பொது செய்தி

தமிழ்நாடு

காய்ப்புழுக்களை கட்டுப்படுத்தும் வேம்பு!

Added : டிச 07, 2018
Advertisement

உடுமலை:உடுமலை மற்றும் குடிமங்கலம் வட்டாரங்களில் மானாவாரியாக கொண்டக்கடலை விதைக்கப்பட்டு வருகிறது. வடகிழக்கு பருவமழையை எதிர்பார்த்து பனி சீசன் துவங்குவதற்கு முன் விதைக்கப்படுகிறது. நவ., பருவத்தில் விதைத்து ஜன., மாதத்தில், அறுவடை மேற்கொள்ளப்படுகிறது. இரு வட்டாரங்களிலும், ஆண்டுதோறும் தலா, 4 ஆயிரம் ஏக்கருக்கு மேல் விதைக்கப்படுகிறது.
நடப்பு பருவத்தில் பருவமழை ஏமாற்றியதால் உடுமலை மற்றும் குடிமங்கலத்தில் கொண்டக்கடலை விதைப்பு தள்ளிப்போனது. சிலர் விதைப்பை மேற்கொள்ளலாமா வேண்டாமா என்ற குழப்பத்திலும் இருந்தனர்.இதனால், நடப்பு பருவத்தில் கொண்டக்கலை சீசன் சரிந்துள்ளது. தற்போது, உடுமலையில், 2 ஆயிரம் ஏக்கரும், குடிமங்கலம் வட்டாரத்தில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரிலும் விதைக்கப்பட்டுள்ளது.கொண்டக்கடலையில் நோய் பாதிப்புகளுக்கு அதிகளவு வாய்ப்பில்லை என்றாலும், காய்ப்புழு தாக்குதலால் ஆண்டுதோறும் கணிசமான அளவில் பாதிக்கப்படுகிறது. காய்ப்புழுக்களை இயற்கையான முறையில் வேம்பு மருந்துகளை பயன்படுத்தி கட்டுப்படுத்தலாம்.வேளாண்துறை அதிகாரிகள் கூறியதாவது: கொண்டக்கடலையில் பூக்கும் பருவத்தில் காய்ப்புழுக்கள் தாக்குதல் ஆரம்பிக்கும். இதனைக்கட்டுப்படுத்த விவசாயிகள் பெரும்பாலும் அதிக வீரியமுள்ள மருந்துகளை பயன்படுத்தி வருகின்றனர்.
அதற்கு பதிலாக இயற்கை முறையில் வேம்பு மருந்துகளை பயன்படுத்தாலம். 10 லிட்டர் தண்ணீரில், 6 மில்லி, வீதம் வேம்பு மருந்தினை பயன்படுத்தி ஏக்கருக்கு, 10 'டேங்க்' வரை தெளிக்கலாம். அதிகபட்சமாக ஏக்கருக்கு, அரை லிட்டர் போதுமானதாகும். இந்த வழிமுறைகளை பின்பற்றினாலே காய்ப்புழு தக்குதலை முழுமையாக கட்டுப்படுத்தலாம். இவ்வாறு, தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X