இந்தியாவுடன் வலுவான உறவு ; அமெரிக்கா மகிழ்ச்சி

Added : டிச 04, 2018 | கருத்துகள் (16) | |
Advertisement
வாஷிங்டன்: அமெரிக்கா- இந்தியா இடையிலான உறவு வலுவாக உள்ளதாக அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர் ஜேம்ஸ் மாத்தீஸ் கூறியுள்ளார். குறிப்பாக மோடி தலைமையிலான அரசு வரலாற்றில் இல்லாத அளவிற்கு பல தடைகளை விலக்கி உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் 5 நாள் அரசு பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். மேலும் சமீபத்தில் மறைந்த முன்னாள் அதிபர்
Nirmala Sitharaman, James Mattis, PM Modi, அமெரிக்கா, இந்தியா, நிர்மலா சீதாராமன், ஜேம்ஸ் மாத்தீஸ் , பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப், பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், 
USA, India,  Prime Minister Modi, US President Trump, Defense Minister Nirmala Sitharaman,James N. Mattis, us defense secretary,

வாஷிங்டன்: அமெரிக்கா- இந்தியா இடையிலான உறவு வலுவாக உள்ளதாக அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர் ஜேம்ஸ் மாத்தீஸ் கூறியுள்ளார். குறிப்பாக மோடி தலைமையிலான அரசு வரலாற்றில் இல்லாத அளவிற்கு பல தடைகளை விலக்கி உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் 5 நாள் அரசு பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். மேலும் சமீபத்தில் மறைந்த முன்னாள் அதிபர் எச்.டபுள்யு புஷ்சுவுக்கு இரங்கல் தெரிவித்தார். இதற்கிடையில் அவர் அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர் ஜேம்ஸ் மாத்தீசை சந்தித்து பேசினார். இரு நாட்டு பாதுகாப்பு தொடர்பான விஷயங்கள் விவாதிக்கப்பட்டது.


பிரதமர் மோடிக்கு பாராட்டு


சந்திப்புக்கு பின்னர் நிருபர்களிடம் பேசிய ஜேம்ஸ் மாத்தீஸ் கூறியதாவது:
அமெரிக்க அதிபர் டிரம்ப் தலைமையிலான அரசு இந்தியாவுடன் சுமுக உறவில் எவ்வித முரண்பாடும் இல்லை. இரு நாட்டு புரிந்துகொள்ளுதலின்படியான விஷயங்களில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மோடி தலைமையிலான அரசு வரலாற்றில் இல்லாத அளவிற்கு தடைகள் அனைத்தும் விலக்கப்பட்டுள்ளது. இதனால் இருநாட்டு பாதுகாப்புதுறை ரீதியிலான உறவில் வேகமான முன்னேற்றம் காணப்படுகிறது. இது மகிழ்ச்சி அளிக்கிறது இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K E MUKUNDARAJAN - Chennai,இந்தியா
04-டிச-201815:06:56 IST Report Abuse
K E MUKUNDARAJAN பிரதமரின் ஆற்றலை நன்கு புரிந்துகொண்ட தமிழர்களும் நிறையவே உள்ளார்கள் என்பது ஆறுதலாய் உள்ளது. இவர்கள் மேலும் பல விஷயங்களில் நிறைய பதிவுகள் இட்டு எல்லா தமிழர்களையும் நல்ல புரிதலுக்கு ஆளாக்க வேண்டும். தமிழகம் முன்னேற இதுவும் ஒரு வழி, நாம் தொழில் வளர்ச்சி, கல்வி மேம்பாடு,சுய மரியாதை இவற்றில் பின் தங்கி உள்ளோம். அதாவது இலவச உபகரணங்கள்,டாஸ்மாக்.சாதிமத துர் பிரச்சாரம்,அகில இந்திய தேர்வுகளில் பின்னடைவு முதலியவற்றை சீர் செய்ய வேண்டும். மோடியை அறிவு பூர்வமாக விமர்சிக்கவேண்டும்.
Rate this:
Cancel
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
04-டிச-201813:56:43 IST Report Abuse
தமிழவேல் தடவாளங்கள் வாங்கினால் பல்லெல்லாம் வெளியே தெரியத்தான் செய்யும். சமீபத்திய ஒப்பந்தம் நடக்கவில்லை என்றால் இரானிய எண்ணெய்க்கு தடங்கல் வந்திருக்கும். ரஷியாகிட்டேயும் ஈரான்கிட்டீயும் வியாபாரத் தொடர்பு வைத்துக் கொள்வதால் அமேரிக்கா விடமும் பொருட்கள் வாங்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகின்றது. அனைவரிடமும் சுமுக உறவு வைத்துக்கொள்வதே நல்லது.
Rate this:
Newton - tamilnadu,இந்தியா
04-டிச-201814:12:52 IST Report Abuse
Newtonஎன்ன பண்றது? தளவாடங்களை நாமளே உருவாக்குற மாதிரி 65 ஆண்டுகள் ஆண்ட காங்கிரஸ் நம்மை உருவாக்கவில்லை. கடந்த நாலு வருசமா தானே அதுக்கு ஏற்பாடு பன்னிட்டிருக்கோம்? கொஞ்சம் காலம் எடுக்கத்தான் செய்யும்....
Rate this:
Cancel
Ansari - Thanjavur,இந்தியா
04-டிச-201813:49:14 IST Report Abuse
Ansari மண்ணில் விழுந்து , புரண்டாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று சொல்வது தான் பிஜேபிக்காரர்களின் யுக்தி.
Rate this:
Newton - tamilnadu,இந்தியா
04-டிச-201814:14:06 IST Report Abuse
Newtonஉறவு வலுவாக உள்ளதாக அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர் ஜேம்ஸ் மாத்தீஸ் கூறியுள்ளார்...
Rate this:
வல்வில் ஓரி - Koodal,இந்தியா
04-டிச-201815:19:10 IST Report Abuse
வல்வில் ஓரிகதறு..ம்ம்... நல்லா......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X