தமிழ்நாடு

எளிமையாக்கப்படுமா?வீட்டுமனைகள் அனுமதி பெற நடைமுறை...கடலூர் மாவட்டத்திற்கு அலுவலகம் தேவை

Added : டிச 07, 2018
Advertisement
 எளிமையாக்கப்படுமா?வீட்டுமனைகள் அனுமதி பெற நடைமுறை...கடலூர் மாவட்டத்திற்கு அலுவலகம் தேவை

கடலுார்:
நகர, ஊரமைப்பு திட்டக்குழுமத்தில் இதுவரை அனுமதி பெறாத மனைகள் அனுமதி பெறுவதற்கான நடைமுறையை எளிமைப்படுத்த வேண்டும்.நாட்டில் மக்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதற்கு ஏற்றவாறு குடும்பங்கள் பிரிந்து தனித்தனி குடும்பங்களாக அதிகரித்து வருகின்றன. அதனால் அவர்களுக்கு வசிப்பிடத்திற்கு வீட்டு மனை அவசியமாகிறது.இதற்கு முன்பு வீட்டுமனைகள் வரையறையின்றி பிரிவுகள் செய்து விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது நகர, ஊரமைப்பு திட்டக்குழுமத்தில் அனுமதி பெறாமல் வீட்டு மனைகள் விற்பனை செய்யக் கூடாது என கடந்த 2016ம் ஆண்டு அக்டோபர் 20ம் தேதி முதல் கிரய பத்திரப்பதிவு செய்வது நிறுத்தப்பட்டுவிட்டது.இதன்காரணமாக பத்திரப்பதிவு அலுவலகங்களில் ஆவணங்கள் பதிவு பாதியாக குறைந்தது. ஆனால், லே அவுட்களில் வாங்கிய மனைகள் மீண்டும் விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.புதிய லே அவுட் போடுபவர்கள் சாலை, பொது இடத்திற்காக 35 சதவீதம் இடம் ஒதுக்க வேண்டும். அவ்வாறு ஒதுக்கீடு செய்துவிட்டு ஒரு சதுர மீட்டருக்கு நகராட்சியாக இருந்தால் 310 ரூபாயும், ஊராட்சியாக இருந்தால் 55 ரூபாயும் செலுத்த வேண்டும்.இதுவரை அனுமதி பெறாத வீட்டு மனைகளும் நகர ஊரக திட்டக்குழுமத்தில் அனுமதி பெற ஆன்-லைனில் 500 ரூபாய் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இந்த வாய்ப்பும் கடந்த நவம்பர் 16ம் தேதியுடன் முடிந்தது.ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் விழுப்புரத்தில் உள்ள நகர, ஊரமைப்பு உள்ளூர் திட்டக்குழுமத்தில் அனுமதி பெற்று அந்த நகலை அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கொடுக்க வேண்டும். அந்த உத்தரவை ஏற்றுக்கொண்டதாக மீண்டும் ஒரு உத்தரவை பெற்று பதிவுத்துறை அலுவலகத்தில் சமர்ப்பித்தால்தான் மனைகள் பதிவு செய்ய முடியும்.கடலுார் மாவட்டத்தில் உள்ள மனைகள் அனைத்தும் கடலுார் உள்ளூர் திட்டக்குழுமத்தில் அனுமதி பெற விழுப்புரம் உதவி இயக்குனர் அலுவலகத்தையே நாட வேண்டியுள்ளது. கடலுாரில் உள்ள அலுவலகத்தில் கடலுார் நகராட்சி மற்றும் சில கிராமங்களைத் தவிர மாவட்டம் முழுவதும் விழுப்புரம் செல்ல வேண்டியுள்ளது.உதவி இயக்குனர் அதிகாரியும் இரு மாவட்டத்திற்கும் ஒரே அதிகாரியாக இருப்பதால் அரசு கோப்புகள் தேங்கும் நிலை உள்ளன. எனவே, வீட்டு மனைகள் அனுமதி பெற அரசுக்கு செலுத்த வேண்டிய தொகையை எளிமையாக்கினால் பொதுமக்கள் அனைவரும் இந்த நடைமுறையை பின்பற்ற இயலும்.இரு மாவட்டங்களில் நடையாய் நடந்து அனுமதி பெறுவதற்கு அவ்வளவாக பொது மக்கள் முன் வருவதில்லை. எனவே கடலுார் மாவட்டத்திற்கென ஒரு உதவி இயக்குனர் அலுவலகம் செயல்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்பது மாவட்ட மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X