சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கணவன் சந்தேகம்:மனைவி பலி

Added : டிச 04, 2018
Advertisement

நிலக்கோட்டை:விளாம்பட்டியில் கணவன் சந்தேகப்பட்டதால் மனைவி தீக்குளித்து பலியானார்.விளாம்பட்டியைச் சேர்ந்த ஆண்டி மகன் வெள்ளையன், 35. கூலி வேலை செய்கிறார். இவரது மனைவி முத்துபாண்டியம்மாள், 29. இருவருக்கும் 10 ஆண்டுகளுக்கு முன்திருமணம் நடந்தது. 2 குழந்தைகள் உள்ளனர். வெள்ளையன் தனது மனைவிக்கும், நண்பர் சுரேசுக்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகப்பட்டு மனைவியிடம் தகராறு செய்துள்ளார்.மனமுடைந்த முத்துபாண்டியம்மாள், கணவன் முன்பே மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ வைத்து கொண்டார். வெள்ளையன் காப்பாற்ற முயன்றபோது, அவரது உடலிலும் தீப்பற்றியது. இருவரையும் மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அரசு மருந்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மதுரைஅரசு மருந்துவமனையில் சேர்ந்த முத்துப்பாண்டியம்மாள் நேற்று இறந்தார். விளாம்பட்டி எஸ்.ஐ., பரமேஸ்வரன் விசாரிக்கிறார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X