பொது செய்தி

தமிழ்நாடு

பூமி உள்ளவரை... புகழ் நிலைத்திருக்கும்...! ;இன்று ஜெயலலிதா நினைவு தினம்

Added : டிச 05, 2018 | கருத்துகள் (34)
Advertisement
Jayalalithaa Memorial Day, Jayalalithaa , ADMK, மறைந்த முதல்வர் ஜெயலலிதா, ஜெயலலிதா நினைவு தினம்,  ஜெயலலிதா, அதிமுக , ஜெ நினைவு நாள்,  Jeyalalitha Death Anniversary, former cm , death anniversary,late Chief Minister Jayalalithaa,J Jeyalalitha Death Anniversary, jayalalitha ,Jeyalalitha 2nd Death Anniversary,

அரசியலில் பெண்களாலும் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்தவர் ஜெயலலிதா. ஆறுமுறை தமிழக முதல்வர், நாட்டில் நீண்டகாலம் பதவி வகித்த இரண்டாவது பெண் முதல்வர், 29 ஆண்டுகள் கட்சியின் பொதுச்செயலர், தமிழகத்தின் முதல் பெண் எதிர்க்கட்சி தலைவர், சினிமாவில் வெற்றி நாயகி, ஏழு மொழிகளில் சரளமாக பேசத் தெரிந்தவர், தைரியமான பெண் என பல சிறப்புகளை பெற்றவர். இவரது இரண்டாவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

கர்நாடாகாவின் மைசூருவில் 1948 பிப்., 24ல் ஜெயலலிதா பிறந்தார். பெற்றோர் ஜெயராம் - வேதவள்ளி. இரண்டு வயதில் தந்தையை இழந்தார். நான்கு வயதிலிருந்தே பரத நாட்டியம், கர்நாடக இசை பயிற்சி பெற்றவர். சென்னையில் பள்ளி படிப்பை நிறைவு செய்தார். குடும்ப சூழல், இவரை சினிமாவில் நுழைத்தது. 17 ஆண்டுகள் சினிமாவில் கோலோச்சினார். தமிழ் திரையுலகில் 'ஸ்கர்ட்' அணிந்து நடித்த முதல் நடிகை. 1972ல் சிவாஜியுடன் இவர் நடித்த 'பட்டிக்காடா பட்டணமா' திரைப்படம் தேசிய விருதை வென்றது.திரைப்படங்களில் எம்.ஜி.ஆர்.,-ஜெயலலிதா ஜோடி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. சொந்த குரலில் பாடி ரசிகர்களை கவர்ந்தார். கடைசி படம் 'நதியை தேடி வந்த கடல்' 1980ல் வெளியானது.


அரசியல் அமர்க்களம் :

எம்.ஜி.ஆர்., வழிகாட்டுதல் படி 1982ல் அ.தி.மு.க., வின் அடிப்படை உறுப்பினரானார். 1983ல் கொள்கை பரப்புச் செயலரானார். 1983ல் திருச்செந்துார் இடைத்தேர்தலில் வெற்றிக்கு காரணமாக அமைந்தார். 1984ல் ராஜ்யசபா எம்.பி., ஆனார். எம்.ஜி.ஆர்., மறைவுக்குப் பின் 1987ல் ஜெ., அணி, ஜானகி அணி என அ.தி.மு.க., பிளவுபட்டது. தேர்தல் கமிஷனால் 'இரட்டை இலை' சின்னம் முடக்கப்பட்டது. 1989ல் சட்டசபை தேர்தலில் ஜெ., தலைமையிலான அ.தி.மு.க., அணி 'சேவல்' சின்னத்தில் போட்டியிட்டது. 27 இடங்களில் வென்று எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றாது. போடிநாயக்கனுார் தொகுதியில் வென்ற ஜெ., முதல் பெண் எதிர்க்கட்சி தலைவரானார். 1989 பிப்ரவரியில், அ.தி.மு.க., மீண்டும் ஒன்றிணைந்தது. ஜெயலலிதா பொதுச்செயலரானார்.


ஆறு முறை முதல்வர் :

அ.தி.மு.க, கூட்டணி 1991 தேர்தலில் 225 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஜெ., முதன்முறையாக முதல்வரானார். தேர்தல் மூலம் தேர்வான தமிழத்தின் முதல் பெண் முதல்வர், இளம் முதல்வர் என்ற பெருமை பெற்றார். பின் 2001, 2011 தேர்தல்களில் வென்று முதல்வரனார். 2016 தேர்தலில் 136 தொகுதிகளில் வென்று எம்.ஜி.ஆர்., க்குப்பின் தொடர்ந்து இரண்டாவது முறையாக முதல்வராகி சாதித்தார். 2016, செப். 22ல் உடல்நலம் பாதிக்கப்பட, அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 75 நாட்கள் சிகிச்சைக்கு பின் டிச.,5ல் மரணமடைந்தார்.


அதிர்ச்சி:

சொத்துக்குவிப்பு வழக்கில் 2014 செப்., 27ல் கர்நாடக சிறப்பு நீதிமன்றம் நான்காண்டு சிறை தண்டனை விதித்தது. முதல்வர் பதவியை இழந்தார். இது அவரது மனம் மற்றும் உடல்நிலையில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. மேல்முறையீட்டு வழக்கில் 2015 மே 11ல் உயர்நீதிமன்றம் இவரை விடுதலை செய்தது. 2016 தேர்தலில் உடல்நிலையை பொருட்படுத்தாமல் அ.தி.மு.க., வுக்கு வெற்றி தேடித்தந்தார்.


விருதுகள் :

தேசிய விருது, பிலிம் பேர் விருது, கலைமாமணி விருது, தங்க தாரகை விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றவர். ஐந்து பல்கலை சார்பில் கவுரவ டாக்டர் பட்டம் பெற்றுள்ளார்.


புத்தகங்கள் :

ஆங்கிலம், தமிழில் எழுதிய பல கட்டுரைகள் பல்வேறு இதழ்களில் வெளியாகியுள்ளன. தமிழில் நான்கு முழு நீள நாவல்களும், சிறு கதைகளும் எழுதியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வெகுளி - Maatuthaavani,இந்தியா
05-டிச-201819:03:49 IST Report Abuse
வெகுளி தமிழகத்தின் மாநில உரிமைகளை நிலை நாட்டிய ஒப்பில்லா தலைவி அம்மாஜி அவர்கள்.....
Rate this:
Share this comment
Cancel
Sathish - Coimbatore ,இந்தியா
05-டிச-201819:02:29 IST Report Abuse
Sathish முதலில் தமிழ் மொழி நிலைக்குமா என்று பார்க்கவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Somiah M - chennai,இந்தியா
05-டிச-201818:37:05 IST Report Abuse
Somiah M ஜேயின் ஆன்மா சாந்தி அடைய மீண்டும் பிரார்த்திப்போம் .அவருக்கு தீங்கு விளைவிதித்தவர்கள் தொடர்ந்து தண்டனை அடைய வேண்டும் என்றும் பிரார்த்திப்போம் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X