பொது செய்தி

இந்தியா

இனி விண்ணப்பித்த 4 மணி நேரத்தில் பான் கார்டு பெறலாம்

Added : டிச 05, 2018 | கருத்துகள் (19)
Advertisement
Sushil Chandra, Pan Card, Income Tax Filing, பான் கார்டு, வருமான வரி , மத்திய நேரடி வரிகள் கழகம், சுஷில் சந்திரா, பண பரிவர்த்தனை, வருமான வரி தாக்கல், 
Income Tax, Central Direct Taxes Corporation, Cash Transaction,

புதுடில்லி : இனி விண்ணப்பித்த 4 மணி நேரத்தில் பான் கார்டு பெறலாம் என மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது.

டில்லி நடந்த கருத்தரங்கு ஒன்றில் பேசிய மத்திய நேரடி வரிகள் வாரியம் தலைவர் சுஷில் சந்திரா, வரி செலுத்தும் முறைகளில் பல மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. வரி செலுத்தும் முறை எளிமையாக்கப்பட உள்ளது. விண்ணப்பித்த 4 மணி நேரத்தில் பான் கார்டு பெறும் வசதி இந்த ஆண்டு முதல் துவங்கப்பட உள்ளது. தொழில் துவங்குவோருக்கும், வருமான வரி செலுத்துவோருக்கும் ஏதுவாக வரி செலுத்தும் முறைகள் எளிமையாக்கப்பட உள்ளன.

கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 50 சதவீதம், அதாவது 6.08 கோடியாக அதிகரித்துள்ளது. அமலாக்க பிரிவு வரி விதிமுறைகள் கடுமையாக கடைபிடிக்கப்படும். வெளிநாடுகளில் சொத்துக்கள் வைத்திருப்போர் அல்லது வெளிநாட்டு வங்கிகளில் கணக்கு வைத்திருந்போர் வருமான வரி கணக்கு தாக்கலின் போது அது தொடர்பான விபரம் அளிக்கவில்லை என்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மத்திய நேரடி வரிகள் வாரியம் வருமான வரி விதிகளில் சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. இந்த விதிகள் இன்று (டிச.,5) முதல் அமலுக்கு வருகின்றன. இதன்படி, ஒரு ஆண்டுக்கு ரூ.2.5 லட்சம் அல்லது அதற்கு மேல் பண பரிவர்த்தனை செய்ய பான் கார்டு அவசியம் ஆக்கப்பட்டுள்ளது. பான் கார்டு விண்ணப்பிக்க தாய் மட்டும் கொண்டவராக இருந்தால் விண்ணப்ப படிவத்தில் தந்தை பெயர் குறிப்பிட வேண்டியது கட்டாயம் இல்லை. ரூ.5 லட்சத்திற்கு கீழ் மொத்த விற்பனை அல்லது விற்றுமுதல் அல்லது மொத்த வருவாய் கொண்டவர்களுக்கு பான் கார்டு விதிகளில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

Advertisement
வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
11-டிச-201807:35:06 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் சுவீட் பான் வாங்குறதை விட வேகமா இந்த பான் கார்டை வாங்கலாமாம். மோசடி ஆட்கள் சொல்றாங்க.
Rate this:
Share this comment
Cancel
Venkatesh - bangalore,இந்தியா
06-டிச-201811:05:46 IST Report Abuse
Venkatesh வரியெல்லாம் அதிகமா தான் வாங்குறீங்க ஆனா அந்த பணத்தை வச்சி என்ன பண்றீங்க, ஒரு மண்ணுக்கும் பயன்படாத சிலை, மாட்டுக்கு அம்புலன்ஸ் .. அது போக பணக்காரனுக்கு கடன் கொடுத்து வழி அனுப்புறீங்க ..இதுக்கு கஷ்டபட்டு உழைக்கிறவன் பேர்ல கொள்ளை அடிக்கிறது..
Rate this:
Share this comment
Cancel
05-டிச-201819:08:53 IST Report Abuse
நாகராஜ் மேலும் பான் கார்டு அவசியம் இல்லை பான் நம்பர் போதும் என்றும் கூறப்படுகிறது. பான் நம்பர் நான்கு மணி நேரத்திற்குள் வழங்கப்படும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X