மேகதாதுவிற்கு எதிர்ப்பு: சட்டசபையில் தீர்மானம்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

மேகதாதுவிற்கு எதிர்ப்பு: சட்டசபையில் தீர்மானம்

Updated : டிச 06, 2018 | Added : டிச 06, 2018 | கருத்துகள் (17)
Advertisement
மேகதாது, சட்டசபை, தீர்மானம், முதல்வர், பழனிசாமி, திமுக, ஸ்டாலின், கர்நாடகா,

சென்னை: மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக சட்டசபை சிறப்பு கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


சிறப்பு கூட்டம்

மேகதாதுவில் அணை கட்டுவதற்கு ஆய்வு செய்து திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடகாவிற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கு தமிழக அரசியல்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக விவாதிக்க தமிழக சட்டசபையின் சிறப்பு கூட்டத்தொடர் நடந்தது.

சட்டசபையில் முதல்வர் பழனிசாமி பேசுகையில்; மேகதாதுவில் அணை கட்ட திட்ட அறிக்கை தயாரிக்க மத்திய அரசின் அனுமதி கொதிப்படைய வைத்துள்ளது. தமிழகத்தில் அனைவரும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். அனைவரும் ஒருமித்த கருத்தோடும், மக்களின் உணர்வுகளை பிரபதிபலிக்கும் வகையில், இந்த தீர்மானத்தை சட்டசபையில் முன்மொழிய விழைகிறேன். இதனை நிறைவேற்றி தர வேண்டும் என கோருகிறேன்.


தீர்மானம்

தொடர்ந்து அவர் தாக்கல் செய்த தீர்மானம்: தமிழக சட்டசபையில் 5.12.2014, 27.3.2015 ஆகிய நாட்களில் கர்நாடகா அரசு மேகதாதுவில் புதிய அணை கட்டக்கூடாது என ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை கருத்தில் கொள்ளாமலும், சுப்ரீம் கோர்ட் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளவாறு கீழ்படுகை மாநிலங்களின் முன் அனுமதி பெறாமல், கர்நாடக அரசு எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்த கூடாது என்பதையும் மீறி, தற்போது கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதற்கான ஆரமபக் கட்டப் பணிகளை துவக்க உள்ளதற்கும், மேகதாதுவில் புதியதாக அணை கட்ட விரிவான அறிக்கை தயாரிப்பதற்கு மத்திய நீர்வளத்துறை குழுமம் 22.11.2018 அன்று அனுமதி வழங்கியதற்கும் சட்டசபை கண்டனத்தையும் எதிர்ப்பையும் தெரிவித்து கொள்கிறது. மத்திய நீர்வள குழுமம் வழங்கிய அனுமதியை திரும்பப்பெற அக்குழுமத்திற்கு மத்திய நீர்வள ஆதார அமைச்சகம் உடனடியாக உத்தரவிட வேண்டும் என தமிழக சட்டசபை கேட்டு கொள்கிறது இவ்வாறு அவர் பேசினார்.


துணிச்சலுடன் போராடுங்க; ஸ்டாலின்தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் பேசியதாவது:
சட்டசபையை கூட்டியதற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். புயலால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், காவிரியின் குறுக்கே அணை கட்ட மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்த அனுமதி காவிரி நடுவர் மன்ற தீர்ப்புக்கு எதிரானது. அணை விவகாரத்தில், தமிழக அரசு முன்பே தடை பெற்றிருக்க வேண்டும். காவிரி நடுவர் மன்றத்திற்கு முழுநேர தலைவர் இல்லை. கர்நாடகா அணை கட்ட சாதகமாக முழுநேர தலைவர் நியமனம் செய்யவில்லை என தெரிகிறது. காவிரியில் தண்ணீரை தேக்கி வைக்க அனுமதியில்லை. அணை கட்ட அனுமதி கூடாதென, மத்திய அரசிடம், தமிழக அரசு துணிச்சலுடன் போராட வேண்டும் இவ்வாறு அவர் பேசினார்.
காங்கிரஸ் கட்சியின் கே.ஆர்.ராமசாமி பேசியதாவது: மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எதிரான தனி தீர்மானத்திற்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்கிறது. மேகதாதுவில் ஒரு அணை கட்டப்படுகிறதா அல்லது இரண்டு அணை கட்டப்படுகிறதா என்பதை கவனிக்க வேண்டும். தேர்தல் லாபம் அடைய வேண்டும் என்பதற்காக மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.


