சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இலங்கை மீனவர்கள், 5 பேர் கைது

Added : டிச 07, 2018
Advertisement

சென்னை:ஆந்திர கடலோர பகுதியில் மீன்பிடித்த, இலங்கை மீனவர்கள், ஐந்து பேரை, கடலோர காவல் படையினர் கைது செய்தனர்.

ஆந்திர கடலோர பகுதியில், இந்திய கடலோர காவல் படையினர், நேற்று முன்தினம் இரவு, ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அனுமதியின்றி எல்லை தாண்டி மீன்பிடித்த, ஐந்து இலங்கை மீனவர்களை கைது செய்து, அவர்களின் படகுகளை பறிமுதல் செய்து, சென்னை, காசிமேடு துறைமுகத்தில் ஒப்படைத்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், இலங்கையைச் சேர்ந்த, ரோகன் பெரிரா, 57, ஆண்டனி பெர்னாட்டோ, 53, உள்ளிட்ட, ஐந்து பேர் என, தெரிய வந்தது. காற்றின் வேகத்தால் திசை மாறி, ஆந்திரா வந்ததாக அவர்கள் கூறினர். ஐவரும், துறைமுகம் போலீசில் ஒப்படைக்கப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X