பதிவு செய்த நாள் :
புதுச்சேரி பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள்
நியமனம் செல்லும்: சுப்ரீம் கோர்ட்

புதுச்சேரி : 'புதுச்சேரி சட்டசபைக்கு, நியமன, எம்.எல்.ஏ.,க்களை மத்திய அரசு நியமித்தது செல்லும்' என, சுப்ரீம் கோர்ட், நேற்று அதிரடியாக தீர்ப்பு கூறியது.

புதுச்சேரி,பா.ஜ., எம்.எல்.ஏ.,நியமனம் செல்லும்,சுப்ரீம் கோர்ட்


புதுச்சேரி சட்டசபையில், 30, எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். தவிர, மூன்று நியமன, எம்.எல்.ஏ.,க்களை நியமித்துக் கொள்ள முடியும். முதல்வர் நாராயணசாமி தலைமையிலான, காங்., - தி.மு.க., கூட்டணி ஆட்சி நடந்து வரும் நிலையில், மாநில அரசின் பரிந்துரையின்றி, பா.ஜ.,வைச் சேர்ந்த சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகிய மூவரை, நியமன, எம்.எல்.ஏ.,க்களாக, கடந்த ஆண்டு ஜூலை, 4ல், மத்திய உள்துறை நியமித்தது.

இதை, மாநில அரசு ஏற்க மறுத்தது. இது தொடர்பான வழக்கில், 'நியமன, எம்.எல்.ஏ.,க்களை மத்திய அரசு நியமித்தது செல்லும்' என, மார்ச் 22ல், சென்னை ஐகோர்ட் தீர்ப்பு அளித்தது. ஐகோர்ட் உத்தரவுக்கு இடைக்கால தடை கோரி, சுப்ரீம் கோர்ட்டில், காங்., - எம்.எல்.ஏ., லட்சுமிநாராயணன், மார்ச் 24ல், மனு தாக்கல் செய்தார்.

மனுவை விசாரணைக்கு ஏற்ற சுப்ரீம் கோர்ட், ஐகோர்ட் தீர்ப்புக்கு தடை விதிக்க மறுத்து, 'சட்டசபைக்குள் நியமன, எம்.எல்.ஏ.க்களை அனுமதிக்க வேண்டும்' என, ஜூலை, 19ல் உத்தரவிட்டது. இந்த வழக்கில் நேற்று, சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், ஏ.கே.சிக்ரி, அப்துல் நசீர், அசோக் பூஷன் ஆகியோர் தீர்ப்பு வழங்கினர்.

சென்னை ஐகோர்ட் தீர்ப்பை உறுதி செய்த நீதிபதிகள், புதுச்சேரியில், மூன்று, எம்.எல்.ஏ.,க்களை மத்திய அரசு நியமித்தது செல்லும்' என தீர்ப்பளித்தனர். மேலும்,'எம்.எல்.ஏ.,க்கள் நியமன விவகாரத்தில், மாநில அரசு தலையிட தேவையில்லை' எனவும் அறிவுறுத்தினர்.

Advertisement

இதன் மூலம், 15 மாத கால பிரச்னை முடிவுக்கு வந்தது.

நியாயம் வென்றது:

தீர்ப்பு குறித்து, 'வாட்ஸ் ஆப்'பில், கவர்னர் கிரண்பேடி தெரிவித்துள்ள கருத்தில், 'விரும்பத்தகாத சூழ்நிலைகளின் போதும் பொறுமையாக இருந்த மூன்று எம்.எல்.ஏ.,க்களுக்கும் நன்றி. இறுதியில் அவர்களுக்கு நியாயம் கிடைத்துள்ளது' என தெரிவித்துள்ளார். ஜனநாயகத்திற்கு வெற்றிதீர்ப்பு குறித்து, பா.ஜ., தலைவர் சாமிநாதன், ''சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு, ஜனநாயகத்துக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி. பிரதமர் மோடி, தேசிய தலைவர் அமித்ஷா, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோருக்கு நன்றி,'' என்றார்.


