இந்திய ரூபாய்க்கு கச்சா எண்ணெய்; ஈரான் - இந்தியா புதிய ஒப்பந்தம்| India inks pact with Iran to pay crude bill in rupee | Dinamalar

பொது செய்தி

இந்தியா

இந்திய ரூபாய்க்கு கச்சா எண்ணெய்; ஈரான் - இந்தியா புதிய ஒப்பந்தம்

Added : டிச 06, 2018 | கருத்துகள் (50)
Share
India,Iran,crude bill,rupee,

புதுடில்லி : இந்திய ரூபாயை செலுத்தி கச்சா எண்ணெய் வாங்கும் புதிய ஒப்பந்தம் ஈரான் - இந்தியா இடையே கையெழுத்தானது.


மிரட்டல்:

ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேறியவுடன், அந்நாட்டின் மீது அமெரிக்கா பல்வேறு பொருளாதார தடைகளை விதித்தது. ஈரானிலிருந்து பிற நாடுகள், கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நவ.,4க்குள் நிறுத்த வேண்டும் எனவும் டிரம்ப் மிரட்டல் விடுத்தார்.


சம்மதம்:

எனினும், ஈரானிடம் இருந்து தொடர்ந்து, கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய இந்தியா முடிவு செய்தது. இந்நிலையில், அமெரிக்காவின் நட்பு நாடுகளான, இந்தியா, ஜப்பான், தென் கொரியா உட்பட எட்டு நாடுகள், ஈரானிடமிருந்து கச்சா எண்ணெயை தொடர்ந்து இறக்குமதி செய்ய, அமெரிக்கா சம்மதித்தது.


ஒப்பந்தம்:

இந்நிலையில் கச்சா எண்ணெய் இறக்குமதிக்கான தொகையை அமெரிக்க டாலராக செலுத்தாமல், இந்திய ரூபாயை செலுத்த இந்தியா - ஈரான் இடையே புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இதன்படி, கச்சா எண்ணெய்க்கு தர வேண்டிய தொகையை பாதியளவு பொருட்களை ஏற்றுமதி செய்தும், மீதித்தொகையை ரூபாயாகவும் இந்தியா செலுத்த உள்ளது. ஈரான் தேசிய கச்சா எண்ணெய் கழகத்தின் யூகோ வங்கி கணக்கில், இந்திய எண்ணெய் நிறுவனங்கள் செலுத்தும் எனுவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாலருக்கு பதிலாக ரூபாயை செலுத்த இருப்பதால் இந்தியாவின் அந்நியச் செலவாணி கையிருப்பு குறையாமல் பார்த்துக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X