வாரிசு அரசியல்!| Dinamalar

வாரிசு அரசியல்!

Added : டிச 05, 2018
வகுப்புவாதம், வாரிசு அரசியல் உள்ளிட்டவற்றை அடிப்படையாக வைத்து, தேர்தல்களில், காங்கிரஸ் கட்சி வெற்றி பெற நினைக்கிறது. பா.ஜ.,வோ, நாட்டு மக்களின் நலனுக்காகவும், அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காகவும், தேர்தலில் வெற்றி பெற நினைக்கிறது.அமித் ஷா, தலைவர், பா.ஜ.,கூட்டணி நிலைக்காது!கர்நாடக மாநிலத்தில், மதச்சார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி, விரைவில் முறிந்து விடும்.
வாரிசு அரசியல்!

வகுப்புவாதம், வாரிசு அரசியல் உள்ளிட்டவற்றை அடிப்படையாக வைத்து, தேர்தல்களில், காங்கிரஸ் கட்சி வெற்றி பெற நினைக்கிறது. பா.ஜ.,வோ, நாட்டு மக்களின் நலனுக்காகவும், அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காகவும், தேர்தலில் வெற்றி பெற நினைக்கிறது.


அமித் ஷா, தலைவர், பா.ஜ.,
கூட்டணி நிலைக்காது!
கர்நாடக மாநிலத்தில், மதச்சார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி, விரைவில் முறிந்து விடும். அரசியல் ஆதாயத்திற்காக, இரண்டு கட்சிகளும் கூட்டணி சேர்ந்து, கர்நாடக மக்களை ஏமாற்றி வருகின்றன. இந்த கூட்டணி, நிலைக்கவே நிலைக்காது.
பிரகாஷ் ஜாவடேகர், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர், பா.ஜ.,
யார் பொறுப்பு?
தேர்தல் நடக்கும் சமயங்களில், வாக்காளர்களை கவர, 'இலவச' வாக்குறுதிகளை, அரசியல் கட்சிகள் அள்ளி வீசுவது, ஜனநாயகத்திற்கு நல்லதல்ல. தேர்தலுக்கு பின், வாக்குறுதிகள் நிறைவேற்றப்படா விட்டால், யார் பொறுப்பு?
வெங்கையா, துணை ஜனாதிபதி

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X