அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
பார்லி.,யில் பிரச்னையை கிளப்புங்கள்
அ.தி.மு.க., - எம்.பி.,க்களுக்கு உத்தரவு

சென்னை: மேகதாது அணை மற்றும் புயல் பாதிப்பு பிரச்னையை பார்லிமென்டில் எழுப்பும்படி, அதிமுக - எம்.பி.,க்களுக்கு கட்சி தலைமை உத்தரவிட்டுள்ளது.

மேகதாது,விவகாரம்,அ.தி.மு.க.,எம்.பி.க்களுக்கு,உத்தரவு


பார்லிமென்ட் குளிர் கால கூட்டத் தொடர், வரும், 11ம் தேதி துவங்குகிறது. அதையொட்டி, அ.தி.மு.க., - எம்.பி.க்கள் கூட்டம், சென்னையில் உள்ள, கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாலை, 5:00 மணிக்கு துவங்கிய கூட்டம், 6:15 மணிக்கு நிறைவடைந்தது. கூட்டத்தில், கட்சி ஒருங்கிணைப்பாளர், பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர், பழனிசாமி ஆகியோர், எம்.பி.,க்களுக்கு பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளனர்.

அதன் விபரம்: மேகதாது அணை கட்டுவதற்கான, ஆய்வு அறிக்கையை தயாரிக்க, கர்நாடக அரசுக்கு, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

அதை திரும்பப் பெற வேண்டும் என, தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது. இதே கருத்தை வலியுறுத்தி, பிரதமருக்கு, முதல்வர் பழனிசாமி, கடிதம் எழுதி உள்ளார்.

எனவே, பார்லிமென்ட் கூட்டத்தொடரில், கர்நாடக அரசுக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய, வலியுறுத்த வேண்டும். கஜா புயலால், தமிழகத்திற்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மீட்பு பணிகள் மேற்கொள்ள, தமிழக அரசு கேட்ட நிவாரணத் தொகையை வழங்கும்படி, வலியுறுத்த வேண்டும்.

இக்கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்து, எம்.பி.,க்களும் ஒன்றாக கலந்தாலோசித்து, ஒரு நாளில் பிரதமரை சந்தித்து, கோரிக்கை மனு அளியுங்கள். இரு பிரச்னைகளுக்கும் தீர்வு கிடைக்கும் வகையில், உங்கள் செயல்பாடுகள் இருக்க வேண்டும். இவ்வாறு அறிவுரை வழங்கி உள்ளனர்.

எம்.பி.,க்கள் கூட்டம் முடிந்த பின், அமைச்சர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இன்று நடக்க உள்ள, சிறப்பு சட்டசபை கூட்டம் குறித்து, ஆலோசித்து உள்ளனர்.

சட்டசபையில் இன்று தீர்மானம் :

மேகதாது அணை பிரச்னை குறித்து விவாதிப்பதற்காக, இன்று மாலை, 4:00 மணிக்கு, சட்டசபை சிறப்பு கூட்டம் நடக்க உள்ளது. இதில், மேகதாது அணை தொடர்பாக, கர்நாடகாவுக்கு அனுமதி அளித்த உத்தரவை திரும்ப பெற, மத்திய அரசை வலியுறுத்தி, தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.


Advertisement

கர்நாடகா மீது வழக்கு:

மேகதாது அணை பிரச்னை தொடர்பாக, கர்நாடக அரசு மீது, தமிழக அரசு, உச்ச நீதிமன்றத்தில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது. மேகதாது அணை பிரச்னையில், உச்ச நீதிமன்றத்தில், தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனுவில், 'மத்திய நீர் வளத்துறை ஆணையம் அளித்த அனுமதிக்கு, தடை விதிக்க வேண்டும்' என, வலியுறுத்தப்பட்டு உள்ளது. ஏற்கனவே, உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பில், 'தமிழக அரசின் அனுமதி பெறாமல், கர்நாடக அரசு, காவிரி தொடர்பான எந்த திட்டத்தையும் துவக்கக் கூடாது' என, உத்தரவிடப்பட்டு உள்ளது. அதை மீறி, மேகதாது அணை கட்டுவதற்கான, ஆரம்ப கட்டப் பணிகள் துவக்கப்பட்டுள்ளன. கர்நாடக அரசு மீதும், மத்திய நீர்வள ஆணையத் தலைவர் உள்ளிட்ட, ஐந்து பேர் மீதும், தமிழக அரசு சார்பில், உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. தமிழக மீன் வளத் துறை அமைச்சர், ஜெயகுமார் கூறுகையில், ''மேகதாது அணை பிரச்னையில், நீதிமன்ற உத்தரவு மீறப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தில், கர்நாடகா மீது, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது,'' என்றார்.


Advertisement

வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
06-டிச-201820:14:02 IST Report Abuse

A.George AlphonseIf the AIADMK MPs maintained silence during the winter session of the Parliament without showing any objection or resistance to the Megadhadhu issue our state government can not achieve any thing in future from central government.The MPs of our state should show their resistance for Megadhadhu issue very firmly to the whole country through their actions in Parliament.,"Myieleh Mylieh ral Eraghu Podadhu".The MPs of our state are to be very firm in their attempts and make their resistance successful in this winter session of this Parliament.The Karnataka state government should not proceed further in the Megadhadhu issue and should it immediately for the betterment of both the states and also for our country.

Rate this:
sathy - chennai,இந்தியா
06-டிச-201817:01:56 IST Report Abuse

sathyமக்கள் விரும்பும் ஆட்சியாக அதிமுக ஆட்சி இருக்கு

Rate this:
pattikkaattaan - Muscat,ஓமன்
06-டிச-201810:33:06 IST Report Abuse

pattikkaattaan சரியான மேய்ப்பன் இல்லாத மந்தை ஆடுகள் ... என்ன செய்யும் என்று பார்க்கலாம்

Rate this:
மேலும் 6 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X