Advertisement

வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வெற்றிக்கொடிகட்டு - -மதராஸ்:-),இந்தியா
07-டிச-201813:24:46 IST Report Abuse

வெற்றிக்கொடிகட்டு ஒரு நியமனம் மூன்று பேரை நியமனம் பண்ணுது அடடேடே ஆச்சரிய குறி ::: கவிதை அருவியை போல கொட்டுது

Rate this:
வெற்றிக்கொடிகட்டு - -மதராஸ்:-),இந்தியா
07-டிச-201812:35:27 IST Report Abuse

வெற்றிக்கொடிகட்டு இங்கே கருது சொன்னவர்கள் மாமேதைகள் கோவெர்னெர் அரசியல் விருப்பு வெறுப்பு அற்றவர் என்று அரசியல் சாசனம் சொல்லுது அப்படி இருக்கும் பட்சத்தில் கவர்னர் நேர்மை யானவர் என்றா இவரே தோற்கடிக்கப்பட்டு ஓடிவந்தவர் இவர் மூன்று பேரையும் நியமிக்கும் எல்லா கட்சியில் இருந்து ஒருவரை நியமித்திருந்தால் பாராட்டி இருக்கலாம் அனால் இதைவிட வேறு வழியே இல்லை பிஜேபிக்கு தேர்தலில் வெற்றி பெற்று வருவது குறிஞ்சி மலர் போல பாவம் இப்படி ஏதாவது accident நடந்தாதான் உண்டு இதை தான் தமிழ் இம்ஸை செயற்கை மழை என்றாரோ அந்த அம்மா ஒரு தீர்க்கதரிசி

Rate this:
Murugan - Puducherry,இந்தியா
07-டிச-201810:01:14 IST Report Abuse

MuruganMr.Arur Rank, why should Puducherry be merged with Tamil Nadu, we the people of Puducherry never like to join with Tamil Nadu, once MGR tried it, in next election ADMK was defeated in Puducherry and then never ADMK forms govt. here, one thing we should not forget ADMK forms it's ministry first in Puducherry not in Tamil Nadu, but the Puducherry people thrown away the merger concept in the first instance itself, so please respect sentiments and feelings of Puducherry people,

Rate this:
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
07-டிச-201816:03:34 IST Report Abuse

ஆரூர் ரங்மத்திய அரசு நிதியில் ஓசியில் வாழ்ந்து பழக்கப்பட்டபிறகு உள்ளூர் ஊழல்வாதிகளுக்கு மிகப்பெருமளவு மக்கள் பாதுகாப்பளிக்கும்போது சுகமாத்தான் இருக்கும் ,அங்கு நடக்கும் தேர்தல் ஃபிராடு அரசியல் தமிழகத்தைவிட மோசம் என்பதை கண்ணால் நேரடியாகக் கண்டு வருத்தப்பட்டிருக்கிறேன் . ஆனால் சின்னஞ்சிறு மாநிலங்கள் நாட்டுக்கு இடைஞ்சல்தான் நிர்வாக ரீதியில் இதுபோல் பிரிந்திருப்பது கேவலம் .நாடே ஆங்கிலேயர்களிடம் அடிமையாக இருந்ததை கசப்புடன் நினைக்கும்போது பிரஞ்சு அடிமைகளாக இருந்ததற்காக தனிமாநிலம் அதுவும் காரைக்கால் மாஹே ஏனம் என பல துண்டுகளாக இருப்பது எவ்விதத்திலும் நல்லதல்ல . ...

Rate this:
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
07-டிச-201819:36:49 IST Report Abuse

தமிழ்வேல் வரலாறு தெரியாம கொளுத்திப் போடாதே. ஆங்கிலேயர்களிடம் அடிமையாக இருந்த போது பிரஞ்சு புதுவை தான் பாரதி...... போன்ற போராட்ட வீரர்களுக்கு அடைக்கலம் கொடுத்தது. யாரையும் அடிமையாக பாவித்தது கிடையாது (பொதுவாக). ...

Rate this:
மேலும் 5 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X