முதல்வர் பதிலுரை

பின்னர் முதல்வர் அளித்த பதிலுரை: காவரி நீர் 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்கு நீராதாரமாக இருந்து வருகிறது. ஆரம்பம் முதலே, காவிரியில் பல அணைகளை கட்ட கர்நாடகா முயற்சி செய்து வருகிறது. காவிரி ஷரத்து ஒப்பந்தங்களை மீறும் வகையில், கர்நாடக அரசின் செயல் உள்ளது. காவிரி நீரில் தமிழகத்திற்கு அதிக உரிமை உள்ளது. பாசன பகுதிகளை கர்நாடகா 27 லட்சம் ஹெக்டேர் வரை உயர்த்தியுள்ளது. மேகதாதுவில் அணை கட்டப்பட்டால், தமிழகம் மிகவும் பாதிக்கப்படும். வறட்சி ஏற்படும். மேகதாதுவில் அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து பிரதமரிடம் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுத்தது கார்நாடகாவை ஆண்ட காங்கிரஸ் கட்சி. மத்திய நீர்வளத்துறை ஆணையம் பிள்ளையையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டி விடுகிறது இவ்வாறு முதல்வர் பேசினார்.


திமுக அமளி

காவிரி பிரச்னை குறித்து கருணாநிதி செய்த விஷயத்தை மறைத்து பேசியது தவறு எனக்கூறி திமுகவினர் அமளியில் ஈடுபட்டனர். காவிரி பிரச்னை கர்நாடகாவிடம் முதலில் பேசியவர் கருணாநிதிதான் என துரைமுருகன் பேசினார். அவருக்கு பதிலளித்த முதல்வர், நாங்கள் செய்ததை நான் குறிப்பிடுகிறேன். நீங்கள் செய்ததை பேசலாம். நான் ஒரு விவசாயி. காவிரி பிரச்னை குறித்து எனக்கு தெரியும் என்றார்.
இதன் பின்னர் , திமுக, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்எல்ஏக்கள் ஆதரவுடன், மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மசோதா ஒரு மனதாக நிறைவேறியது.


