சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மணல் கடத்தல் 19 பேர் கைது

Added : டிச 07, 2018
Advertisement

நெல்லிக்குப்பம்:நெல்லிக்குப்பம், விருத்தாசலம், சேத்தியாத்தோப்பு மற்றும் பெண்ணாடம் பகுதிகளில் அனுமதியின்றி மணல் கடத்திய 19 பேரை போலீசார் கைது செய்தனர்.நெல்லிக்குப்பம் அடுத்த விஸ்வநாதபுரத்தில் பெண்ணையாற்றில் இருந்து பைக் மூலம் சட்டவிரோதமாக மணல் கடத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் சப் இன்ஸ்பெக்டர் கணபதி தலைமையிலான போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது பைக் மூலம் மூட்டைகளில் வைத்து மணல் கடத்திய அதே பகுதியைச் சேர்ந்த கமலக்கண்ணன், 32; வேம்பன், 56; அன்புவேல், 36; ஆறுமுகம், 34; சந்தோஷ், 34; பாலு, 38; ஆனந்தன், 45; உத்திரவேல், 34; கிருஷ்ணமூர்த்தி, 32; அய்யனார், 36; மனோகர், 37; வினோத், 28; ஆகியோரை கைது செய்து 12 பைக்குகள் மற்றும் மணலை பறிமுதல் செய்தனர்.இதேபோன்று, ஓட்டேரி பகுதியில் கெடிலம் ஆற்றல் மாட்டு வண்டியில் மணல் கடத்திய ராஜா, 30; ராஜ்குமார், 24; ஆகியோரை போலீசார் கைது செய்து இரண்டு மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர்.விருத்தாசலம்: விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் சேகர் மற்றும் போலீசார் நேற்று காலை 8:30 மணியளவில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அனுமதியின்றி மணல் ஏற்றிச் சென்ற மணலுார் குணசேகரன், 45; பன்னீர்செல்வம், 55; ஆகிய இருவரையும் கைது செய்து மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர்.சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு போலீசார் நேற்று மாலை ராஜிவ்காந்தி சிலை அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கும்பகோணம் பகுதியிலிருந்து வந்த லாரியை நிறுத்தி விசாரித்ததில், அரியலுார் மாவட்டம், அணைக்கரை அடுத்த நடுவேம்புக்குடி கிராமத்தைச் சேர்ந்த ராஜா, 38; என்பதும், அணைக்கரை கொள்ளிடம் ஆற்றிலிருந்து லாரியில் சாக்கு மூட்டைகளில் மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது. உடன், ராஜாவை கைது செய்து லாரியை பறிமுதல் செய்தனர்.பெண்ணாடம்: பெண்ணாடம் இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு தலைமையிலான போலீசார் நேற்று மாலை 4:00 மணியளவில் ரோந்து சென்றனர். அப்போது, செம்பேரி வெள்ளாற்றில் அனுமதியின்றி மணல் ஏற்றிச் சென்ற அரியலுார் மாவட்டம், ஆதனக்குறிச்சியைச் சேர்ந்த சங்கர், 30; கிருஷ்ணமூர்த்தி, 44; இருவரை கைது செய்து, மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X