பதிவு செய்த நாள் :
சோனியா, ராகுல் வரி கணக்கு
ஆய்வு செய்ய கோர்ட் அனுமதி

புதுடில்லி : 'நேஷனல் ஹெரால்டு' பத்திரிகை தொடர்பான வழக்கில், காங்கிரஸ் தலைவர், ராகுல், அவருடைய தாய் சோனியாவின், 2011-12 வருமான வரி கணக்கை மீண்டும் ஆய்வு செய்ய, வருமான வரித் துறைக்கு, உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

சோனியா,ராகுல்,வரி கணக்கு,ஆய்வு,கோர்ட்,அனுமதி


'அசோசியேட்டட் ஜர்னல்ஸ்' நிறுவனம் வெளியிடும், நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை, காங்கிரஸ் தலைவர் ராகுல், முன்னாள் தலைவரான அவருடைய தாய், சோனியா உள்ளிட்டோர்

இயக்குனர்களாக உள்ள, 'யங் இந்தியன் பிரைவேட் லிமிடெட்' வாங்கியது.

பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை அபகரிக்கும் வகையில், இந்த பரிமாற்றம் நடந்துள்ளதாக, வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில், '2011-12ல் சோனியா, ராகுல் தாக்கல் செய்த, வருமான வரி கணக்கை மீண்டும் ஆய்வு செய்ய அனுமதிக்க வேண்டும்' என, வருமான வரித் துறை கோரியிருந்தது. இதற்கு, டில்லி உயர் நீதிமன்றம் அனுமதி அளித்தது. அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, 'சோனியா, ராகுல், காங்கிரஸ் மூத்த தலைவர், ஆஸ்கார் பெர்னாண்டஸ் ஆகியோரின் வருமான வரிக் கணக்கை, வருமான வரித்துறை மீண்டும்

Advertisement

ஆய்வு செய்யலாம்' என, உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

'அதே சமயம், இந்த ஆய்வை உடனடியாக மேற்கொள்ளக் கூடாது' என, உச்ச நீதிமன்ற அமர்வு கூறிஉள்ளது. வழக்கின் விசாரணை, அடுத்த ஆண்டு, ஜன., 8க்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. வருமான வரி கணக்கை ஆய்வு செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது, ராகுல் மற்றும் சோனியாவுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.


Advertisement

வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Somiah M - chennai,இந்தியா
05-டிச-201818:20:57 IST Report Abuse

Somiah Mபிறருடைய குற்றங்களை கண்டுபிடிப்பது போல தன்னுடைய குற்றத்தையும் ஒருவர் கண்டு பிடிப்பார் என்றால் இந்த உலகத்தில் உள்ளவர்களுக்கு எந்த தீமையும் ஏற்படாது என்கிறார் திருவள்ளுவர் .இந்த உண்மை எல்லாருக்கும் பொருந்துவது போல ராகுலுக்கு பொருந்துமல்லவா .

Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
05-டிச-201816:14:25 IST Report Abuse

Endrum Indianஒன்றும் நடக்காது, இவனுங்க இவங்க வழியில் சென்று கொண்டிருப்பார்கள், அரசு அதிகாரிகள் வ.வ.து. முதல் ஏவல் துறை வரை இவர்கள் பின்னாடி சென்று கொண்டிருக்கும் பணம் என்ற எலும்புத்துண்டினால். இதுவே ஒரு சாதாரணன் என்னும் பொது உள்ளே போட்டு அவனை நொங்கு எடுத்திருப்பார்கள். ஒரு தாசில்தார் (தினமலர் செய்தி) ரூ 3000 லஞ்சம், கைது விசாரணை, சிறையில் அடைப்பு. ஆனா இவனுங்க கொள்ளையோ கொள்ளை அடிப்பார்கள், இவர்களுக்கு ஜாமீன்????என்ன தான் செய்கின்றது நமது ஜல்லடை ஓட்டைகள் ஒன்றே நிறைந்த சட்டம்.

Rate this:
05-டிச-201813:52:58 IST Report Abuse

அண்ணாமலை ஜெயராமன்திருட்டு கூட்டம்தான் பழைய கணக்கை பார்க்கக்கூடாது என்று கதறும் , உயர் நீதிமன்றம் , உச்சநீதிமன்றம் என்று தடை கேட்டு அலைகிறார்கள் என்றால் புரிகிறது இவர்களின் லட்சணம். பொய்கணக்கு காட்டியதற்கு கம்பி எண்ண போகிறார்கள்

Rate this:
மேலும் 21 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X