பிரதமருக்கு முதல்வர் கடிதம்

இந்நிலையில் மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் நகல் கடிதத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sumutha - chennai - Chennai,இந்தியா
06-டிச-201821:07:28 IST Report Abuse
sumutha - chennai உணர்ச்சியை தூண்டி விடும் கட்சிகளால் உணர்ச்சி வசப்படாத மக்களால் மட்டுமே (ஜல்லிக்கட்டு) நம் நாட்டில் நீதியை உரிமையாக கேட்டு பெற இயலும். மற்றவை அனைத்தும் சும்மா பம்மாத்து. இதுவே இப்போதைய நிஜம்.
Rate this:
Share this comment
Cancel
Chowkidar Senthilsigamani.T - Sivagangai,இந்தியா
06-டிச-201820:51:04 IST Report Abuse
Chowkidar Senthilsigamani.T மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக நடத்துவது யாவும் நாடகம் தான் . .ஏனென்றால் காவேரி நதிநீர் பங்கீடு விவகாரத்தை முறையாக கையாளாமல் தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை சீர் குலைத்தவரே மறைந்த திராவிட கருணாநிதி தான் .முல்லை பெரியாறு ,காவேரி நதி நீர் பங்கீடு ஆகியவற்றை ஆரிய எதிர்ப்பு புகழ் கருணாநிதி முறையாக கையாளவில்லை . முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திக்கொள்ள உச்ச நீதி மன்றம் மூலம் சாதித்தவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்கள் தான் .மேலும் தமிழகத்தில் உள்ள தற்போதைய அணைக்கட்டுகளில் பல கர்ம வீரர் காமராஜர் காலத்தில் கட்டப்பட்டது .அது - கீழ்பவானி திட்டம், மணிமுத்தாறு திட்டம், மேட்டுர் கால்வாய் திட்டம், ஆரணியாறு திட்டம், அமராவதி திட்டம், வைகை திட்டம், சாத்தனூர் திட்டம், கிருஷ்ணகிரி திட்டம், 30 லட்ச ரூபாய் மதிப்பிலான காவிரி கழிமுக வடிகால் திட்டம் , புள்ளம்பாடி வாய்க்கால் திட்டம், புதிய கட்டளைத் திட்டம், வீடூர் நீர்த்தேக்கத் திட்டம், கொடையாறு வாய்க்கால் திட்டம், நெய்யாறு திட்டம், பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டம் ஆகிய ஏழு புதிய திட்டங்களும் காமராஜர் ஆட்சிக்காலத்தில் மேற்கொள்ளப்பட்டன. அதனால் தான் அவர் ஆட்சியை பொற்கால ஆட்சி என்கிறோம் .கருணாநிதி ,எம்ஜியார் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் முதலமைச்சராய் இருந்து கட்டிய அணைக்கட்டுகளை விட காமராஜர் காலத்தில் கட்டப்பட்டவை அளவிலும் ,பாசன அளவிலும் பெரியவை .மேலும் காவிரி பிரச்சனையின் மூலாதாரமே திராவிட மூத்தாசான் கருணாநிதி தான் - அது பற்றிய சிறு பதிவு இந்திய பிரதமர்கள் வி பி சிங்,நரசிம்மராவ் ,குஜ்ரால் ,தேவ கௌடா,வாஜிபாய் மற்றும் மன்மோகன் சிங் ஆகியோர் அமைச்சரவையில் திமுக அமைச்சர்கள் பதவிகள் வகித்தபோது ,காவேரி பிரச்சனைக்காக சிறு துரும்பை கூட கிள்ளி போடாதவர் தான் இந்த கருணாநிதி . தனது மகனுக்கும், பேரப்பிள்ளைகளுக்கும் சோனியா காந்தி அரசில் ( மன்மோகன் சிங் பொம்மை பிரதமர் ) நல்ல பசையான துறைகளை வாங்க நேரடியாக டெல்லி சென்றவர் அப்போதே மத்திய நீர்வளத்துறையை கேட்டு பெற்றிருந்தால் இந்நேரம் கருணாநிதி காவிரி பிரச்சனை தீர்த்ததற்காக உலக புகழ் பெற்றிருப்பார் .ஆனால் அந்த அக்கறை அவருக்கு கிடையாது .