பொது செய்தி

தமிழ்நாடு

இயற்கை விவசாயி நெல் ஜெயராமன் இன்று (டிச. 6) காலை காலமானார்

Updated : டிச 06, 2018 | Added : டிச 06, 2018 | கருத்துகள் (41)
Advertisement
Nel Jayaraman passed away, Nel Jayaraman, Farmer Nel Jayaraman, நெல் ஜெயராமன் காலமானார், இயற்கை விவசாயி நெல் ஜெயராமன், நெல் ஜெயராமன், விவசாயி நெல் ஜெயராமன்,நெல் ஜெயராமன் மரணம் , சென்னை அப்பல்லோ மருத்துவமனை, புற்றுநோய் , Chennai Apollo Hospital, Cancer, natural farmer Nel Jayaraman,  Nel Jayaraman death,

சென்னை: சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நெல்ஜெயராமன், 60, சிகிச்சை பலனின்றி இன்று காலை காலமானார்.
பாரம்பரிய நெல் ரகங்களை விவசாயிகள் விளைவிக்க வேண்டும் என்பதற்கான முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தவர் நெல் ஜெயராமன். 160 - க்கும் மேற்பட்ட அரியவகை நெல் விதைகளை சேகரித்தார். இ்ந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக புற்றுநோயால் அவதியுற்று வந்தார். சென்னை தேனாம்பேட்டையில் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிப்பட்டிருந்த நிலையில் இன்று ( டிச. 6) காலை 5.10 மணியளவில் சிகிச்சை பலனின்றி இறந்ததாக உறவினர்கள் தெரிவித்தனர்.


விருது

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியை அடுத்த, கட்டிமேடு கிராமத்தில், ஏழை விவசாய குடும்பத்தில் பிறந்தவர், இயற்கை விவசாயம் உள்ளிட்ட பல்வேறு வேளாண் பணிகளை தொடர்ந்து பிரசாரம் மேற்கொண்டுவந்தார். மரபணு மாற்ற விதை திட்டங்களுக்கு எதிராக போராடி வந்தார்.பாரம்பரிய நெல் விதைகளை காப்பாற்றியமைக்காக மத்திய, மாநில அரசுகளின் விருது பெற்றார்.அஞ்சலி

சென்னை தேனாம்பேட்டையில் வைக்கப்பட்டுள்ள இயற்கை விவசாயி நெல் ஜெயராமனின் உடலுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். பின்னர் பேசிய அவர், நெல் ஜெயராமனின் மறைவு விவசாய மக்களுக்கு பேரிழப்பு. நெல் விவசாயம் இயற்கை அடிப்படையில் மறுமலர்ச்சி ஏற்பட பாடுபட்டவர் என தெரிவித்தார்.
அமைச்சர் காமராஜ், டிஜிபி ராஜேந்திரன், தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முத்தரசன் உள்ளிட்டோர் நேரில் சென்று நெல் ஜெயராமன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.


முதல்வர் இரங்கல்

நெல் ஜெயராமன் மறைவு தொடர்பாக முதல்வர் பழனிசாமி வெளியிட்ட இரங்கல் செய்தி: நெல் ஜெயராமன் மறைவு செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். 174 பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்து, விவசாயிகளிடையே பிரபலபடுத்தி உள்ளார். அவரது மறைவு நாட்டிற்கும் விவசாய துறைக்கும் ஒரு பேரிழப்பாகும். ஜெயராமனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், விவசாய மக்களுக்கும் எனுது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்து கொள்கிறேன். அவரது ஆன்மா, இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
கமல் இரங்கல்

மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல் வெளியிட்ட அறிக்கை:

Advertisement
வாசகர் கருத்து (41)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
இந்தியன் kumar - chennai,இந்தியா
06-டிச-201816:54:08 IST Report Abuse
இந்தியன் kumar நல்லவர்கள் கஷ்டப்பட்டு கொண்டிருப்பதை இறைவன் விரும்ப மாட்டார் தன் நிழல் அடியில் வைத்துக்கொள்வார்.
Rate this:
Share this comment
Cancel
Natesan Narayanan - Sydeny,ஆஸ்திரேலியா
06-டிச-201814:49:45 IST Report Abuse
Natesan Narayanan பல தகுதியில்லாத பேர்களுக்கு ரோடு பெயர் வைக்கும் நாம் , ஜெயராமன் பெயரில் ஒரு நெல் பெயர் வைக்க வேண்டும் . அரசியல் வாதிகளுக்கு அன்பான கட்டளை.
Rate this:
Share this comment
Cancel
சென்னை, மகாதேவி. சோறு சாப்பிடுபவன் என்கிற முறையில் அவர் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X