மேகதாது விவகாரம் : அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை| Dinamalar

மேகதாது விவகாரம் : அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை

Updated : டிச 06, 2018 | Added : டிச 06, 2018 | கருத்துகள் (2)
Advertisement
Mekedatu Dam,  TN Assembly, CM Kumaraswamy, மேகதாது அணை,  கர்நாடகா ஆலோசனைக் கூட்டம், தமிழக சிறப்பு சட்டசபை கூட்டம்,  தமிழக சட்டசபை, முதல்வர் குமாரசாமி, கர்நாடக அமைச்சர் சிவக்குமார் , மத்திய அரசு,கர்நாடகா,
Karnataka, Karnataka Consulate Meeting, Tamilnadu Special Assembly Meeting, Central Government, Tamil Nadu Legislative Assembly, HD Kumaraswamy, Karnataka Minister Shivakumar,

பெங்களூரு : மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழகத்தில் சிறப்பு சட்டசபை கூட்டம் இன்று நடைபெற உள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக கர்நாடகாவிலும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கர்நாடகத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்டும் கர்நாடக அரசின் திட்டத்திற்கு மத்திய அரசு முதல் கட்ட ஒப்புதலை வழங்கியுள்ளது. ரூ.5,912 கோடியில் இந்த அணை கட்டப்படுகிறது. கர்நாடக அரசு, விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்கும் பணியை தொடங்கியுள்ளது. இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மத்திய அரசு அனுமதி வழங்கியதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. மேகதாது திட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற தமிழக சட்டசபையின் சிறப்பு கூட்டம் இன்று(டிச.,6) நடக்கிறது.

இந்நிலையில் மேகதாது திட்டம் குறித்து விவாதிக்க கர்நாடகாவில் முன்னாள் முதல்வர்கள் மற்றும் முன்னாள் நீர்ப்பாசனத்துறை அமைச்சர்களின் ஆலோசனை கூட்டம் முதல்வர் குமாரசாமி தலைமையில் பெங்களூருவில் நடந்தது. இதில் நீர்ப்பாசனத்துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார் உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். மேகதாது திட்ட விவகாரத்தில் தமிழக அரசின் எதிர்ப்பை எவ்வாறு எதிர்கொள்வது, இந்த திட்டத்தை அடுத்தகட்டமாக எப்படி முன்னெடுத்து செல்வது என்பது குறித்து குமாரசாமி ஆலோசனைகளை கேட்டார்.

கர்நாடக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் சிவக்குமார் தலைமையில் ஒரு குழு, நாளை(டிச.,7) மேகதாதுவுக்கு சென்று அந்த இடத்தை நேரில் ஆய்வு செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
நாஞ்சில் நாடோடி - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
06-டிச-201814:06:58 IST Report Abuse
நாஞ்சில் நாடோடி தமிழ்நாட்டிலுள்ள நீராதாரங்களை மேம்படுத்த தமிழக அரசு எந்த நடவடிக்கையையும் எடுத்ததாக தெரியவில்லை...
Rate this:
Share this comment
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
06-டிச-201810:36:23 IST Report Abuse
A.George Alphonse Untill unless all Jeeva Nadhigal of our country are not Nationalised all the selfish states won't allow the neighbouring states to enjoy their shares of water to their states peacefully forever.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X