தமிழ்நாடு

கட்டண உயர்வு இன்று நடக்கும் பேச்சில் சுமூக தீர்வு ஏற்பாடுமா?நிட்மா - சிம்கா' நிர்வாகிகளுக்கு அழைப்பு

Updated : டிச 07, 2018 | Added : டிச 07, 2018
Advertisement
  கட்டண உயர்வு இன்று நடக்கும் பேச்சில் சுமூக தீர்வு ஏற்பாடுமா?நிட்மா - சிம்கா' நிர்வாகிகளுக்கு அழைப்பு

திருப்பூர்:தாய் சங்கமான, 'சைமா', நிட்டிங் கட்டணங்களை முழுமையாக அமல்படுத்துவது குறித்து பேச்சு நடத்த அழைப்பு விடுத்ததால், பின்னலாடை துணி உற்பத்தி நிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.கட்டண உயர்வு வழங்க வலியுறுத்தி, நேற்று முன்தினம் மற்றும் நேற்றும், 'நிட்மா -சிம்கா' சங்கத்தினர் இணைந்து, உற்பத்தி நிறுத்த போராட்டத்தை நடத்தினர்.இந்நிலையில், நிட்மா மற்றும் சிம்கா சங்க நிர்வாகிகளின் சிறப்பு கூட்டம், தெற்கு ரோட்டரி ஹாலில், நேற்று நடந்தது.
சிம்கா சங்க தலைவர் விவேகானந்தன் மற்றும் நிட்மா சங்க தலைவர் ரத்தினசாமி தலைமை வகித்தனர். அனைத்து பின்னலாடை தயாரிப்பாளர்கள் கவனத்துக்கு கொண்டும் செல்லும் வகையில் புதிய நிட்டிங் கட்டணத்தை முழுமையாக அமல்படுத்துவது, கட்டண தொகையை பில் தேதியில் இருந்து ஒரு மாத காலத்துக்குள் பெறுவது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.இந்நிலையில், 'சைமா' சங்க துணை தலைவர் கோவிந்தப்பன், பொருளாளார் ராமசாமி மற்றும் இணைச் செயலாளர் தாமோதரன் ஆகியோர், கூட்டத்தில் பங்கேற்றனர். இதனால், இரு சங்கங்களுடன், கட்டண உயர்வு குறித்து பேச்சு நடத்த அழைப்பு விடுத்தனர்.இதற்கு இரு சங்க நிர்வாகிகளும் ஒப்புதல் அளிக்கவே, இன்று (7ம் தேதி) பேச்சு நடத்தப்படுகிறது.
இந்த பேச்சில், ஏற்றுமதியாளர் சங்க நிர்வாகிகளும் பங்கேற்க உள்ளனர். இதனால், இரு தினங்களாக நடந்து வந்த பின்னலாடை துணி உற்பத்தி நிறுத்த போராட்டத்தை கைவிடுவது என தீர்மானிக்கப்பட்டது.இன்று முதல், நிட்டிங் நிறுவனங்கள் வழக்கம் போல் இயங்கும் எனவும், அறிவிக்கப்பட்டுள்ளது. சிம்கா செயலாளர் சிவானந்தன், ஆலோசனைக்குழு சண்முகசுந்தரம், நிட்மா செயலாளர் ராஜாமணி, பொருளாளர் சுப்ரமணியம், லேபர் கமிட்டி பழனிசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X