பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
வெறும் தூறலுக்கு பள்ளி விடுமுறை கூடாது!
கலெக்டர்களுக்கு அரசு கடும் கண்டிப்பு

சென்னை: 'வெறும் துாறலுக்கு எல்லாம், பள்ளிகளுக்கு விடுமுறை விடக் கூடாது' என, மாவட்ட கலெக்டர்களுக்கு, தமிழக அரசு எச்சரிக்கை விடுத்து உள்ளது.

வெறும் தூறலுக்கு,பள்ளி,விடுமுறை,கூடாது,கலெக்டர்களுக்கு,அரசு ,கண்டிப்பு


பள்ளி, கல்லுாரிகளுக்கு மழைக்கால விடுமுறை விடுவதில், எந்த விதிமுறையும் கிடையாது. லேசான துாறலுக்கு கூட, முன்னெச்சரிக்கை என்ற பெயரில், விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது.

சென்னை தவிர, பிற மாவட்டங்களில், 10 செ.மீ., மழை பெய்தால் கூட, பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவது இல்லை. ஆனால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில், லேசாக துாறல் விழுந்தாலும், பள்ளிகளுக்கு விடுமுறை கோரி, ஒரு கும்பல், சமூக வலைதளங்களில் வதந்தி பரப்புகிறது. வேறு வழியின்றி, கலெக்டர்களும், பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கின்றனர். இதனால், சென்னை மாணவர்களுக்கு, அதிக விடுமுறை கிடைத்து, பாடங்களை நடத்த முடியாமல், தேர்ச்சி பாதிக்கப்படுகிறது.

இதுகுறித்து, பள்ளிக்கல்வி துறைக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து, விடுமுறை அறிவிப்புக்கு, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. இதுகுறித்து, தமிழக பள்ளிக்கல்வி முதன்மை செயலர்,

பிரதீப் யாதவ், மாவட்ட கலெக்டர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

அதன் விபரம்:


புயல் மற்றும் மிக கன மழை எச்சரிக்கை உள்ள காலங்களில், முன்னெச்சரிக்கையாக, பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவது வழக்கம். மழை, வெள்ளம் மற்றும் புயல் நிவாரண நடவடிக்கைகளுக்கு, அரசு பள்ளிகள் நிவாரண முகாம்களாக பயன்படுத்தப்படும்.

சமீப காலமாக, சாதாரண மழை துாறல், இயல்பான மழை காலம், வெயில் அடிக்கும் காலங்களில் கூட, பள்ளிகளுக்கு, மாவட்ட கலெக்டர்கள் விடுமுறை அறிவிக்கின்றனர். அதனால், பள்ளி மாணவர்களுக்கு, அவர்களின் தேர்வு தேதியை இலக்கிட்டு, பாடம் நடத்துவது கடுமையாக பாதிக்கப்படுகிறது இனி வரும் நாட்களில், மழைக்கான விடுமுறை அறிவிப்பதில், சில விதிகளை பின்பற்ற வேண்டும்.

* பெரும் மழையால், சாலைகளில் நீர் தேங்கி, போக்கு வரத்து மற்றும் இயல்பு வாழ்க்கை பாதிக்கும் என்றால், விடுப்பு அறிவிக்கலாம். மாறாக, வெறும் துாறலை காரணமாக வைத்து, விடுமுறை அறிவிக்கக் கூடாது
* பள்ளிகள் திறக்கும் நேரத்துக்கு, மூன்று மணி நேரத்துக்கு முன், வானிலை சூழல் மற்றும் முன்னெச்சரிக்கையை கணக்கிட்டு, பள்ளிகளுக்கான விடுமுறையை முடிவு செய்ய வேண்டும்
* முதன்மை கல்வி அதிகாரிகள் நிலைமையை கண்காணித்து, பள்ளிகளை நடத்தலாமா, விடுமுறை விடலாமா... என, கலெக்டருக்கு கருத்து தெரிவிக்கலாம்