காவிரி பிரச்சனையில் அவரின் துரோகங்கள் வரிசையாக 1). “கர்நாடக அரசு ஹேமாவதி அணையைக் கட்டிக் கொள்வதில் தமிழக அரசுக்கு எந்தவித ஆட்சேபணையும் இல்லை" என்று 6.3.1970 அன்று தமிழக பேரவையில் கருணாநிதி பேசி இருக்கிறார் என்பது வரலாறு. இது கருணாநிதியின் முதல் துரோகம்.2).இதனைத் தொடர்ந்து, காவேரி நதியின் உபநதிகளாகிய கபினி, ஹேமாவதி, ஹாரங்கி, சொர்ணவதி ஆகியவற்றில் பல்வேறு கட்டுமானப் பணிகளை மத்திய நீர் ஆணையத்தின் ஒப்புதல் இல்லாமலும், மத்திய திட்டக் குழுவின் ஒப்புதல் இல்லாமலும், தன்னிச்சையாக கர்நாடகம் துவக்கியது. கர்நாடக அரசின் இந்த அத்துமீறல்களை எல்லாம் கண்டு கொள்ளாமல் இருந்தவர் தான் திராவிட கருணாநிதி. இது கருணாநிதியின் இரண்டாவது துரோகம்.3.) 4.8.1971 அன்று இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 131-ன் கீழ் உச்ச நீதிமன்றத்தில் காவேரி நீர் உரிமை பிரச்சனை குறித்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தமிழக பேரவை மற்றும் மேலவைக்கு தெரிவிக்காமலேயே தனக்குள்ள அரசியல் நெருக்கடி காரணமாக திரும்பப் பெற்றுக் கொண்டு விட்டார் கருணாநிதி வேறு ஒன்றும் இல்லை சர்க்காரியா கமிஷன் எனும் கத்தி /துப்பாக்கி தான் இது கருணாநிதியின் மூன்றாவது துரோகம்.4.)18.2.1892-ஆம் ஆண்டு மெட்ராஸ் பிரசிடென்சி மற்றும் மைசூர் சமஸ்தானம் ஆகியவற்றுக்கு இடையே ஏற்பட்ட ஒப்பந்தம் தான் காவேரி தொடர்பான முதல் ஒப்பந்தம் ஆகும். 1924-ஆம் ஆண்டு இரண்டாவது ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த இரண்டாவது ஒப்பந்தம் 50 ஆண்டு காலம் நடைமுறையில் இருக்கும் என்றும், மறு ஒப்பந்தம் 50 ஆண்டுகளுக்கு பிறகு ஏற்படுத்திக் கொள்வது என்றும் அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, இந்த ஒப்பந்தம் 1974-ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட வேண்டும். ஆனால் இந்த ஒப்பந்தத்தை புதுப்பிக்கத் தவறியவர் திராவிட கருணாநிதி இது கருணாநிதியின் நான்காவது துரோகம் .இப்படி கர்நாடகா கடந்த 40 வருடங்களில் முக்கியமாக கருணாநிதி ஆட்சிக்காலத்தில் - அணைகள் கட்டியதை - ஹேமாவதி ஆற்றில் 34 டி.எம்.சி நீர் கொள்ளளவு கொண்ட அணை ,கபினி ஆற்றில் 19 டி.எம்.சி கொள்ளளவு அணை - ஹேரங்கி ஆற்றில் 6 டி.எம்.சி கொள்ளளவு கொண்ட அணை - தடுக்காத /கண்டுகொள்ளாத /கவனிக்காத /கவலைப்படாத /வருத்தமற்ற/ கூர் நோக்காத /ஆராயாத கருணாநிதி தமிழர் நலன் /திராவிடர் நலன் குறித்து கவலை கொண்டது இல்லை 5.காவிரி நடுவர் மன்றம் கடந்த 2007ம் ஆண்டு தனது இறுதித் தீர்ப்பை அறிவித்தது. ஆனால், அதை முறைப்படி அமலாக்க அதை முதலில் மத்திய அரசின் கெஜட்டில் வெளியிட வேண்டும். அதில் வெளி யிடப்பட்டுவிட்டால், அதை நிறைவேற்ற வேண்டிய கடமை கர்நாடகத்துக்கு மேலும் அதிகமாகும். ஆனால், இதை கெஜட்டில் வெளியிடாமல் இழுத்தடித்து வந்தது மத்திய காங்கிரஸ் அரசு .இதை கெஜட்டில் ஏன் வெளியிடவில்லை ? என்று மத்திய அரசை அந்த நேரம் உச்ச நீதிமன்றமே கண்டித்துள்ளது. அப்போது மத்திய காங்கிரஸ் ஆட்சியில் கூட்டணி கட்சியாக பதவி சுகங்களை ஏகத்திற்கும் அனுபவித்து வந்த திமுக இது குறித்து துளி கூட கவலைப்படவேயில்லை . இது கருணாநிதியின் ஐந்தாவது துரோகம் .மத்திய அரசின் கெஜட்டில் வெளியிட நீதி மன்றம் மூலம் சாதித்தவர் காவேரித்தாய் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்கள் தான் 6.