பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
விரைவில் வெளியாகிறது
திருவாரூர் இடைத்தேர்தல் தேதி

திருவாரூர் தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதி ஓரிரு வாரங்களுக்குள் வெளியாகும் என தெரிகிறது.

விரைவில்,வெளியாகிறது,திருவாரூர்,இடைத்தேர்தல்,தேதி


தமிழகத்தில், 20 சட்டசபை தொகுதிகள் காலியாக உள்ளன. இவற்றில், வழக்கு காரணமாக, திருப்பரங்குன்றம் தொகுதி மட்டும் விடுபட்டு நிற்கிறது. ஆனால், திருவாரூர் தொகுதி தான், தற்போது எதிர்பார்ப்பை கிளப்பி உள்ளது.

திருவாரூர் தொகுதிக்கு, ஜன., 7க்குள், இடைத்தேர்தல் நடத்தி முடிக்கப்பட வேண்டும்.

அதன்பின்னும், அத்தொகுதிக்கு கால நீட்டிப்பு செய்ய முடியுமா என தெரியவில்லை. அதனால், ஜன., 5 அல்லது, 6ல் ஓட்டுப்பதிவு நடக்க வேண்டும். இதன்படி பார்த்தால், 15க்குள், தேர்தல் குறித்த அறிவிப்பை, தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டாக வேண்டும்.

இந்நிலையில், 'கஜா' புயல் பாதிப்பு காரணமாக, தேர்தல் ஒத்திவைக்கப்படலாமோ என்ற கருத்தும் இருந்தது. ஆனால், 'ஓரிரு வாரங்களில் அது சரியாகிவிடுமே' என, சமீபத்தில் ஓய்வு பெற்ற, தலைமை தேர்தல் ஆணையர், ராவத் கூறியிருந்தார். திருவாரூர் மாவட்டத்தில் வேண்டுமானால், பாதிப்புகள் இருக்கலாம். திருவாரூர் சட்டசபை தொகுதி பாதிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்த விரிவான விபரங்கள், இன்னும் தலைமை தேர்தல் ஆணையத்திற்கு வந்து சேரவில்லை.

இந்த விபரங்கள் மட்டு மல்லாது, இடைத்தேர்தல் நடத்தப்படுவதற்கான பொதுவான அரசியல் சூழ்நிலைகள் உட்பட, பல விஷயங்கள்

Advertisement

குறித்தும் தெளிவான பதில்களை தருவதில், சம்பந்தப்பட்ட வட்டாரங்களும் குழப்பமாக உள்ளன. ஆனாலும், தற்போது காலக்கெடு நெருங்கி விட்டது. எனவே, திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலுக்கு நாள் குறித்தாக வேண்டும். இதனால், ஐந்து மாநில சட்டசபை தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை முடிந்ததும், தேர்தல் ஆணையம் இது தொடர்பான அறிவிப்பை வெளியிடலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.

- நமது டில்லி நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
PRABHAKAR BENEDICT - DOHA,கத்தார்
06-டிச-201820:55:50 IST Report Abuse

PRABHAKAR BENEDICTEven if the election dates are finalised, it will be first announced by BJP Leaders only, as is being done repeatedly The election Commission announcement will follow later onlyThat is the level of independence we see today with the Election Commission. Pathetic

Rate this:
Sridhar Rengarajan - Trichy,இந்தியா
06-டிச-201815:48:18 IST Report Abuse

Sridhar Rengarajanமன்னார்குடி மாஃபியாவை அதிமுக தொண்டர்கள் ஒழித்துக் கட்டியதை போல, அதைவிட ஆயிரம் மடங்கு தீங்கு விளைவிக்க கூடிய திருக்குவளை மாஃபியாவை திமுக தொண்டர்கள் ஒழித்துக்கட்ட வேண்டும். அப்போதுதான் தமிழ்நாடு உருப்படும்.

Rate this:
Mani . V - Singapore,சிங்கப்பூர்
06-டிச-201809:50:23 IST Report Abuse

Mani . Vஎன்ன அவசரம்? இன்னும் ஒரு இரண்டு வருடம் கழித்து நடத்தலாமே இந்தியாவில் சேஷனுக்குப் பின் தேர்தல் கமிஷன் ஒன்றுக்கும் லாயக்கில்லாமல் போய் விட்டது.

Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X