பதிவு செய்த நாள் :
வேதனை!
சாலை பள்ளங்களால் 15 ஆயிரம் பேர் பலி
நடவடிக்கை எடுக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு

புதுடில்லி : 'நாட்டில், பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டோர் அல்லது எல்லையில், எதிரிப் படை தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கையை விட, சாலையில் உள்ள பள்ளங்களால் ஏற்பட்ட விபத்துகளில் பலியானோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது; இதை சாதாரணமாக கருத முடியாது' என, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து, இரண்டு வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யும்படி, மத்திய அரசுக்கு, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வேதனை,சாலை,பள்ளம்,15 ஆயிரம் பேர்,பலி


நாடு முழுவதும், பயணியர் போக்குவரத்துக்காகவும், சரக்கு போக்குவரத்துக்கு சாதகமாகவும், நீண்ட, அகன்ற சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. தேசிய நெடுஞ்சாலைகள் மட்டுமின்றி, மாநில அரசின் பராமரிப்பில் உள்ள மாநில நெடுஞ்சாலைகள், கிராமங்களை இணைக்கும் சாலைகள் என, அனைத்து வகை சாலைகளிலும், ஏராளமான பள்ளங்கள் காணப்படுகின்றன.

மழைக் காலங்களில், பள்ளங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பதால், வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். சாலைகளில் மூடப்படாத பள்ளங்களால், வாகனங்கள் விபத்துக்குள்ளாவது அதிகரித்துள்ளதாகவும், இதனால், மிக அதிக அளவில்

உயிரிழப்பு ஏற்படுவதாகவும் புகார் எழுந்தது. இது குறித்த வழக்கை, உச்ச நீதிமன்ற நீதிபதி, பி.லோக்குர் தலைமையிலான, மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.

நேற்றைய விசாரணையின் போது, ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி, கே.எஸ்.ராதாகிருஷ்ணன் தலைமையிலான குழு, தன் அறிக்கையை தாக்கல் செய்தது. அதில், 2013 - 2017 வரையிலான, ஐந்து ஆண்டுகளில், சாலை பள்ளங்களால் ஏற்பட்ட விபத்துகளில், 14 ஆயிரத்து, 926 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதனால், கடும் அதிர்ச்சி அடைந்த நீதிபதிகள், 'இந்த விவகாரத்தில் மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது' என, கோபத்துடன் கேள்வி எழுப்பினர்.

அப்போது, நீதிபதிகள் கூறியதாவது: நாடு முழுவதும் உள்ள நெடுஞ்சாலைகளில், பல இடங்களில் அபாயகரமான பள்ளங்கள் உள்ளன. இந்த பள்ளங்களால் ஏற்படும் விபத்துகளில், ஆயிரக்கணக்கானோர் பலியாகியுள்ளனர். 2013 - 17 வரையிலான, ஐந்து ஆண்டுகளில் மட்டும், உயிரிழப்பு எண்ணிக்கை, 15 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இது, பயங்கரவாத தாக்குதலில் பலியானோர்; எல்லையில், எதிரிப் படை தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கையை விட அதிகம்.

இதை, மிக சாதாரணமாக கருத முடியாது. பள்ளங்கள் நிறைந்த சாலைகளை சீரமைத்து, மேம்படுத்தவும், உயிரிழப்புகளை தடுக்கவும், மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறித்து, இரண்டு வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Advertisement

4,000 பள்ளங்களுடன் மும்பைக்கு முதலிடம்!

நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் உள்ள சாலை பள்ளங்களின் எண்ணிக்கை பற்றிய விபரங்கள், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் வசம் உள்ளது. அந்த ஆணையம் வெளியிட்ட அறிக்கையின்படி, முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான, பா.ஜ., - சிவசேனா கூட்டணி ஆட்சி நடக்கும், மஹாராஷ்டிர மாநில தலைநகர் மும்பையில், 4,000 சாலை பள்ளங்கள் இருப்பது தெரிய வந்து உள்ளது. நாட்டிலேயே மிக அதிகமான சாலை பள்ளங்கள், இந்த நகரில் தான் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


அனைவரும் பொறுப்பேற்க வேண்டும்!

சாலை பள்ளங்களால் ஏற்படும் விபத்துகள் குறித்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற அமர்வு, அதன் உத்தரவில் மேலும் கூறியதாவது: நாட்டில் உள்ள சாலைகள், தேசிய நெடுஞ்சாலை துறை, மாநில நெடுஞ்சாலை துறை, பஞ்சாயத்து அமைப்புகள், ஊராட்சிகள் போன்ற பல அமைப்புகளால் பராமரிக்கப்படுகின்றன. பள்ளங்களால் ஏற்படும் விபத்துகளில் பலியானோரின் உறவினர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு ஏற்படும் எதிர்பாராத இழப்புக்கு, சாலை பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும் அனைவரும் பொறுப்பேற்க வேண்டும். சாலை பள்ளங்களால் ஏற்படும் விபத்துகளில் பலியானோர் எண்ணிக்கையை விட, படுகாயமடைந்தோர் எண்ணிக்கை மிக மிக அதிகமாக உள்ளது. வரும் காலங்களில், அனைத்து துறையினரும் பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டும். அரசு நிர்வாகத்தின் பொறுப்பற்ற செயலால், அப்பாவி பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். இவ்வாறு அந்த அமர்வு தெரிவித்தது.


Advertisement

வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
chinnamanibalan - Thoothukudi,இந்தியா
07-டிச-201817:59:25 IST Report Abuse

chinnamanibalanசாலை அமைப்புகளில் ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் கமிஷன் பெற்றுக் கொண்டு போடும் தரமற்ற சாலைகளால் தான் இது போன்ற விபரீதங்கள் நடைபெறுகிறது. தரமற்ற சாலைகளை அமைப்பது கூட மக்களுக்கு எதிரான ஒருவகை பயங்கரவாத செயல்தான்.

Rate this:
Sitaraman Munisamy - SALEM,இந்தியா
07-டிச-201816:54:38 IST Report Abuse

Sitaraman Munisamyசாலை வரிமட்டும் தவறாமல் வசூலிக்கப்படுகிறது. அனால் மக்களுக்குத்தான் பலன் இல்லை இவர்களை consumer கோர்ட்டில்தான் வழக்கு தொடுக்க வேண்டும்

Rate this:
Sitaraman Munisamy - SALEM,இந்தியா
07-டிச-201816:51:54 IST Report Abuse

Sitaraman Munisamyஇவ்வளவு நாட்கள் கழித்து உச்ச நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது. இவர்கள் இந்தியாவில் தான் உள்ளார்களா என சந்தேகமாக உள்ளது. ரோடு போடும் ஒப்பந்ததாரர்கள் குழி வெட்டினால் அதை சரியாக மூடி விடுவதில்லை. தார் சாலையை நோண்டினால் மீண்டும் அந்த இடம் தார் கொண்டு நிரப்பி சாலை சரி செய்யவேண்டும் அல்லது சிமெண்ட் கலவை கொண்டு சரி செய்ய வேண்டும் . இதை கண்கணிக்கவேண்டிய அலுவலர் லஞ்சம் பெற்றுக்கொண்டு கண்டு கொள்வதில்லை. சட்டம் சரியாகத்தான் உள்ளது. இந்த அலுவலர்களின் அட்டகாசம் தான் தாங்க முடியவில்லை. இனியாவது நகராட்சி ஊழியர்கள் ஒழுங்காக வேலை செய்ய மாட்டார்கள். என்னயெனில் அரசே பல உச்ச நீதிமன்ற உத்திரவை மதிப்பதில்லை

Rate this:
மேலும் 16 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X