பொது செய்தி

தமிழ்நாடு

மேகதாது அணை கட்டுவது உறுதி: கர்நாடகா

Updated : டிச 06, 2018 | Added : டிச 06, 2018 | கருத்துகள் (33)
Advertisement
Mekedatu dam, CM Palanisamy,Sivakumar, மேகதாது, கர்நாடகா, தமிழகம், சிவக்குமார், முதல்வர் பழனிசாமி,கர்நாடக அமைச்சர் சிவக்குமார்,  மேகதாது விவகாரம் , மேகதாது அணை, 
mekedatu, Karnataka, Tamilnadu,  Chief Minister Palanisamy, Karnataka Minister Shivakumar, mekedatu affair,

சென்னை: மேகதாதுவில் அணை கட்டும் முடிவில் மாற்றமில்லை என கர்நாடகா அறிவித்துள்ளது. நாளை(டிச.,07) இதற்கான ஆய்வுப்பணிகள் தொடங்கப்படும் எனவும் கர்நாடகா தெரிவித்துள்ளது.

இந்நிலையில், கர்நாடக மாநில நீர்வளத்துறை அமைச்சர் சிவக்குமார், முதல்வர் பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், மேகதாது விவகாரம் குறிதது விவாதிக்க நேரம் ஒதுக்க வேண்டும். தமிழக அரசுடன் பேசி சுமூக தீர்வு காணவே கர்நாடகா விரும்புகிறது. மேகதாது அணை குறித்து மக்களும், தமிழக அரசும் தவறாக புரிந்து கொண்டுள்ளனர். தவறான கருத்துகளை களைய முதல்வரை நேரில் சந்தித்து பேசி தெளிவுபடுத்த விரும்புகிறோம். அணை கட்டுவதால், மேட்டூரில் இருந்து தண்ணீர் கடலில் கலப்பது தடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


ஆலோசனை

இந்நிலையில் மேகதாது திட்டம் குறித்து விவாதிக்க கர்நாடகாவில் முன்னாள் முதல்வர்கள் மற்றும் முன்னாள் நீர்ப்பாசனத்துறை அமைச்சர்களின் ஆலோசனை கூட்டம் முதல்வர் குமாரசாமி தலைமையில் பெங்களூருவில் நடந்தது. இதில் நீர்ப்பாசனத்துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார் உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். மேகதாது திட்ட விவகாரத்தில் தமிழக அரசின் எதிர்ப்பை எவ்வாறு எதிர்கொள்வது, இந்த திட்டத்தை அடுத்தகட்டமாக எப்படி முன்னெடுத்து செல்வது என்பது குறித்து குமாரசாமி ஆலோசனைகளை கேட்டார்.


அணை உறுதி:


இந்நிலையில் காவிரி ஆற்றின் குறுக்கில் மேகதாது அணை கட்டும் முடிவில் மாற்றமில்லை என கர்நாடகா அறிவித்துள்ளது. நாளை(டிச.,07) இதற்கான ஆய்வுப்பணிகள் தொடங்கப்படும் எனவும் கர்நாடகா தெரிவித்துள்ளது. பெங்களூருவில் நடந்த முன்னாள் முதல்வர்கள் கூட்டத்தில் நீர்பாசனத்துறை அமைச்சர் சிவக்குமார் இதனை தெரிவித்தார். அவரது பேச்சுக்கு கர்நாடக முன்னாள் முதல்வர்களும் ஆதரவு தெரிவித்தனர்.

Advertisement
வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Advaiti - Chennai,இந்தியா
07-டிச-201812:33:43 IST Report Abuse
Advaiti நம்ம கட்டுமரக்குடும்பத்தார் மேலாண்மை வாரியமும் அமைக்கல, இதுவரை கூட்டணி காங்க்ரஸ கண்டிக்கவும் இல்ல, முல்லைப்பெரியாறு விஷயத்துல பிணராயயும் ஒன்னும் சொல்லல.... லட்சக்கணக்கணக்குல தமிழர்கள் கொல்லப்பட்ட போதும் கூட்டணியில் குளிர் காய்ந்தவர்கள். ஏமாறும் வரை ஏமாற்றுபவர்களும் இருப்பார்கள்
Rate this:
Share this comment
Cancel
Divahar - tirunelveli,இந்தியா
07-டிச-201810:18:11 IST Report Abuse
Divahar நம் தமிழக அரசியல்வாகிகளின் திறமையை பார்ப்போம்
Rate this:
Share this comment
Cancel
07-டிச-201809:47:35 IST Report Abuse
ருத்ரா நமது நீர்நிலைகளை பாதுகாத்து தண்ணீர் கடலில் கலக்காமல் சேமித்தால் அதன் பின் அதிக மழை பெய்யும் போது கர்நாடகாவி ல் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டால் காவிரிநீரை ஒரே ஒரு முறை நாம் தவிர்த்தால் கர்நாடகா காணாமல் போய்விடும். என் இந்தியா என்ற உணர்வில்லாதவர்களுக்கு நாட்டின் பொருளாதாரம் ஆதாரம் விவசாயம் என தெரியாதவர்களுக்கு இப்படி அதிரடியான முடிவு தேவை. நமதுநாடு நமது வாக்கு நம் உரிமை. தெளிவாக தேர்ந்தெடுக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X