அலோக் வர்மா மீது நடவடிக்கை ஏன்: சுப்ரீம் கோர்ட் கேள்வி

Updated : டிச 06, 2018 | Added : டிச 06, 2018 | கருத்துகள் (17)
Advertisement
Alok verma, Ranjan gogoi, Rakesh Astana,Supreme Court, சுப்ரீம் கோர்ட், சிபிஐ, அலோக் வர்மா, ரஞ்சன் கோகாய், ராகேஸ் அஸ்தானா, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, அட்டர்னி ஜெனரல் கேகே வேணுகோபால், 
 CBI,  Solicitor General Tushar Mehta, Attorney General KK Venugopal, alok verma cbi,

புதுடில்லி: சிபிஐ இயக்குநர் அலோக் வர்மாவின் அதிகாரத்தை ஒரே நாளில் பறித்தது ஏன் என சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.

சி.பி.ஐ., இயக்குனர் அலோக் வர்மா, சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா இடையே ஏற்பட்ட அதிகார மோதலை தொடர்ந்து, இருவரும், பரஸ்பரம் ஊழல் புகார்களை கூறினர். இதையடுத்து, இருவரும் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டனர்.தன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில், அலோக் வர்மா மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு இன்று(டிச.,6) மீண்டும் விசாரணைக்கு வந்தது.


சிக்கல் என்ன

அப்போது தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், இரண்டு அதிகாரிகளுக்கு இடையிலான மோதல், ஒரே நாள் இரவில் ஏற்படவில்லை. எனவே, ஒரே நாள் இரவில் அலோக் வர்மாவின் அதிகாரத்தை, தேர்வுக்குழுவிடம் ஆலோசனை நடத்தாமல் பறித்தது ஏன்? அரசு நேர்மையுடன் செயல்பட வேண்டும். அலோக் வர்மா மீது நடவடிக்கை எடுப்பதற்கு முன்னர், தேர்வுக்குழுவிடம் ஆலோசனை நடத்துவதில் இருந்த சிக்கல் என்ன? சிறந்த தீர்வு ஏற்பட, மத்திய அரசின் ஒவ்வொரு நடவடிக்கையும் நேர்மையாக இருப்பது முக்கியம். வர்மா, இன்னும் சில மாதங்களில் ஓய்வு பெற உள்ள நிலையில், அதுவரை ஏன் காத்திருக்கவில்லை. இது குறித்து ஏன் தேர்வுக்குழுவிடம் ஆலோசனை நடத்தவில்லை என கேள்வி எழுப்பினார்.


பதில்

அப்போது சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா அளித்த பதில், விரும்பத்தகாத சூழ்நிலை ஏற்பட்டதாக மத்திய கண்காணிப்பு ஆணையமான சி.வி.சி., கருதியதால் தான் நடவடிக்கை எடுத்தது. பாரபட்சமில்லாமல் சிவிசி நடவடிக்கை எடுத்தது. இரண்டு உயர் அதிகாரிகள் சண்டையிடுவதுடன், முக்கிய வழக்குகளை விசாரிக்காமல் ஒருவருக்கு எதிராக மற்றொருவர் விசாரணை நடத்த துவங்கினர். சிவிசி செயல்படாமல் இருப்பது, பணியை அலட்சியம் செய்வதற்கு ஒப்பானது. இவ்வாறு அவர் கூறினார்.


இடமாற்றம் இல்லை

அட்டர்னி ஜெனரல் கேகே வேணுகோபால் கூறியதாவது:அலோக் வர்மா சிபிஐ இயக்குநர் பதவியிலிருந்து இடமாற்றம் செய்யப்படவில்லை. ஆனால், இடமாற்றம் செய்யப்பட்டதாக, வேண்டுமென்றே வாதாடுகிறார். அவரை மத்திய அரசு இடமாற்றம் செய்யவில்லை. பொறுப்புகள் மாற்றப்பட்டதுடன், செயல்படவும் தான் தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

அலோக் வர்மா சார்பில் ஆஜரான பாலி நாரிமன் வாதாடுகையில், எந்த சூழ்நிலை இருந்திருந்தாலும் அரசு தேர்வுக்குழுவிடம் ஆலோசனை நடத்தியிருக்க வேண்டும். இந்த வழக்கில், இடமாற்றம் என்பது ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றுவது மட்டும் அர்த்தம் இல்லை என்றார்.

