அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
ஜெ., நினைவிடத்தில் பழனி, பன்னீர் அஞ்சலி
அ.தி.மு.க., - அ.ம.மு.க., மவுன ஊர்வலம்

சென்னை : மறைந்த ஜெயலலிதாவின், இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி, முதல்வர் மற்றும் அமைச்சர்கள், மவுன ஊர்வலமாக சென்று, ஜெ., நினைவிடத்தில், மலர் வளையம் வைத்து, அஞ்சலி செலுத்தினர்.

ஜெ., நினைவிடத்தில்,பழனி, பன்னீர்,அஞ்சலி,அ.தி.மு.க.,அ.ம.மு.க., மவுன ஊர்வலம்


தமிழகம் முழுவதும், ஜெயலலிதா இரண்டாம் ஆண்டு நினைவு தினம், நேற்று அனுசரிக்கப்பட்டது. அ.தி.மு.க.,வினர், அ.ம.மு.க.,வினர், ஆங்காங்கே வீதிகளில், ஜெ., படத்தை அலங்கரித்து வைத்திருந்தனர். பல இடங்களில், அன்னதானம் வழங்கப்பட்டது. சென்னை, மெரினா கடற்கரையில் உள்ள, அவரது நினைவிடம், நேற்று வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில், அ.தி.மு.க.,வினர், அண்ணா சாலையில் இருந்து ஊர்வலமாக, ஜெ., நினைவிடத்திற்கு சென்றனர்.

முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் மற்றும் பெரும்பாலானோர், கறுப்பு சட்டை அணிந்து, ஊர்வலத்தில் நடந்து சென்றனர். நினைவிடத்தில், முதல்வர் மற்றும் துணை முதல்வர், மலர் வளையம் வைத்தும், மலர் துாவியும் அஞ்சலி செலுத்தினர். அவர்களைத் தொடர்ந்து, அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள், மலர் துாவி மரியாதை செலுத்தினர். அதன்பின், உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. கட்சி ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான பன்னீர்செல்வம், உறுதிமொழியை வாசிக்க, அனைவரும் திரும்பக் கூறினர்.

'ஜெ., காட்டிய வழியில், தொடர்ந்து பயணம் செய்திட உழைப்போம். எதிர்வரும் சட்டசபை இடைத்தேர்தல், லோக்சபா தேர்தல் ஆகியவற்றில், மகத்தான வெற்றி பெற்று, ஜெ.,க்கு காணிக்கையாக்கிட, அயராது உழைப்போம்' என, உறுதிமொழி ஏற்றனர்.

பொது மக்கள் அதிருப்தி :

ஜெ.,க்கு அஞ்சலி செலுத்துவதற்காக, நேற்று கட்சி தொண்டர்கள் மட்டுமின்றி, பொது மக்களும் ஏராளமானோர் வந்தனர். ஆனால், ஜெ., நினைவிடத்தில் கட்டுமானப் பணி நடப்பதால், பொது மக்கள் மற்றும் தொண்டர்கள் அனுமதிக்கப்படவில்லை. எம்.ஜி.ஆர்., நினைவிடத்தோடு திருப்பி அனுப்பப்பட்டனர். இதனால், அஞ்சலி செலுத்த வந்தோர் ஏமாற்றமடைந்தனர்.


'மாஜி'க்கள் மயக்கம்!

அ.தி.மு.க., சார்பில், மவுன ஊர்வலம், காலை, 9:30 மணிக்கு துவங்கும் என, அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், காலை, 10:45 மணிக்கு தான், ஊர்வலம் துவங்கியது. அப்போது, வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. அண்ணா சாலையிலிருந்து, ஜெ., நினைவிடத்திற்கு, அனைவரும் நடந்து சென்றனர். நினைவிட வளாகத்தை சுற்றி, போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. முதல்வர் மற்றும் அமைச்சர்களை தவிர, மற்றவர்கள் உள்ளே செல்ல சிரமப்பட்டனர். போலீசாரின் தடுப்புகளை மீறி, கட்சியினர் உள்ளே செல்ல முயன்றதால், பல இடங்களில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் சிக்கியதாலும், வெயிலின் தாக்கத்தாலும், பலர் மயக்கமடைந்தனர். நினைவிடம் செல்லும் வழியில், முன்னாள் அமைச்சர், மோகன் மயக்கமடைந்தார். உடனடியாக, அவர் முகத்தில் தண்ணீர் தெளித்து, ஓரமாக அமர வைத்தனர். உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி முடிந்ததும், அவைத் தலைவர், மதுசூதனன், முன்னாள் அமைச்சரும், தற்போதைய எம்.பி.,யுமான, ஏ.கே.செல்வராஜ், எம்.ஜி.ஆர்., மன்ற செயலர், தமிழ்மகன் உசேன் ஆகியோருக்கு மயக்கம் ஏற்பட்டது. ஏ.கே.செல்வராஜை, அமைச்சர் வேலுமணி தன் காரில் ஏற்றி, மருத்துவமனைக்கு சென்றார். அவைத் தலைவர், மதுசூதனனை, ஆட்டோ ஒன்றில் அனுப்பி வைத்தனர்.


