அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
தமிழகத்துக்குள் நுழைய முடியாத
சூழல் ஏற்படும்; மேகதாது விவகாரத்தில்
மோடிக்கு ஸ்டாலின் எச்சரிக்கை

திருச்சி : ''மேகதாது என்ற புது பிரச்னையை கொண்டு வர நினைத்தால், தமிழகத்துக்குள் மோடி நுழைய முடியாத சூழலை ஏற்படுத்துவோம்,'' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பேசினார்.

தமிழகத்துக்குள்,நுழைய முடியாத சூழல்,ஏற்படும்,மேகதாது விவகாரத்தில்,மோடி,ஸ்டாலின்,எச்சரிக்கை


காவிரியின் குறுக்கே, மேகதாதுவில் அணை கட்டுவதற்கான ஆய்வு பணிகளுக்கு, மத்திய சுற்றுச்சூழல் துறை அனுமதி அளித்துள்ளது. இதற்காக, மத்திய அரசைக் கண்டித்து, தி.மு.க., கூட்டணி கட்சிகள் சார்பில், திருச்சியில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில், ஸ்டாலின் பேசியதாவது: இது, தேர்தலுக்காகவோ, அரசியலுக்காகவோ நடக்கும் ஆர்ப்பாட்டமில்லை. விவசாயிகளின் கண்ணீரை துடைக்கவே நடக்கிறது. ஏற்கனவே, 'கஜா' புயல் பாதிப்பால், தமிழகம் தத்தளித்துக் கொண்டிருக்கும் நிலையில், மேகதாதுவில்

அணை என்ற செய்தியால், தமிழகம் கொந்தளித்துள்ளது.

காவிரி, கர்நாடகாவில் உற்பத்தி ஆனாலும், தமிழகத்தில் தான் அதிகம் பாய்கிறது. 6,000 கோடி ரூபாயில் மேகதாதுவில் அணை கட்டினால், தமிழகத்துக்கு நிச்சயம் தண்ணீர் வராது. இதை, மத்திய அரசு தடுத்து நிறுத்தியிருக்க வேண்டும். ஆனால், தமிழகத்தில் குட்டிக்கரணம் போட்டாலும், பா.ஜ.,வால் காலுன்ற முடியாது என்பதால், கர்நாடகா மீது பாசமாக உள்ளனர். இதை, அ.தி.மு.க., அரசு தட்டிக் கேட்டிருக்க வேண்டும். ஆனால், துாங்கிக் கொண்டிருக்கிறது.

பா.ஜ., அரசு, தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. இதுவரை தமிழக வெள்ளம், புயல் பாதிப்புகளுக்கு மத்திய அரசிடம், 60 ஆயிரம் கோடி ரூபாய் கேட்கப்பட்டுள்ளது. அதில், 3,000 கோடி ரூபாய் மட்டுமே மத்திய அரசு வழங்கியுள்ளது. தமிழகத்தில் தண்ணீர் இல்லை, புல்லும் இல்லை. இந்நிலையில், தாமரை மலரும் என்கின்றனர். எப்படி மலரும் என தெரியவில்லை. தமிழகத்துக்கு மேகதாது என்ற புதிய பிரச்னையை கொண்டு வர நீங்கள் நினைத்தால், மோடி தமிழகத்துக்கு எந்த சூழ்நிலையிலும் வர முடியாத ஒரு நிலையை ஏற்படுத்துவோம். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

Advertisement

'தினமலர்' மீது வைகோ பாய்ச்சல்:

ஆர்ப்பாட்டத்தில், வைகோ பேசியதாவது: மேகதாதுவில் அணை கட்ட அனுமதித்தால், இந்தியாவின் ஒருமைப்பாடு உடைந்து போகும். மேகதாது அணை விவகாரத்தில், மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும். விரைவில், மோடியை மக்கள் குப்பைத் தொட்டியில் துாக்கி எறிவர். காங்கிரஸ் ஆட்சி மத்தியில் வரும். அப்போது, மேகதாது உள்ளிட்ட எல்லா திட்டங்களும் நிறுத்தப்படும். தி.மு.க., கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்தி, சிண்டு முடியும் வேலையை, சென்னை, 'தினமலர்' உள்ளிட்ட சில ஊடகங்கள் செய்து வருகின்றன. அவர்களின் கனவு பலிக்காது. இந்த கூட்டணியை யாராலும் உடைக்க முடியாது. இவ்வாறு அவர் பேசினார். மேலும், வி.சி., தலைவர் திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொய்தீன், மார்க்சிஸ்ட் மாநில செயலர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூ., மாநில செயலர் முத்தரசன் ஆகியோரும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.


Advertisement

வாசகர் கருத்து (112)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழர்நீதி - சென்னை ,இந்தியா
11-டிச-201818:00:30 IST Report Abuse

தமிழர்நீதி மோடி தமிழகம் வந்தாலும் இருக்கும் 1000 பிஜேபி தொண்டர்கள் DMK வை எதிர்கொள்வார்கள் .

Rate this:
S.Ganesan - Hosur,இந்தியா
06-டிச-201816:34:22 IST Report Abuse

S.Ganesanபிரதமரை உள்ளே விட முடியாது என்றால் , அது தேச துரோக குற்றத்தில் வராதா ? ஒரு அரசு பிரதிநிதியை தனது கடமையை செய்ய முடியாமல் தடுத்த குற்றம் ஆகாதா ? இது மிரட்டும் வேலை. தவறான போக்கு.

Rate this:
Manoharan G - Palani,இந்தியா
06-டிச-201812:31:31 IST Report Abuse

Manoharan Gஇதனால்தான் இந்த ரௌடிகள் ஆட்சிக்கு வரக்கூடாது என்கிறோம் .........தமிழ்நாடு என்ன ஸ்டாலினின் அப்பன் வீடு சொத்தா ........மேகதாதுவில் அணைக்கட்டிக்கொள்ளுங்கள் எங்களுக்கு எந்த ஆட்ச்சேபனையும் இல்லை என்று கருணாநிதி சட்டமன்றத்தில் அறிவித்தது தெரியாதா.............கருணாநிதி அன்று போட்ட தீமானம்தான் இன்று தமிழகத்திற்கு எதிராக வந்து நிற்கிறது............

Rate this:
மேலும் 109 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X