பொது செய்தி

தமிழ்நாடு

மின் கட்டணம் மீண்டும் அவகாசம்

Added : டிச 07, 2018 | கருத்துகள் (1)
Advertisement

சென்னை:புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில், மின் கட்டணம் செலுத்த, மின் வாரியம், மீண்டும் அவகாசம் வழங்கியுள்ளது.
இதுகுறித்து, மின் வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:தமிழகத்தில், 'கஜா' புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில், நவ., 15ல் இருந்து, 25 வரை, மின் கட்டணம் செலுத்த வேண்டிய நுகர்வோர்கள், அபராதமின்றி செலுத்த, இம்மாதம், 5ம் தேதி வரை, அவகாசம் வழங்கப்பட்டது. தற்போது, தஞ்சை மாவட்டத்தில், பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு பகுதிகளை சேர்ந்தோர், இம்மாதம், 31ம் தேதி வரை, அபராதமின்றி, மின் கட்டணத்தை செலுத்தலாம்.
திருவாரூர் மாவட்டத்தில், மன்னார்குடி, திருவாரூர் பகுதி நுகர்வோர்களும், நாகையில், 14 பிரிவு அலுவலகத்திற்கு உட்பட்ட நுகர்வோர்களும், வரும், 26 வரை, அபராதம் இன்றி, மின் கட்டணம் செலுத்தலாம்.புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும், 26ம் தேதி வரை, அபராதமின்றி, கட்டணம் செலுத்த அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
07-டிச-201815:21:07 IST Report Abuse
Bhaskaran ஏற்கனவே நிவாரணம் வழங்குவதால் கட்டண ரத்து தேவையில்லை
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X