இரு தரப்பு வாதங்களை கேட்ட பின்னர், வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

Advertisement
வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Arul Krish -  ( Posted via: Dinamalar Android App )
07-டிச-201810:40:35 IST Report Abuse
Arul Krish aye siripu police
Rate this:
Share this comment
Cancel
blocked user - blocked,மயோட்
07-டிச-201804:40:41 IST Report Abuse
blocked user தோவல் மீது புகார் சொல்ல ஆரம்பித்ததும் பாஜக அரசு விழித்துக் கொண்டது... தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மீது புகார் என்றால் நாட்டின் பாதுகாப்புக்கே சவால் விடும் வேலை... ஆகவே ஆட்டம் க்ளோஸ்...
Rate this:
Share this comment
Cancel
Pasupathi Subbian - trichi,இந்தியா
06-டிச-201819:42:50 IST Report Abuse
Pasupathi Subbian சிபிஐயால் தேடப்பட்டு வந்த தரகர் அகஸ்த்தா வெஸ்ட்லாண்ட் ஹெலிகாப்டர் ஊழலில் முக்கிய குற்றவாளியான இத்தாலிய இடை தரகர் கிறிஸ்தியன் மைக்கிலை துஹபையில் இருந்து டெல்லிக்கு கொண்டுவர வேலை செய்த சி பி ஐ இணை இயக்குனர் சாய் மனோகர். இந்த அலோக் வர்மா அக்டொபரில் இருந்து இந்த சிறப்பு பணிக்கு பதவி நீடிப்பு கொடுக்காமல் தடையாக இருந்தார். மேலும் இந்த அலோக் வர்மாவுக்கு ஸ்பெசல் இயக்குனர் ராகேஷ் அஸ்தானவுக்கும் எதறகாக மோதல் உருவானது? எதற்காக சி பி ஐ ஆபீஸையே ரைட் நடத்தி , சி பி ஐ அமைப்பையே கேவலப்படுத்தினார் ? உண்மை என்ன ? ராகேஷ் அஸ்தானா தலைமையில் சி பி ஐ விசாரித்துவரும் சோனியாவின் ஊழலான அகஸ்த்தா வெஸ்ட்லாண்ட் ஹெலிகாப்டர் ஊழலின் ரகசியங்களை கைப்பற்ற அலோகவர்மா நடத்திய சோதனை. இந்த ஆளை பற்றி நிறைய புகார்கள் இலாகா அளவில் மோடிக்கு அனுப்பியும் இவரை டிஸ்மிஸ் செய்யாமல்,. விஷயத்தை வெளியிடாமல் லாங் லீவில் அனுப்பியது மோடியின் பெருந்தன்மை. இந்த இடத்தில நான் ஒன்றை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். குஜராத்தில் இருந்த ராகேஷ் அஸ்தானாவை , மோடி தன்னுடைய விருப்பத்திற்காக சி பி ஐ ஸ்பெஷல் டைரக்ட்டராக கொண்டுவந்தார். இந்த ஹெலிகாப்டர் விசாரணை தீவிரப்படுத்தப்படும்போது அனைத்து தகவல்களையும் தனது ஆதரவாளர் சோனியா அவர்களுக்கு தெரிவிப்பதும், மேற்கொண்டு விசாரணைக்கு நடவடிக்கைகளுக்கு தடைபோடுவதும் இந்த அலோக் வர்மாவின் விளையாட்டு. அதற்காகத்தான் ராகேஷ் அஸ்தானா மீது லஞ்ச குற்றசாட்டு இவரின் நாடகம். இதையெல்லாம் வெளிப்படுத்தினால் , இந்தியாவின் தலைமை அமைப்பான சி பி ஐ கேவலப்பட்டுப்போகும் என்பதால் இந்த நடவடிக்கை. சி பி ஐ டைரக்டரை டிஸ்மிஸ் செய்வது சோனியாவின் வழக்கம். போபர்ஸ் ஊழலில் தீவிர விசாரணை செய்த ஜோகிந்தர்சிங் அவர்கள் வெளிநாட்டில் விசாரணை செய்து இந்தியா வந்ததும் , அவருக்கு விமானநிலையத்திலேயே டிஸ்மிஸ் ஆர்டரை கொடுத்தது காங்கிரசின் திருவிளையாடல்.
Rate this:
Share this comment
suman - Bangalore,இந்தியா
12-டிச-201800:21:28 IST Report Abuse
sumanஆமாம் அங்க நடக்கிற எல்லா விஷயமும் சூப்பரா படமாட்டம் சொல்றீங்க மோதி தாத்தா உங்களுக்கு அப்பப்போ பாக்ஸ் (fax )அனுப்பிடுவாரோ...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X