாபம்தான்'' என்று சலித்தாள் சித்ரா.''சிவ...சிவா... இது எங்கே போயி முடியப்போகுதோ'' என்று கூறிய மித்ரா, எழுந்து ஜூஸ்க்கான பணத்தை கொடுத்தாள்.'
'போலீஸ்னு சொன்னதும்தான் ஞாபகம் வருது. துடியலுார் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன்ல இருக்கற அந்த அம்மா, 'நான் எஸ்.பி.,க்கு சொந்தக்காரி' ன்னு வர்றவன், போறவனையெல்லாம் மிரட்டுதாம்,'' என்றாள் சித்ரா.''இது அந்த எஸ்.பி.,க்கு தெரியாதாமா?''''தெரிஞ்சும் கண்டுக்காததால, ஆட்டம் ஓவரா போகுதாம். விபசார கேஸ்கள்ல, ஆக்ஷன் எடுக்கற மாதிரி ஆக்ட் பண்ணி, வீட்டை வாடகைக்கு விட்டவங்க கிட்ட கறந்துர்றாராம். ஒரு கேசை விட்டு வைக்கிறதில்லையாம்,'' என்றாள் சித்ரா.அப்போது போன் சிணுசிணுத்தது. எடுத்துப் பேசிய மித்ரா, ''ஹலோ மீனாம்பிகையா...டான்ஸ் ரிகர்சல்ல நேத்து ராத்திரி, கெட்ட ஆட்டமாமே...பார்த்து, காலு சுளுக்கிற போகுது,'' என்று சிரித்தபடி பேசி 'ஆப்' செய்தாள்.ஸ்கூட்டர் டவுன்ஹால் பக்கம் பறந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X