தினகரன், தீபா அஞ்சலி:

ஜெ., நினைவிடத்தில், அ.ம.மு.க., சார்பில், அக்கட்சி துணை பொதுச்செயலர், தினகரன், கட்சி நிர்வாகிகளுடன், ஊர்வலமாக வந்து, மலர் அஞ்சலி செலுத்தினார். அ.தி.க., சார்பில், சசிகலாவின் தம்பி, திவாகரன், அவரது மகன், ஜெய்ஆனந்த் ஆகியோர், மலர் வளையம் வைத்து, அஞ்சலி செலுத்தினர். ஜெ., அண்ணன் மகள், தீபா, தன் கணவர், மாதவனுடன், காலையிலேயே நினைவிடம் வந்து, அஞ்சலி செலுத்தி சென்றார்.


மறைந்தும் மறையாத மவுசு!

தனது இரண்டாவது நினைவு நாளான, நேற்று, சமூக வலைதளங்களை, ஜெயலலிதா ஆக்கிரமித்தார். அ.தி.மு.க., பொதுச்செயலராகவும், முதல்வராகவும் இருந்த ஜெயலலிதா, 2016 டிச., 5ல், மறைந்தார். அவரது இரண்டாம் ஆண்டு நினைவு நாளான நேற்று, ஆளும் கட்சியினர் மட்டுமின்றி, மாணவர்கள், விவசாயிகள், பொது மக்கள், தொழிலாளர்கள், சமூக ஆர்வலர்கள், அரசு அதிகாரிகள், அலுவலர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் என, பலரும் சமூக வலைதளங்கள் வாயிலாக, அவருக்கு அஞ்சலி செலுத்தினர். தங்களது சமூக வலைதள பக்கங்களில், ஜெயலலிதாவின் படங்களை முகப்பு போட்டோவாக வைத்திருந்தனர். ஜெயலலிதா பேசிய வீடியோக்களையும், மற்றவர்களுக்கு பரப்பினர். இதனால், மறைந்து இரண்டாண்டுகள் ஆகியும், மவுசு குறையாதவராக, மறக்க முடியாதவராக, சமூக வலைதள பக்கங்களை, நேற்று முழுவதும், ஜெயலலிதா ஆக்கிரமித்து இருந்தார்.


Advertisement

போக்குவரத்து ஸ்தம்பிப்பு :

ஜெ., நினைவு அஞ்சலி நிகழ்ச்சிகளால், சென்னையின் முக்கிய சாலைகளில், நேற்று போக்குவரத்து ஸ்தம்பித்தது. அ.தி.மு.க., மற்றும் அ.ம.மு.க., சார்பில் நடந்த ஊர்வலங்களில் பங்கேற்க, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலுார், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் இருந்து, ஏராளமான வாகனங்களில், கட்சியினர் வந்திருந்தனர். வாகனங்கள் அனைத்தும், கடற்கரை சர்வீஸ் சாலை, தீவுத்திடல், சிவானந்தா சாலை உள்ளிட்ட இடங்களில் நிறுத்தப்பட்டன. ஊர்வலம் நடந்த வாலாஜா சாலையில், காலை, 10:00 மணியிலிருந்து, வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை. கார்களில் வந்தவர்கள், ஆங்காங்கே தங்களுடைய வாகனத்தை நிறுத்தினர். இதன் காரணமாக, கடற்கரை சாலை, அண்ணா சாலை, பாந்தியன் சாலை, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை என, அனைத்து சாலைகளிலும், போக்குவரத்து ஸ்தம்பித்தது. அலுவலகம் செல்வோர், மருத்துவமனை செல்வோர், பெரும் சிரமத்திற்குள்ளாகினர். வாகன ஓட்டிகள், எந்தப் பக்கம் செல்வது என, தெரியாமல் சிரமப்பட்டனர். ஏராளமானோர் அஞ்சலி செலுத்த வருவர் என்பது தெரிந்திருந்தும், வாகனங்களை எங்கே நிறுத்துவது, எந்த சாலையில் வாகனங்கள் செல்ல வேண்டும் என்பது குறித்து, போலீசார் முன்னதாக அறிவிக்காததால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். பகல், 2:00 மணிக்கு பின், போக்குவரத்து சீரானது.


அ.ம.மு.க.,வுடன் கலந்த அ.தி.மு.க.,

ஜெ., நினைவிடத்தில், முதல்வர் மற்றும் அமைச்சர்கள், நினைவஞ்சலி செலுத்தி புறப்பட்ட பின், அ.ம.மு.க., சார்பில், தினகரன் அஞ்சலி செலுத்த வந்தார். அப்போது, தாமதமாக வந்த, அ.தி.மு.க.,வினரும், அவர்களோடு கலந்தனர். அ.தி.மு.க., ஊர்வலம் முடிந்ததும், அந்த சாலையில், அ.தி.மு.க.,வினரால் நடப்பட்ட கம்புகளில், அ.தி.மு.க., கொடிகள் அகற்றப்பட்டு, அ.ம.மு.க., கொடிகள் கட்டப்பட்டன.


Advertisement

வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தேச நேசன் - Chennai,இந்தியா
06-டிச-201816:56:49 IST Report Abuse

தேச நேசன் சமாதியில் மூன்று முறை அடிக்கத்தான் ஆளில்லை

Rate this:
tamil - coonoor,இந்தியா
06-டிச-201809:28:23 IST Report Abuse

tamilஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ் போன்றவர்கள் அம்மா வோட சமாதியில் நின்றுகொண்டு அழுவதை விட அவர் போல வீரமாக செயல்படவேண்டும்,

Rate this:
06-டிச-201806:49:07 IST Report Abuse

ஆப்புகருப்பு மந்தையிலே யார் அது ஒரு வெளுப்பு ஆடு? ட்ரஸ்ஸத்தான் சொல்லுறேன்.

Rate this:
மேலும் 6 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X