கோர்ட் செய்தி

தமிழ்நாடு

ஒப்புதலுக்கு பின் 45 மாதங்களில் மதுரையில் எய்ம்ஸ் செயல்படும்: மத்திய அரசு

Added : டிச 06, 2018 | கருத்துகள் (29)
Advertisement
AIIMS Madurai, Madurai Highcourt,  Health Ministry, எய்ம்ஸ் மதுரை, மத்திய அரசு,  மதுரை ஐகோர்ட், சுகாதார அமைச்சகம்,  ரமேஷ், எய்ம்ஸ் மருத்துவமனை, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை, எய்ம்ஸ், மதுரை எய்ம்ஸ் ,AIIMS
Central Government,  Madurai AIIMS, Ramesh, AIIMS Hospital, Madurai AIIMS Hospital,

மதுரை: மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த பின் 45 மாதங்களில், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை செயல்பாட்டிற்கு வரும் என மத்திய சுகாதார அமைச்சகம் ஐகோர்ட் மதுரை கிளையில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த மருத்துவமனையை விரைவாக அமைக்க வேண்டும் என ரமேஷ் என்பவர், ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த கோர்ட், பதில் மனு தாக்கல் செய்ய மத்திய அரசிற்கு உத்தரவிட்டது.

இந்நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் தாக்கல் செய்த பதில் மனுவில், எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்கப்பட்ட 45 மாதங்களில் செயல்பட துவங்கும். மருத்துவமனைக்கான திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு, நிதிக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஒப்புதல் கிடைத்தபின்னர், மத்திய அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கப்படும் எனக்கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து, இந்த வழக்கை, ஐகோர்ட் முடித்து வைத்தது.

