சி.பி.ஐ., இயக்குனர்கள் மோதல் வழக்கில் காரசாரம்! Dinamalar
பதிவு செய்த நாள் :
காரசாரம்!
சி.பி.ஐ., இயக்குனர்கள் மோதல் வழக்கில்...
மத்திய அரசு குற்றச்சாட்டுக்கு பதிலடி

புதுடில்லி : 'சி.பி.ஐ.,யின் இரண்டு உயர் அதிகாரிகள் இடையே ஏற்பட்ட மோதலால், அந்த அமைப்பின் புகழுக்கு களங்கம் ஏற்பட்டது; எனவே, சி.பி.ஐ., இயக்குனர் அலோக் வர்மாவை கட்டாய விடுப்பில் அனுப்பும் சூழ்நிலை ஏற்பட்டது' என, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு கூறியுள்ளது. இந்த வழக்கில், அரசின் நடவடிக்கையை விமர்சித்து, அலோக் வர்மா தரப்பு வழக்கறிஞரும், அடுக்கடுக்கான வாதங்களை வைத்ததால், இரு தரப்புக்கும் காரசாரமான வாதம் நடந்தது.

சி.பி.ஐ., இயக்குனர்கள்,மோதல்,வழக்கில்,காரசாரம்


சி.பி.ஐ., இயக்குனர் அலோக் வர்மா, சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா இடையே ஏற்பட்ட அதிகார மோதலை தொடர்ந்து, இருவரும், பரஸ்பரம் ஊழல் புகார்களை கூறினர். இதையடுத்து, இருவரும் கட்டாய விடுப்பில்அனுப்பப்பட்டனர்.தன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில், அலோக் வர்மா மனு தாக்கல் செய்தார். தனக்கு, இரண்டு ஆண்டு உறுதி செய்யப்பட்ட பதவிக் காலம் இருப்பதாகவும், அதை, அரசு குறைக்கக்கூடாது என்றும், மனுவில், அலோக் வர்மா கூறியிருந்தார்.

இந்த வழக்கு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது.அலோக் வர்மா சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், பாலி நாரிமன் வாதிட்டதாவது: சி.பி.ஐ., இயக்குனர் அலோக் வர்மாவின்

பொறுப்புகளை பறித்து, அரசு பிறப்பித்த உத்தரவுக்கு அடிப்படை கிடையாது. சி.பி.ஐ., இயக்குனரை நீக்க, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர், தலைமை நீதிபதி உள்ளிட்டோர் அடங்கிய குழுவின் ஒப்புதலை பெற வேண்டும். இவ்வாறு அவர் வாதிட்டார்.

மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல், கே.கே.வேணுகோபால் வாதிட்டதாவது: சி.பி.ஐ.,யில் உயர் பொறுப்பில் இருந்த இரு அதிகாரிகளும், ஆக்ரோஷமான பூனைகள் போல் சண்டை போட்டனர். அவர்களின் சண்டையை அரசு, வியப்புடன் பார்த்தது. அவர்கள் மீதான புகார்கள் தொடர்பான ஆவணங்களை கவனமாக பரிசீலித்த தோடு, சம்பந்தப்பட்ட பிரச்னைகள் குறித்தும், அரசு ஆராய்ந்தது.

அலோக் வர்மா மீது நடவடிக்கை எடுக்க சரியான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதை, முழுமையாக உணர்ந்த பின்பே, அவரிடம் இருந்து, பொறுப்புகள் வாபஸ் பெறப்பட்டன. சி.பி.ஐ.,யின் இரு மூத்த அதிகாரிகள் சண்டை போடுவதை, தொடர்ந்து வேடிக்கை பார்த்தால், கடைசியில் என்ன ஆகியிருக்கும் என்பது, கடவுளுக்கு மட்டுமே தெரியும். அலோக் வர்மா, அஸ்தானா இடையிலான சண்டையால், சி.பி.ஐ.,யின் புகழுக்கு களங்கம் ஏற்பட்டது. சி.பி.ஐ., மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை பறிபோய் விடக்கூடாது என்ற எண்ணத்தில், இரு அதிகாரிகளும், விடுப்பில் அனுப்பப்பட்டனர்.

யாரைக் கேட்டாலும், சி.பி.ஐ., இயக்குனர், அலோக் வர்மா என்றும், சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா என்றும் கூறுவர். எனவே, இந்த இரு அதிகாரிகளும், தாங்கள் பணி இடமாற்றம் செய்யப்பட்டதாக கருதக் கூடாது. சி.பி.ஐ., இயக்குனரை நியமிக்கும் அதிகாரம், மத்திய அரசிடம் உள்ளது. எனவே, சி.பி.ஐ., அமைப்பை கண்காணிக்கும் அதிகாரமும் அரசிடம் உள்ளது. இவ்வாறு அவர் வாதிட்டார். நேற்றைய விசாரணையின் போது,

Advertisement

இரு தரப்புக்கும் இடையே காரசாரமான வாதம் நடந்தது. இந்த வழக்கின் விசாரணை இன்றும் தொடர உள்ளது.