காவேரி பிரச்சனையில் ஆரம்ப காலத்தில் இருந்து கர்நாடக மக்களின் வன்மத்தை தூண்டி வளர்த்தவர் தேவ கவுடா தான் (தற்போதைய முதல்வர் குமாரசாமியின் தகப்பனார் ), கேட்டால் நான் விவசாய குடும்பம் என்பார் .காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பை அரசிதழில் (மத்திய அரசின் கெஜட்) வெளியிடக் கூடாது என்று பிரதமர் மன்மோகன் சிங்கை நேரில் சந்தித்து முன்னாள் பிரதமரும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவருமான தேவ கௌடா கோரிக்கை விடுத்தார் -அதில் தேவ கௌடா சாதித்தார் .அப்பேற்பட்ட தமிழின விரோதி இந்திய பிரதமராக பதவி வகிக்க ஆதரவுக்கரம் நீட்டியவர் மறைந்த கருணாநிதி தான்.இது கருணாநிதியின் ஆறாவது துரோகம் .7.இது எல்லாவற்றையும் முழுங்கி சாப்பிடக்கூடிய அளவிற்கு கருணாநிதி செய்த மாபெரும் துரோகம் இதோ - 1998 ம் ஆண்டு ஆகஸ்ட் 3 ம் தேதி திமுக ஆட்சியின் போது , சென்னையில் முதல்வர் கருணாநிதி ,பிரதமர் தலைமையில் ஆன காவேரி ஆணையம் அமைப்பதற்கான மத்திய அரசின் வரைவு அறிக்கையை விவாதிக்க கூட்டம் கூட்டினார் .அதில் காவேரி நடுவர் மன்றத்தின் இடைக்கால உத்தரவை கர்நாடக அரசு அமுல்படுத்தாத பட்சத்தில் ,பிரதமர் தலைமையிலான காவேரி ஆணையமே, கர்நாடக அணைகளை தன் கட்டுப்பாட்டில் கொண்டுவரும் அதிகாரம் சம்பந்தப்பட்ட ஷரத்து இருந்தது .அதனை கருணாநிதி நீக்கி விட்டார் .காரணம் அவரின் குடும்பத்தார் கர்நாடகாவில் வாங்கி குவித்துள்ள அளவற்ற/ கணக்கற்ற சொத்துக்கள் தான் . அந்த ஷரத்து இருந்தால் இப்போது உச்சமன்ற தீர்ப்பை கர்நாடகா மதிக்காததை சுட்டிக்காட்டி அதன் அணைகளை மத்திய அரசு கையகப்படுத்தி தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்க வாய்ப்புகள் / வழி இருந்திருக்கும் .அதனை இரக்கமின்றி அடைத்தவர் /மூடியவர் கருணாநிதி தான். அன்று அந்த ஷரத்து இல்லாததை குறிப்பிட்டு தான் ஜெயலலிதா அவர்கள் காவேரி ஆணையத்தை பல் இல்லாத ஆணையம் என்று விமர்சனம் செய்தார் . இது கருணாநிதியின் ஏழாவது துரோகம் .8.இப்படி அடுக்கடுக்காக காவேரி நதி நீர் விஷயத்தில் துரோகங்கள் செய்தவர் கருணாநிதி தான் .முன்பு ஒரு தமிழ் கவிஞர் - காவேரியை கடக்க இனி ஓடங்கள் தேவையில்லை ஒட்டகங்கள் போதும் - என்று சொன்னது போல தமிழகத்தில் காவேரி பாய்ந்த கழனிகள் எல்லாம் வறண்ட பாலைவனங்களாக மாற துரோகங்கள் செய்து தனது குடும்பத்தின் சொத்துக்களை பல பல பல பல மடங்காக பெருக்கியவர் ஆரிய எதிர்ப்பு புகழ் திராவிட கருணாநிதி தான் .காவேரி பாய்ந்த நிலத்தை கருக வைத்த அரசியல்வாதி கருணாநிதி தான் .ஆம் இவரின் துரோகங்களை தமிழர்கள் குறிப்பாக திருவாரூர் ,தஞ்சாவூர் ,நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் கூட இன்னும் அறியாதது தமிழகத்தின் சாபக்கேடு தான், ஆம் தமிழகத்தின் சாபக்கேடு.
Rate this:
Share this comment
Cancel
Mani S -  ( Posted via: Dinamalar Android App )
06-டிச-201820:18:05 IST Report Abuse
Mani S Ippadiye rendu katchiyum oora yemaathungadaa.... Ungalukke therium idhanaala onnum saga poradhillanu...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X