பொது செய்தி

இந்தியா

மேம்பாலத்தில் எரியாத தெருவிளக்கு கூனிச்சம்பட்டில் விபத்து அதிகரிப்பு

Added : டிச 07, 2018
Advertisement

திருக்கனுார்:கூனிச்சம்பட்டு- மணலிப்பட்டு மேம்பாலம் மற்றும் சாலையில், தெருமின் விளக்குகள் எரியாததால் விபத்துகள் அதிகரித்து வருகிறது. திருக்கனுார் அடுத்த மணலிப்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள தமிழக பகுதிகளை சேர்ந்த பல்வேறு கிராமங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், கூனிச்சம்பட்டு சங்கராபரணி ஆற்று வழியாக திருக்கனுார் மற்றும் புதுச்சேரி பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.இந்நிலையில், சங்கராபரணி ஆற்றின் குறுக்கே கூனிச்சம்பட்டு- மணலிப்பட்டு இடையே உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்பட்டது. இதனையடுத்து, மேம்பாலம் மற்றும் அதன் இணைப்பு சாலைகளில், பொதுப்பணிதுறையின் மூலம் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் தெரு மின் விளக்குகள் அமைக்கப்பட்டன.ஆனால், மேம்பாலம் மற்றும் இணைப்பு சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள தெருமின்விளக்குகள் கடந்த சில மாதங்களாக எரியவில்லை. இதனால், மணலிப்பட்டு கிராமத்தில் இருந்து திருக்கனுார் மற்றும் புதுச்சேரி நகர பகுதிகளுக்கு சென்று இரவு நேரங்களில் வீடு திரும்பும் மாணவர்கள், பெண்கள் மற்றும் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.இரவு நேரங்களில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் அதிகரித்து வருவதால், வாகன ஓட்டிகள் அச்சமடைந்து வருகின்றனர். எனவே, கூனிச்சம்பட்டு- மணலிப்பட்டு மேம்பாலம் மற்றும் இணைப்பு சாலையில் எரியாமல் உள்ள தெருமின் விளக்குகளை சரிசெய்ய பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X