புனே தொகுதியில் பா.ஜ., சார்பில் களமிறங்குகிறார் நடிகை மாதுரி?

Updated : டிச 07, 2018 | Added : டிச 07, 2018 | கருத்துகள் (27)
Advertisement
புனே தொகுதி,பா.ஜ., களமிறங்குகிறார்,நடிகை,மாதுரி?

மும்பை: அடுத்தாண்டு நடக்க உள்ள லோக்சபா தேர்தலில், மஹாராஷ்டிர மாநிலத்தின், புனே லோக்சபா தொகுதியில், பிரபல பாலிவுட் நடிகை மாதுரி தீட்சித்தை களமிறக்க, பா.ஜ., முடிவு செய்து உள்ளதாக, தகவல்கள் வெளியாகி உள்ளன.

அடுத்தாண்டு ஏப்ரல் - மே மாதங்களில், லோக்சபா தேர்தல் நடக்க உள்ளது. இதற்கு, பா.ஜ., - காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தயாராகி வருகின்றன. இந்நிலையில், மஹாராஷ்டிர மாநிலத்தில் உள்ள, புனே லோக்சபா தொகுதியில், 2019 தேர்தலில், பிரபல பாலிவுட் நடிகை மாதுரி தீட்சித், 51, என்பவரை, பா.ஜ., சார்பில் களமிறக்க, அக்கட்சி முடிவு செய்துள்ளதாக, தகவல்கள் வெளியாகி உள்ளன.

தற்போது, புனே லோக்சபா தொகுதியின், எம்.பி.,யாக, பா.ஜ.,வைச் சேர்ந்த, அனில் ஷிரோல் உள்ளார்.இது குறித்து, மஹாராஷ்டிர மாநில, பா.ஜ., மூத்த தலைவர் ஒருவர் கூறியதாவது: மும்பையில், பாலிவுட் நடிகை மாதுரி தீட்சித்தை, பா.ஜ., தலைவர் அமித் ஷா, சமீபத்தில் சந்தித்து பேசினார். அப்போது, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு செயல்படுத்திய, வளர்ச்சித் திட்டங்கள் குறித்து எடுத்துரைத்து, அவரிடம், பா.ஜ.,வுக்கு ஆதரவு கோரினார்.

அடுத்தாண்டு நடக்க உள்ள லோக்சபா தேர்தலுக்காக, ஒவ்வொரு தொகுதியிலும் போட்டியிட உள்ள வேட்பாளர்களின் பட்டியலை தயார் செய்யும் பணி தற்போது, முழு வீச்சில் நடக்கிறது. இந்த பட்டியலில், புனே லோக்சபா தொகுதி யில் போட்டியிட, பாலிவுட் நடிகை மாதுரி தீட்சித்தின் பெயரும் சேர்க்கப்பட்டு உள்ளது. இந்த தொகுதியில், அவருக்கு செல்வாக்கு அதிகம் உள்ளதால், நிச்சயம் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார். தேசாப், சாஜன், ஹம் ஆப்கே கெயின் கோன் போன்ற ஹிந்தி படங்களில் நடித்து, பிரபலமானவர் மாதுரி தீட்சித்.

Advertisement




வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vel - Chennai,இந்தியா
07-டிச-201811:16:41 IST Report Abuse
Vel அம்மணி மேடைக்கு வந்து பழைய ஞாபகத்தில் ஏக்... தோ... தீன்.......என்று பாடத்தொடங்கி பாரா.... தேரா..... என்றால் எதிர்கட்சி க்கேறாகி மயங்கி விடுவார்.
Rate this:
Share this comment
Cancel
Ganesan - Karaikudi,இந்தியா
07-டிச-201810:42:11 IST Report Abuse
Ganesan ஏன் இந்த வேண்டாத வேலை. ஏதோ அஞ்சுக்கும் பத்துக்கும் ஆட்டம் போட்டோமா? காசு வாங்கினமானு இல்லாம...
Rate this:
Share this comment
Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா
07-டிச-201813:42:13 IST Report Abuse
Chowkidar NandaIndiaஅதானே, நன்றாக கேட்டுக்கொள்ளுங்கள் ராஜ், சிரஞ்சீவி, விஜயசாந்தி, வெத்து ரம்யா, குசுபு, நெப்போலியன், சந்திரசேகர்......
Rate this:
Share this comment
Ganesan - Karaikudi,இந்தியா
07-டிச-201818:24:58 IST Report Abuse
Ganesanசினிமா காரர்கள் சினிமாவுடன் இருந்தால் நல்லா என்று சொன்னேன். இது ஒரு குத்தமா? இங்கு தமிழ்நாட்டில் தான் தாங்கமுடியால அதைத்தான் சும்மா சொன்னே, குதம்மா ராஜா....
Rate this:
Share this comment
Cancel
தோலுரிப்பவன் - TAMIL NADU,இந்தியா
07-டிச-201810:41:44 IST Report Abuse
தோலுரிப்பவன் கஜா புயலால் பாதிக்க பட்ட எம் மக்களை பார்க்க நேரமில்லை சோப்ரா வின் திருமணவைபவத்தில் கலந்து கொண்டு சிறப்பிக்க நேரம் உள்ளது தமிழ் மக்களே இவரகளை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X