கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

Added : டிச 04, 2018 | |
Advertisement
சென்னை: அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியின் கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறியதாவது: குமரி கடல் முதல், தெற்கு ஆந்திர கடற்கரை பகுதி வரை, தமிழக கடற்கரை பகுதியை ஒட்டி குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. இதன் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில், கடலோர
Heavy rain,TN weather, Balachandran, தமிழகம், கடலோர மாவட்டங்கள், கனமழை, சென்னை வானிலை ஆய்வு மையம், சென்னை வானிலை, தமிழக வானிலை,  பாலச்சந்திரன், மழை, Chennai Meteorological Center, 
Tamil Nadu, coastal districts,  Chennai weather forecasting, Chennai weather, Tamil Nadu weather,  rain,

சென்னை: அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியின் கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறியதாவது:

குமரி கடல் முதல், தெற்கு ஆந்திர கடற்கரை பகுதி வரை, தமிழக கடற்கரை பகுதியை ஒட்டி குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. இதன் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில், கடலோர மாவட்டங்களில் சில இடங்களில் கனமழையும், உள் மாவட்டங்களில் சில இடங்களில் மிதமான மழையும் பெய்துள்ளது.
பொன்னேரி 13, சோழவரம் 8, கேளம்பாக்கம் 7, ரெட்ஹில்ஸ், காரைக்கால் 5, ஆலங்குடி, பரங்கிப்பேட்டை, தாமரைபாக்கம், தரங்கம்பாடி, மகாபலிபுரம், அதிராமபட்டினத்தில் 3 செ.மீ., மழை பெய்துள்ளது.

அடுத்த 2 தினங்களில் தமிழகத்தின் அனேக இடங்களில் மிதமான மழையும், கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் இடைவெளி விட்டு மிதமான மழை பெய்யும்.

இவ்வாறு அவர் கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X