Advertisement


* எந்த பகுதிக்கு பாதிப்போ, அங்கு மட்டும் விடுமுறை விட வேண்டும். முழு வருவாய் மாவட்டத்துக்கும் விடுமுறை அறிவிக்கக் கூடாது. கல்வி மாவட்டம், ஒன்றியம் அல்லது உள்ளாட்சி பகுதி என, பிரித்து விடுமுறை அறிவிக்கலாம்
* மழைக்கால விடுமுறை என்றாலும், உள்ளூர் கோவில் விழாக்களுக்கான விடுமுறை என்றாலும், அதற்கு இணையாக, இன்னொரு நாள் கூடுதலாக பள்ளிகள் இயங்கி, வகுப்புகளை முழுமையாக நடத்த வேண்டும்
* அந்த விடுமுறை நாளுக்கான பாட திட்டப்படி, முழுமை யாக வகுப்புகள் நடத்த வேண்டும். விடுமுறை யால், எந்த பாடமும் விடுபடக் கூடாது
* மழை காலங்களில், பள்ளிகளை விரைந்து திறப்பதற்கு ஏற்ற வகையில், அந்த பகுதியிலும், பள்ளியிலும், தேங்கிய நீரை வெளியேற்றுதல், வளாகத்தை சுத்தம் செய்தல் போன்றவற்றை, விரைந்து முடிக்க வேண்டும்
* இந்த விபரங்களை ஆய்வு செய்து, கலெக்டர்கள் விடுமுறை அறிவிக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


Advertisement

வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
06-டிச-201814:45:18 IST Report Abuse

Natarajan Ramanathanமழைக்காக எல்லாம் பள்ளிகளுக்கு விடுமுறை விடுவது அபத்தம். வேண்டுமானால் நீதிமன்றங்களுக்கு மட்டும் விடுமுறை விடலாம்.

Rate this:
ganapati sb - coimbatore,இந்தியா
06-டிச-201812:57:03 IST Report Abuse

ganapati sbபள்ளி குழந்தைகளுக்கு படிக்கச் உதவியாக அரசு பல இலவசங்கள் தருவது போல ரெயின் கோட் ஒன்றும் இலவசமாக கொடுக்கலாம்

Rate this:
bhairav - chennai ,இந்தியா
06-டிச-201812:49:03 IST Report Abuse

bhairavமழை காரணமாக விடுமுறை விடுவதே சிறந்தது ஏனெனில் நமது சாலைகள் சிறு தூறலுக்கு கூட தாக்கு பிடிப்பதில்லை. முதலில் தரம் வாய்ந்த சாலைகள், மின் கசிவு இல்லாத மூடப்பட்ட மின் இணைப்புகள், தரம் வாய்ந்த போக்குவரத்து வாகனங்கள், தரம் வாய்ந்த கட்டிடங்கள் உடைய பள்ளிக்கூடங்கள் போன்ற அத்தியாவசியமான தேவைகளை நிறைவு செய்து விட்டு இது போன்ற அறிவிப்புக்கள் வெளியிடுவது சிறந்தது. பெரியவர்களே வேலைக்கு செல்ல சிரமப்படும் காலங்களில் குழந்தைகள் படும் பாடு சொல்ல முடியாது. இந்த அறிவிப்புகளை வெளியிடும் முன் தாங்களும் மழை காலங்களில் பேருந்துகளை உபயோகித்து பாருங்கள் அப்பொழுது தான் தங்களால் உணர முடியும். மேலும் பலரது குழந்தைகள் தனியார் பள்ளிகளில் படிக்கின்றனர். அவர்கள் ஏற்கனவே தங்களது பள்ளிகளில் தினமும் சிறப்பு வகுப்புகள், சனி கிழமை பள்ளிக்கூடம் வைத்து மாணவர்களை அவர்களின் இனிமையான பள்ளிப் பருவத்தை கொடுமையான தொழிற்சாலைகளாக மாற்றி வருகின்றனர். எனவே தான் மழலையர் பள்ளிக்கூட குழந்தைகள் முதல் பள்ளி இறுதி வகுப்பில் இருக்கும் மாணவர்கள் வரை அனைவரும் மழை பெய்யும் போது பள்ளி விடுமுறை என்ற அறிவிப்பை எதிர்பார்த்து காத்து இருக்கின்றனர். தயவு செய்து அவர்களது இந்த சிறு சந்தோசத்தை கெடுக்காதீர்கள்.

Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X