பொது செய்தி

தமிழ்நாடு

கால்நடை மருத்துவ பல்கலை பட்டமளிப்பு

Added : டிச 07, 2018
Advertisement
 கால்நடை மருத்துவ பல்கலை பட்டமளிப்பு

சென்னை:கால்நடை மருத்துவ பல்கலை பட்டமளிப்பு விழாவில், 650 பேர் பட்டம் பெற்றனர்.தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலையின், 20வது பட்டமளிப்பு விழா, சென்னை பல்கலை நுாற்றாண்டு விழா அரங்கில், நடந்தது.
இதில், கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு, உணவு தொழில்நுட்பம், கோழியின உற்பத்தி தொழில்நுட்பம், முதுநிலை பட்டயம் படித்த, 650 பேர்களுக்கு, பல்கலை வேந்தரும், கவர்னருமான பன்வாரிலால் புரோஹித், பட்டங்களையும், பதக்கங்களையும் வழங்கினார்.
நிகழ்ச்சியில், சென்னை பல்கலையின் முன்னாள் துணை வேந்தரும், ராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் முதல்வருமான, ச.ப.தியாக ராஜன் பேசியதாவது:மாணவர்கள் தனித் திறன்களை வளர்த்து கொள்ளுங்கள். 21ம் நுாற்றாண்டில், உங்களின் தனித் திறன்களையே, மற்றவர்கள் எதிர்நோக்கியுள்ளனர். தற்போது, பல்வேறு உயர்கல்வி துறைகளில், 50 - 70 சதவீதம் பேர், வேலைவாய்ப்பு இல்லாமல் உள்ளனர்.
மேலும், தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பும் இல்லை. எனவே, வேலையாட்களாக இல்லாமல், தொழில் முனைவோராக உருவாக முயற்சி செய்யுங்கள்.இவ்வாறு, அவர் பேசினார்.கால்நடைத் துறை அமைச்சர், ராதாகிருஷ்ணன், பல்கலை துணை வேந்தர், பாலச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
'விரும்பி படித்தால்எதையும் சாதிக்க முடியும்'கால்நடை மருத்துவம் படித்து, 13 பதக்கங்கள் பெற்ற, மாணவி திவ்யா கூறியதாவது:நான் பள்ளியில் படிக்கும் போதே, கால்நடை டாக்டராக வேண்டும் என்பது லட்சியமாக இருந்தது. எனக்கு, விலங்குகளை பிடிக்கும்; விலங்குகளுக்கு சேவையாற்றுவது விருப்பமான ஒன்று. இதனால், என்னால் சாதிக்க முடிந்தது. கால்நடை துறை படிப்பை விரும்பி படியுங்கள்; அடுத்தவரின் விருப்பத்திற்காக படிக்காதீர்கள்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X