பொன்.மாணிக்கவேல் நியமனம்: தமிழக அரசு மேல்முறையீடு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பொன்.மாணிக்கவேல் நியமனம்: தமிழக அரசு மேல்முறையீடு

Added : டிச 04, 2018 | கருத்துகள் (67)
Advertisement
பொன்.மாணிக்கவேல்,தமிழக அரசு,மேல்முறையீடு, சுப்ரீம் கோர்ட்

சென்னை : சிலை கடத்தல் வழக்கு விசாரணை சிறப்பு அதிகாரியாக பொன்.மாணிக்கவேல் நியமிக்கப்பட்டதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல் முறையீடு செய்துள்ளது.



சிலை கடத்தல் வழக்குகளை ஐகோர்ட் உத்தரவுப்படி ஐ.ஜி., பொன்.மாணிக்கவேல் தலைமையிலான அதிகாரிகள் விசாரித்து வருகிறது. கடந்த ஆக.,1 சி.பி.ஐ.,க்கு மாற்றி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதனை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த கோர்ட், சிபிஐக்கு மாற்றிய தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்தது. மேலும் ஓய்வு பெற இருந்த பொன்.மாணிக்கவேலை சிறப்பு அதிகாரியாக நியமித்து அவரது பணியை ஒராண்டுக்கு நீட்டித்து உத்தரவிட்டது.

இந்நிலையில் சிலை கடத்தல் வழக்கில் சிறப்பு அதிகாரியாக பொன்.மாணிக்கவேல் நியமனம் செய்யப்பட்டதை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (67)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nisha Rathi - madurai,இந்தியா
05-டிச-201814:03:28 IST Report Abuse
Nisha Rathi தமிழ்நாட்டில் இந்து அறநிலையத்துறை அடியோடு ஒழிக்கப்படவேண்டும் களவாணி கயவர்களை வேறு மதத்தவர்களும் இந்து அறநிலையத்துறை கையில் வைத்துக்கொண்டு ஆட்டம் ஆடுகிறார்கள் பொன் மாணிக்கவேல் அவர்கள் இந்த கயவர்களை இனம்கண்டு கொசுவை நசுக்குவதுபோல நசுக்கியெறியவேண்டும்
Rate this:
Share this comment
Cancel
05-டிச-201810:54:11 IST Report Abuse
Palani Vinayagam இவர்கள் (ஆட்சியாளர்கள்) நல்லவர்கள் இல்லை என்பது உச்சநீதிமன்றம் நன்கு அறிந்து கொண்டு இருக்கும். மாணிக்கத்தின் பணியை மேலும் இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து செய்ய அனுமதி வழங்கும்.
Rate this:
Share this comment
Cancel
tamil - coonoor,இந்தியா
05-டிச-201809:13:54 IST Report Abuse
tamil நல்ல சிறந்த நேர்மையான அதிகாரிகளுக்கு கிடைக்கும் அங்கீகாரம் இப்படித்தான் இருக்கும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X