தேர்தலை எதிர்கொள்ள தி.மு.க., தயார்: ஸ்டாலின் Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
தேர்தலை எதிர்கொள்ள
தி.மு.க., தயார்: ஸ்டாலின்

சென்னை : ''எந்த சூழ்நிலையில் தேர்தல் வந்தாலும், அதை எதிர்கொள்ள, தி.மு.க., தயாராக இருக்கிறது,'' என, தி.மு.க., தலைவர், ஸ்டாலின் கூறினார்.

தேர்தலை,எதிர்கொள்ள,தி.மு.க., தயார்,ஸ்டாலின்


சென்னை விமான நிலையத்தில், அவர் அளித்த பேட்டி: எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளை ஏற்று, சிறப்பு சட்டசபை கூட்டம் நடத்த இருப்பது வரவேற்கத்தக்கது. அந்த கூட்டத்தில், அரசின் தீர்மானங்களை பொறுத்து, தி.மு.க.,வின் கருத்துக்கள் முன்வைக்கப்படும். 'கஜா' புயலால் பாதித்த இடங்களில், மக்கள் இன்னும் அன்றாட தேவைகளுக்கு அல்லாடி வருகின்றனர். தமிழக அரசு கேட்டுள்ள நிதியை, மத்திய அரசு, இன்னும் வழங்கவில்லை.

அ.தி.மு.க., அரசு, ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதில் மட்டும் தான், கவனம் செலுத்தி வருகிறது. டெல்டா பகுதி மக்கள், நாட்டுக்கு படி அளந்த நிலை மாறி, இன்று சோற்றுக்கே பிச்சை எடுக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. எந்த சூழ்நிலையில் தேர்தல் வந்தாலும், அதனை எதிர்கொள்ள, தி.மு.க., தயாராக இருக்கிறது. இவ்வாறு, அவர் கூறினார்.

ஸ்டாலின், நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி அமைக்கப்பட்ட காவிரி மேலாண்மை வாரியத்தின் அனுமதியின்றி, மேகதாது அணைக்கு, மத்திய அரசு அனுமதி அளித்திருப்பது, தமிழகத்திற்கு, பிரதமர் மோடி அரசு செய்திருக்கும் பச்சை துரோகம். வஞ்சகம் தொடர்ந்தால், காந்தி காட்டிய வழியில், வரிகொடா இயக்கம் நடத்த தயார்.

திருச்சியின் எழுச்சி, டில்லியை அதிர வைத்த நிலையில், சென்னையிலும், தாக்கம் ஏற்படுத்தியிருக்கிறது. அதன் விளைவு தான்,

Advertisement

காவிரியின் குறுக்கே, மேகதாது அணை கட்டுவதற்கான அனுமதியை ரத்து செய்யக்கோரும், அவசர சட்டசபை கூட்டம். உரிமைக்கான போராட்டத்தில், இது, துவக்க வெற்றி; தொடர் வெற்றிகள் நிச்சயம்.

மத்திய, மாநில அரசுகள் தொலைந்திடும் இன்ப நாள், வெகுதொலைவில் இல்லை. திருச்சியில் துவங்கிய போராட்டக்களம் பூகம்பமாகி, அது தேர்தல் களத்தில் எதிரொலிக்கும். மத நல்லிணக்க ஆட்சி, மத்தியிலும், மக்கள் நலன் காக்கும் ஆட்சி, மாநிலத்திலும் விரைவில் மலரும். இவ்வாறு, ஸ்டாலின் கூறியுள்ளார்.


Advertisement

வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
07-டிச-201804:46:22 IST Report Abuse

Bhaskaranஉங்களுக்கு ஆதரவாக ராஜதந்திரி புரட்சிப்புயல் கலிங்க நாயகன் இருக்கும்போது எத்தனை தேர்தலென்றாலும் சந்திக்கலாம்

Rate this:
ramanathan - Ramanathapuram,இந்தியா
06-டிச-201814:45:17 IST Report Abuse

ramanathanதமிழ் மக்களின் விவசாயிகளின் நலன் கருதி சிறப்பு சட்டசபை கூட்டம் நடத்த இருப்பது வரவேற்கத்தக்கது .OPS. .EPS பாராட்டுக்குரியவர்கள்

Rate this:
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
06-டிச-201814:37:35 IST Report Abuse

Natarajan Ramanathanஎப்போது தேர்தல் வந்தாலும் ஹிந்து விரோத ஓசி பிரியாணி திருட்டு கட்சிக்கு டெபாசிட் தொகை மொத்தமே 23425000=58,50,000 மட்டும்தான் நஷ்டம். 2Gஇல் அடித்த கொள்ளையில் 58 லட்சம் எல்லாம் கால்தூசு பெறாது. என்ன சுடலை?

Rate this:
மேலும் 16 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X