சிறப்பு சட்டமன்றத்தை கூட்ட வலியுறுத்தி தி.மு.க., - அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் தர்ணா

Added : டிச 05, 2018
Advertisement
புதுச்சேரி: மேகதாது அணை கட்டுவதற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற, சிறப்பு சட்டசபை கூட்டத்தை கூட்ட வலியுறுத்தி தி.மு.க.,- அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள், நேற்று சட்டசபையில் சபாநாயகரை முற்றுகையிட்டு, தர்ணாவில் ஈடுபட்டனர்.காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு, ஆய்வுப் பணியை மேற்கொள்ள கர்நாடக அரசு சமர்ப்பித்துள்ள அறிக்கைக்கு, மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது.

புதுச்சேரி: மேகதாது அணை கட்டுவதற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற, சிறப்பு சட்டசபை கூட்டத்தை கூட்ட வலியுறுத்தி தி.மு.க.,- அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள், நேற்று சட்டசபையில் சபாநாயகரை முற்றுகையிட்டு, தர்ணாவில் ஈடுபட்டனர்.காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு, ஆய்வுப் பணியை மேற்கொள்ள கர்நாடக அரசு சமர்ப்பித்துள்ள அறிக்கைக்கு, மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது. அதையடுத்து, இந்த அனுமதியை ரத்து செய்ய வலியுறுத்தி, சிறப்பு சட்டசபை கூட்டத்தை கூட்டி, தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று தமிழகம், புதுச்சேரியில் உள்ள எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. அதனடிப்படையில், தமிழகத்தில் இன்று சிறப்பு சட்டசபை கூட்டம் நடக்கவுள்ளது.அதேபோன்று, புதுச்சேரியிலும் சிறப்பு சட்டமன்றத்தை கூட்டி, தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி, எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வும், ஆளும் காங்., கூட்டணியில் உள்ள தி.மு.க.,வும் சபாநாயகர் வைத்திலிங்கத்திடம் கடந்த 30ம் தேதி மனு அளித்திருந்தன. ஆனால் புதுச்சேரியில் சட்டசபை கூட்டுவதற்கான எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.இந்நிலையில், நேற்று சட்டசபைக்கு வந்த தி.மு.க. எம்.எல்.ஏ., சிவா, சபாநாயகர் அலுவலக நுழைவு வாயிலில் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். மேகதாது பிரச்னையில், தமிழகத்தை போல், புதுச்சேரியிலும் சிறப்பு சட்டசபை கூட்டம் நடத்த வேண்டும் என வலியுறுத்தினார்.போராட்டம் நடத்திய சிவா எம்.எல்.ஏ.விடம், சபாநாயகர் வைத்திலிங்கம் பேச்சுவார்த்தை நடத்தி, முதல்வரிடம் கலந்து ஆலோசித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அதையடுத்து, போராட்டத்தை சிவா எம்.எல்.ஏ. கைவிட்டார்.இதே கோரிக்கையை வலியுறுத்தி, அ.தி.மு.க. எம்.எல்.ஏ.,க்கள் அன்பழகன், பாஸ்கர், வையாபுரி மணிகண்டன் ஆகியோர் சபாநாயகர் அலுவலகத்திற்குள் சென்று சபாநாயகரை முற்றுகையிட்டு, அவரது இருக்கை அருகே தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.அவர்களிடமும், முதல்வரிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக சபாநாயகர் உறுதியளித்தார். அதையடுத்து, அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X