Advertisement
வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
venkat - chennai,இந்தியா
07-டிச-201809:48:20 IST Report Abuse
venkat வழக்கம் போல வளர்ச்சித் திட்ட நாயகர் பிரதமர் மோடியை விவரம் அறியாது புரியாது அலம்பல் செய்யும் கருத்துக் கண்ணாயிரங்கள் தெளிவு பெற >> 1956 ல் டெல்லி எய்ம்ஸ் அமைந்த பின் பி ஜெ பி nda பிரதமர் வாஜ்பாய் அவர்களால்தான் 6 எய்ம்ஸ் அமைக்க திட்டம் அனுமதிக்கப் பட்டது. அவரது குறைந்த கால ஆட்சியால் அவை பின்னர் காங்கிரஸ் upa காலத்தில் முடிக்கப் பட்டன. காங்கிரஸ் upa காலத்தில் ஒரே ஒரு எய்ம்ஸ் ரே ப்ரேள்ளியில் 2008 ல் திட்டமிட்டு 2009 ல் அனுமதிக்கப்பட்டு பின் காங்கிரஸ் 5 வருட ஆட்சியில் 2014 க்குள் முடிவு பெறாது 2020 ல் தான் நிறைவு பெரும். காங்கிரஸ் upa ஒன்றே ஒன்று கண்ணே கண்ணு முறையை மாற்றி, பி ஜெ பி nda பிரதமர் அனுமதித்த 6 எய்ம்ஸ் மாதிரி பி ஜெ பி nda தலைமை தீர்க்க தரிசி பிரதமர் மோடியும் 2014 ல் 4 , 2015 ல் 7 , 2017 ல் 2 மொத்தம் 13 எய்ம்ஸ் அனுமதித்து வேலைகள் நடைபெற்று வருகின்றன. இவ்வேலைகளின் வேகம் அந்தந்த மாநில அரசுகளில் ஒத்துழைப்பை பொறுத்தது என்பது, காங்கிரஸ் upa அரசு திட்டமிட்ட ஒரே ஒரு எய்ம்ஸ் அவர்களால் 5 வருடங்களில் நிறைவு செய்ய முடியவில்லை என்பதை படித்தால் புரிந்து கொள்ள முடியும். இதன் முழு புள்ளிவிவரம் இதோ >> AIIMS Status, Funds Released & Expected Date Of Completion Proposed Status % of approved outlay released Expected date for completion of project 2003 Bhopal, Madhya Pradesh Functional - Completed Bhubaneshwar, Odisha Functional - Completed Jodhpur, Rajasthan Functional - Completed Patna, Bihar Functional - Completed Raipur, Chhattisgarh Functional - Completed Rishikesh, Uttarakhand Functional - Completed 2008 Raebareli, Uttar Pradesh Approved 12.6 March, 2020 2014-15 Nagpur, Maharashtra Approved 3.4 Feb, 2020 Gorakhpur, Uttar Pradesh Approved 0.9 March, 2020 Kalyani, West Bengal Approved 3.3 Feb,2020 Mangalagiri, Andhra Pradesh Approved 3.3 Feb,2020 2015-16 Guwahati, Assam Approved 0.4 April, 2021 Bihar (yet to be decided) Cabinet yet to approve NA Dec, 2022 Bilaspur, Himachal Pradesh Approved 0 Sept, 2021 Awantipora, Jammu & Kashmir Cabinet yet to approve 2.3 2024 (tentative) Samba, Jammu & Kashmir Cabinet yet to approve 0 2022 (tentative) Bathinda, Punjab Approved 1.6 April, 2020 Tamil Nadu (yet to be decided) Cabinet yet to approve NA Sept, 2022 2017-18 Gujarat (yet to be decided) Cabinet yet to approve 0 Sept, 2022 Deogarh, Jharkhand Approved 0 Sept, 2022 Source: Lok Sabha, PMSSY
Rate this:
Share this comment
Cancel
ரத்தினம் - Muscat,ஓமன்
07-டிச-201808:59:10 IST Report Abuse
ரத்தினம் அடுத்த மாநில த்தவர்கள் இங்கு மருத்துவரான வரக்கூடாது ன்னா, நம்ப மாநிலத்தில் உள்ளவங்க அடுத்த மாநிலத்தில், அடுத்த நாட்டில வேல செய்யக்கூடாதுன்னு சொல்லுங்க, இங்க பாதி மெடிக்கல் காலேஜ இழுத்து மூடிடுவான். சிறப்பாக பணியாற்றும் முக்கா வாசி மலையாள நர்ஸுங்கள வீட்டுக்கு அனுப்பனும். நோயாளிகளிடம் நோயைப்பற்றி கேட்டு தெரிந்து கொள்வது அவசியம் தான். கூடிய வரை தமிழ் தெரிந்த மருத்துவர்களை போடலாம். தமிழ் தெரியாத ஒரு சில சிறப்பு மருத்துவர்கள் தங்களிடம் இருக்கும் உதவி மருத்துவர்கள் மூலம் அந்த இடைவெளியை பூர்த்தி செய்து விடுவார்கள். மேலும் எய்ம்ஸ் மருத்துவமனையில் தமிழே பேசமாட்டார்கள், தமிழ் மருத்துவர்களே இருக்க மாட்டார்கள் என்று பீலா விடுவது மடத்தனம். தென் தமிழ் நாட்டு க்குள் இருக்கும் மதுரை அரவிந்த் மருத்துவமனையில் எவ்வளவு வெளி மாநில மருத்துவர்கள் உள்ளனர். அது சிறப்பாக செயல்படவில்லையா?
Rate this:
Share this comment
Cancel
ரத்தினம் - Muscat,ஓமன்
07-டிச-201808:42:16 IST Report Abuse
ரத்தினம் சும்மா மத்திய அரச, மோடியை ஏதாவது குத்தம் சொல்லிக்கிட்டு இருக்கணும்னு அரை வேக்காட்டு தனமா கமெண்டு அடிக்கக்கூடாது. ஒரு திட்டம் நிறைவடையணும்னா முடியணும்னா நிறைய வழிமுறைகள், வேலைகள் உள்ளன . இது ஒரு சிறப்பு திட்டம் . ஒப்பந்தப்புள்ளி கோரி, அதை தொழில் நுட்ப ரீதியாக, நிதி நீதியாக ஆய்வு செய்து, ஒப்பந்தம் செய்து, வல்லுநர்களால் கட்டப்பட்டு, மருத்துவ உபகரணங்கள் அமைக்கப்பட்டு முடிவு பெற வேண்டும். தனியார் திட்டங்கள் என்றால் நிறைய வழி முறைகளை கடைப்பிடிக்க வேண்டியதில்லை. சீக்கிரம் முடிக்கலாம். அரசாங்க திட்டங்கள் என்றால் நிறைய கட்டுப்பாடுகள் உள்ளன. மருத்துவ மனை எங்க அமைக்கிறதுன்னே சண்டை போட்டுக்கிட்டு வருஷக்கணக்கா இருந்து போட்டு, உடனே திறக்கிறதுக்கு இது என்ன சாராயக்கடையா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X