அசல் மட்டும் தருகிறேன்; ஆளை விடுங்கள்... விஜய் மல்லையா திடீர் சமரசம் Dinamalar

பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
அசல் மட்டும் தருகிறேன்; ஆளை விடுங்கள்...
விஜய் மல்லையா திடீர் சமரசம்

புதுடில்லி : 'மக்கள் பணத்தை, முழுமையாக திருப்பி கொடுத்துவிடுவேன்' என, தொழிலதிபர் விஜய் மல்லையா தெரிவித்துள்ளார்.

அசல்,தருகிறேன்,ஆளை விடுங்கள்,விஜய் மல்லையா,சமரசம்


மதுபான ஆலைகளை நடத்தி வந்த, கர்நாடகாவை சேர்ந்த தொழிலதிபர் விஜய் மல்லையா, 'கிங் பிஷர் ஏர்லைன்ஸ்' என்ற விமான சேவை நிறுவனத்தையும் நடத்தி வந்தார்.

ரூ.9,000 கோடி :


இந்த நிறுவனத்துக்காக, பல்வேறு வங்கிகளில், 9,000 கோடி ரூபாய் கடன் பெற்று, அதை திரும்ப செலுத்தாமல், 2016ல், வெளிநாடு தப்பிச் சென்றார். தற்போது, ஐரோப்பிய நாடான பிரிட்டனின் தலைநகர் லண்டனில் பதுங்கி இருக்கும் விஜய் மல்லையாவை, இந்தியா அழைத்து வரும் முயற்சியில், அமலாக்கத் துறையினர் ஈடுபட்டு உள்ளனர்.

இந்நிலையில், தன், 'டுவிட்டர்' பக்கத்தில், விஜய் மல்லையா குறிப்பிட்டுள்ளதாவது:

பொதுத்துறை வங்கிகளில் இருந்து, நான் பணத்தை பெற்று, தப்பி ஓடிவிட்டதாக, அரசியல் வாதிகளும், ஊடகத்தினரும், தவறான தகவலை பரப்பி வருகின்றனர். 'நான் வாங்கிய கடனை, திரும்ப செலுத்துகிறேன்' என, கர்நாடகா உயர் நீதிமன்றம் முன்னிலையில் ஒப்புக் கொண்ட பின்னும், என்னை நேர்மையான முறையில் நடத்த மறுப்பது வேதனை அளிக்கிறது.

விமான எரிபொருளின் விலை ஏற்றத்தின் காரணமாகவே, கிங் பிஷர் நிறுவனம், நிதி நெருக்கடியில் சிக்கியது. கச்சா எண்ணெயின் விலை, பேரல் ஒன்றிற்கு, 140 அமெரிக்க டாலர்கள் அளவுக்கு உயர்ந்ததால், அதை சமாளிக்க முடியாமல், வங்கிகளில் கடன் பெற வேண்டிய நிலை ஏற்பட்டது. அந்த அசல் தொகையை, 100 சதவீதம் திரும்ப செலுத்த தயாராக உள்ளேன்.

இந்தியாவின் மிகப் பெரிய மதுபான ஆலையை, 30 ஆண்டுகளுக்கும் மோலாக நடத்தி வந்துள்ளேன். மாநில அரசுகளுக்கு, ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் அளித்து உள்ளேன். துரதிர்ஷ்டவசமாக, கிங் பிஷர் விமான சேவை நிறுவனம், நஷ்டத்தை சந்தித்தது. வங்கிகளில் இருந்து பெற்ற கடனை திரும்ப செலுத்த, தயாராகவே உள்ளேன்.

என்னை விரைவில் இந்தியா அழைத்துவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அது, சட்டப்படி நிகழும். இதில், மக்கள் பணம் தான் முக்கியமானது. அதை, 100 சதவீதம், திருப்பி கொடுத்துவிடுவேன். வங்கிகளும்,

Advertisement

அரசும், அதை ஏற்கும்படி பணிவுடன் வேண்டுகிறேன். நான் திரும்ப தரும் தொகையை, ஏற்க மறுப்பது ஏன்? இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐரோப்பிய நாடான இத்தாலியை சேர்ந்த, அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்தில் இருந்து, வி.வி.ஐ.பி.,க்களுக்கான ஹெலிகாப்டர்கள் வாங்கியதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பான விசாரணையில், இடைத்தரகராக செயல்பட்ட கிறிஸ்டியன் மைக்கேல், ஐக்கிய அரபு நாடான துபாய் தப்பி சென்றார்.

கோரிக்கை:


அவரை, இந்தியாவிடம் ஒப்படைக்கும்படி, மத்திய அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதற்கு, துபாய் அரசு அனுமதி அளித்ததை அடுத்து, நேற்று முன்தினம் இரவு, மைக்கேல், டில்லி அழைத்து வரப்பட்டார். இந்த சம்பவம் நடந்த சில மணி நேரங்களில், விஜய் மல்லையா, இவ்வாறு கூறியிருப்பது, குறிப்பிடத்தக்கது.