அஸ்தானாவுக்கு வந்தசோதனை:

சி.பி.ஐ., இயக்குனர் அலோக் வர்மாவுடனான சண்டையால், விடுப்பில் அனுப்பப்பட்ட, சி.பி.ஐ., சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா, அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம், வி.வி.ஐ.பி.,களுக்கான ஹெலிகாப்டர்கள் வாங்குவதில் நடந்த ஊழல் குறித்த வழக்கில், விசாரணை நடத்தி வந்தார். இந்த வழக்கில் தொடர்புடைய, பிரிட்டனை சேர்ந்த மைக்கேல் கிறிஸ்டியன், கைது செய்யப்பட்டு இந்தியா அழைத்து வரப்பட்டதால், அந்த வழக்கு சூடிபிடிக்கத் துவங்கி உள்ளது. அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஊழல் தொடர்பான வழக்கில், மைக்கேல் கிறிஸ்டியனுக்கு எதிராக, நீதிமன்றத்தில், சி.பி.ஐ., குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உள்ளது. இந்த குற்றப்பத்திரிகை தயாரிப்பதற்கான அனைத்து பணிகளையும், ராகேஷ் அஸ்தானா செய்திருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த, 2017ல், அகஸ்டா வெஸ்ட்லேண்ட் வழக்கு தொடர்பாக, முதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் பணி, ராகேஷ் அஸ்தானா மேற்பார்வையில் நடந்தது. அகஸ்டா வெஸ்ட்லேண்ட் வழக்கு, முக்கிய கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அதில் ஈடுபாட்டுடன் செயல்பட்டு வந்த ராகேஷ் அஸ்தானா, தன் பதவியை காப்பாற்றிக் கொள்ள, போராட வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளார்.


Advertisement

வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
06-டிச-201814:49:02 IST Report Abuse

அண்ணாமலை ஜெயராமன்காங்கிரெஸ்ஸை காப்பாற்ற அலோக் வர்மா முனைந்திருக்கிறார் ஆகவே அந்த வழக்கை கையாண்ட அஸ்தானா மேல் நடவடிக்கை எடுத்திருக்கிறார். இன்று அந்த குற்றவாளி இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்டுவிட்டார் அலோக் வர்மா நினைத்தது நடந்து கொண்டிருக்கிறது , அஸ்தானா விடுப்பில் இருக்கிறார் , தற்போது மீண்டும் பதவிக்கு வந்து அஸ்தானா தயாரித்த வழக்கு ஆவணங்கள் மாற்றி தினசரி பத்திரிகைகளை அதில் சேர்க்க நினைக்கிறார் (2 G வழக்கில் கூட காங்கிரஸ் இப்படி தன் கைக்கூலியை வைத்து கேவலமான ஆவணங்களை வைத்து அந்த வழக்கில் குற்றவாளிகள் தப்பி விட்டனர்) ஆனால் மோடி இதற்கெல்லாம் இடமளிக்க மாட்டார்.

Rate this:
tamil - coonoor,இந்தியா
06-டிச-201809:20:06 IST Report Abuse

tamilஉயர் அமைப்புகளை திட்டமிட்டு கேவலப்படுத்துவது ஒரு புறம் என்றால் எல்லா அமைப்புகளும் அரசியல்வாதிகளால் கபளீகரம் செய்யப்படுவதும் இந்த அமைப்புகளின் தரம் தாழ்ந்து போவதற்கும் காரணமாகிவிட்டது, உயர் மட்டத்தில் தரம் தாழ்ந்த விமர்சனங்கள் ஆளும் தலைவர்களின் குறுகிய கண்ணோட்டத்தில் செய்துவரும் விமர்சனங்கள் எல்லாமே இந்திய உயர்ந்த பண்புகளை கொண்ட நாடு என்கிற பெயர் கெட்டுப்போய்விட்டது,

Rate this:
Anandan - chennai,இந்தியா
06-டிச-201806:01:14 IST Report Abuse

Anandanஇந்த ஊழல்வாதியை கொண்டுவந்ததே தலீவர் மோடிதான் இவருக்காகத்தானே அலோக் வர்மாவை கட்டாய விடுப்பில் அனுப்பினார் அப்போ இவர் வாங்கிய கையூட்டு யாருக்கு போனது?

Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X