வாங்கியதோ ஒரு மாடு... கடனோ 2 மாடுகள்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வாங்கியதோ ஒரு மாடு... கடனோ 2 மாடுகள்

Added : டிச 04, 2018

பெரம்பலூர்: ஒரு மாட்டுக்கு கடன் வாங்கிய, பால் உற்பத்தியாளர்களை, இரண்டு மாடுகளுக்கு கடன் வாங்கியதாக்கூறி, கடனை திருப்பி செலுத்தக்கூறும் கூத்து பெரம்பலூரில் அரங்கேறியுள்ளது.
பெரம்பலூர், இலுப்பைக்குடி கிராமத்தைச் சேர்ந்த, பால் உற்பத்தியாளர்கள், பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த குறைதீர் கூட்டத்தில் கலெக்டரிடம் கொடுத்த மனுவில் தெரிவித்திருந்ததாவது:இலுப்பைக்குடி கிராமத்தைச் சேர்ந்த, 20 பேருக்கு, 2017 ஏப்ரலில், கூத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், நபர் ஒருவருக்கு தலா, 90 ஆயிரம் ரூபாய் வீதம் கறவை மாடு வாங்க, கடன் வழங்க அரசு அனுமதி வழங்கியது. இதில், முதல் தவணையாக நபர் ஒருவருக்கு தலா, 45 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. மாடு ஒன்றுக்கு தலா, 1,200 ரூபாய் கடன் தவணை பிடித்தம் செய்வதற்கு பதிலாக, இரண்டு கறவை மாடு கடன் வழங்கியதாகக் கூறி, 3 ஆயிரம் ரூபாய் பிடித்தம் செய்கின்றனர்.முதல் தவணை கடன் வழங்கி, 20 மாதம் முடிந்த பிறகும், இன்னொரு கறவை மாடு வாங்குவதற்கான கடன் தொகையை வழங்கவில்லை. இதுகுறித்து, கூட்டுறவு வங்கி மேற்பார்வையாளரிடம் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. கூடுதல் தொகை பிடித்தம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; இழப்பை ஈடுகட்ட வேண்டும். கறவை மாடு வாங்குவதற்கு, இரண்டாவது தவணை கடன் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X