Advertisement

வாசகர் கருத்து (46)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
spr - chennai,இந்தியா
06-டிச-201819:46:38 IST Report Abuse

sprஇத்தனை நாள் இல்லாத பணம் இப்பொழுது எங்கிருந்து வரும் அப்படியானால் இவர் சொத்துக்களை பறிமுதல் செய்ததாக அரசு சொன்னது பொய்யோ இல்லை அரசு அதிகாரிகளின் மெத்தனப் போக்கினால் இவர் இந்தியாவில் உள்ள தனது சொத்தை வெளிநாட்டு வங்கிகளில் வைத்து கடன் வாங்கியுள்ளாரா எங்கோ எதுவோ சரியில்லை இவர் இந்தியா வருவது அரசியல் விளம்பரத்திற்கு மட்டுமே பயன்படும் நமக்கு வேண்டியது இவர் கொள்ளையடித்த பணம் அந்தப் பணம்/ கடன் திரும்பி வரப்போவதில்லை இவருக்குத் தணடனை கிடைக்காமல் நம் ஜெத்மலானி போன்றோர் பார்த்துக் கொள்வார்கள் அப்படியே கோடிகளில் கடன் வாங்கி ஏமாற்றியவருக்கு இந்த நாட்டுச் சட்டத்தின்படி தண்டனை கொடுத்தால் கூட அவரது அந்தஸ்த்து கருதி அது ஒரு உல்லாச விடுதியில் தங்குவது போல ஒரு ஐந்து வருடம் இருக்கலாம் ஆனால் போன பணம் என்னவாகிற்று யாருக்கு லாபம் இவரை விசாரணை என்ற பெயரில் இந்தியா கொண்டுவருவது மாபெரும் தவறு இது போல அவர்கள் வாங்கிய கடனைத் திருப்பித்தராமல் பலர் செய்யும் ஆடம்பர செலவுகளை பார்க்கும் பொழுது அந்த கொண்டாட்டத்தில் அரசு அமைச்சர்களும் பங்கேற்பது இந்தக் கொள்ளை அரசின் ஆதரவினாலேயே நடக்கிறது என்பது உறுதியாகிறது

Rate this:
Manian - Chennai,இந்தியா
07-டிச-201804:07:02 IST Report Abuse

Manianதவறான கருத்து. கருணா கோடிக்கணக்கில் கொள்ளை அடித்து வெளி நாடுகளுக்கு ஹவாலா மூலம் அனுப்பினார். அதை தடுக்க முடிந்ததா? இது போன்ற வெள்ளை குற்றங்களை ( White collar crimes) கண்டு பிடிக்கவே மேல் நாடுகளிலும் வெகு நாளாகிறது. ஓட்டை மக்கள் விற்கிறார்கள், லஞ்சம் கொடுப்பது- வாங்குவது சரி என்னும் 70 -80 % மக்கள், ஜாதி-மதம்- இட ஒதுக்கீட்டில் ஓபிசி என்று போலி சான்றிதழ் கைது வரும் அரசியல் வியாதிகள், அரசாங்க வியாதிகள் நாடெங்கும் நிரம்பி கிடக்கும்போது, மல்லையா, செல்லையா, ராமைய்யா போன்ற கொள்ளையர்கள் இருப்பதில் ஆச்சரியம் என்ன இருக்கிறது. ஒட்டுமொத்த சமுதாயமுமே 80 + % நாணயம் இல்லாதவர்களாக இருக்கும் வரை இதெல்லாம் நடக்கும். இதை எப்படி ஒழிக்க முடியும் என்று ஆக்கப்பூர்வமாக, அறிவுபூர்வமாக, ஜனநாயகத்தின் செய்ய முடியும் என்று உங்கள் அறிவித்த திறமையை காட்டுங்களேன் இப்போதைக்கு மல்லையா சொல்வதை ஏற்க வேண்டும், பிறகு மற்றதெல்லாம். ....

Rate this:
வல்வில் ஓரி - Koodal,இந்தியா
06-டிச-201818:10:24 IST Report Abuse

வல்வில் ஓரிசே... கே எப் காலண்டரை நிப்பாட்டி போட்டானுவோளேப்பா...... இதுக்காண்டியாச்சும் ..ஆட்டுத்தாடிய இந்தியா கொண்டு வந்திரனும் சாமியோவ்..

Rate this:
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
06-டிச-201817:49:04 IST Report Abuse

Natarajan Ramanathanசீக்கிரம் இவரை இந்தியாவுக்கு திரும்ப வரச்சொல்லுங்கள். ஜனவரி வருகிறது. காலெண்டர் வேண்டும்.

Rate this:
மேலும் 42 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X