பொது செய்தி

இந்தியா

என்.ஐ.டி.,தொழில் நுட்பக்கழகத்தில் பேராசிரியர்களுக்கு பயிலரங்கம்

Added : டிச 07, 2018
Advertisement
 என்.ஐ.டி.,தொழில் நுட்பக்கழகத்தில்  பேராசிரியர்களுக்கு பயிலரங்கம்

காரைக்கால்:காரைக்கால் தேசிய தொழில்நுட்பக்கழகம் சார்பில், பயிலரங்கம் நடைபெற்றது.காரைக்கால் தேசிய தொழில்நுட்பக்கழகம் சார்பில், உதவி பேராசிரியர்களுக்கு ஆசிரியர் மேம்பாட்டு திட்டம் மூலம் 4ம் தேதி துவங்கிய பயிலரங்கம் வரும் 9ம் தேதி வரை நடைபெறுகிறது. தேசிய தொழில்நுட்பக்கழக இயக்குநர் முனைவர் சங்கரநாராயணசாமி தலைமை தாங்கி, துவக்கி வைத்தார்.தேசிய தொழில்நுட்ப ஆசிரியர்கள் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் வல்லுநர்கள் குழு ரேணுகாதேவி, ஷண்முகநீதி, ஜனார்த்தனன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.புதுச்சேரியின் புதிய உதவி பேராசிரியர்களுக்கு கருத்துரை வழங்கப்பட்டது. கற்றல் கொள்கைகளை புரிந்து கொள்வது, இளம்பருவ மாணவர்களின் உளவியல் பண்புகளை புரிந்து கொள்வது, அடையாளம் காணப்பட்ட தலைப்பிற்கான கற்பித்தலின் நோக்கங்களை உருவாக்குவது, திட்டங்களை தயாரிப்பதற்கு கற்பித்தலுக்கான பல்வேறு பயிற்று முறைகளை திறம்பட பயன்படுத்துவது, கலப்பு வகுப்பறை திட்டத்தை முறையாக பயன்படுத்துவது குறித்து மாணவர்களுக்கு விளக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஒருங்கிணைப்பளர் பேராசிரியர் ஹரிகோவிந்தன்,செந்தில்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X